நம் தொழிலுக்கு உதவி புரிபவற்றுள் ஒன்றான ப்ளாகர் (Blogger), கூகுள் வழங்கும் இன்னொரு இலவச சேவையாகும். இது ஒரு வலைத்தளம் போல் இயங்கக் கூடியது.. தொழில் தவிர்த்து உங்கள் படைப்புகளை வெளியிடக் கூட ப்ளாக் உருவாக்கலாம்.
தொழில் வலைத் தளத்தில் பொருட்கள், படங்கள், விலைப்பட்டியல், தள்ளுபடிகள், தொடர்பு முகவரி போன்றவை இருக்கும். பொருட்கள் தொடர்பான பெரிய கட்டுரைகளை வலைத் தளத்தில் வெளியிடுவதை விட ப்ளாக்-ல் வெளியிடலாம் மற்றும் தொழில் தொடர்பான கூடுதல் செய்திகளை வெளியிட ப்ளாகர் சிறந்த இடம் ஆகும்.
வலைத்தளம் உருவாக்க டெவலப்பர் உதவி தேவைப்படும். ஆனால் ப்ளாக்-ஐ நாமே உருவாக்கி விடலாம். இதற்கு வலைத் தள மொழி தேவை இல்லை. உங்கள் ஜிமெயில் முகவரி கொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
blogger.com என்ற வலைத் தளத்திற்கு சென்று உங்கள் ஜிமெயில் முகவரி கொடுத்து லாகின் செய்யுங்கள் Blogger profile என்ற காலம் தோன்றும் இங்கு நீங்கள் கொடுக்கும் பெயர் அனைத்து கட்டுரைகளின் அடிப் பகுதியில் தோன்றும். அதனால் எதற்காக ப்ளாக் உருவாக்குகிறீர்களோ அதற்கு ஏற்ற பெயர் அல்லது உங்களுக்கு ஏற்ற பெயர் கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
ப்ளாக் எந்த வித கோடிங்(Coding) இல்லாமல் உருவாக்கலாம் என்பதால். அங்கு தயாராக மாதிரி டெம்ப்ளேட்கள்(Template) இருக்கும். அவற்றில் இருந்து உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது மாற்றியும் கொள்ளலாம்.
டெம்ப்ளேட் தேர்ந்து எடுத்த பிறகு உங்களுக்கான பிளாக் தயாராகி விடும். இடது பக்கத்தில் நிறைய டேப்-கள் (tabs) இருக்கும் அதில் செட்டிங் பகுதிக்கு சென்று ப்ளாக் தலைப்பு மற்றும் ப்ளாக் பற்றி சிறு அறிமுகம் கொடுங்கள். ஜிமெயில் முகவரி கொண்டு உள்ளே வரும் பொழுதும் ப்ளாக் தலைப்பு கொடுக்க முடியும். பிறகு அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் செட்டிங் (Setting) பகுதியில் மாற்றிக் கொள்ள முடியும்.
HTTP / HTTPS :
செட்டிங் பகுதியில் http / https என்ற இடத்தில் https என்பதற்கு சரி (yes) கொடுங்கள். அதாவது https என்பதில் கடைசி எழுத்தான “S” பாதுகாப்பை (Security) குறிக்கிறது. https என்பது உங்கள் வலைத் தளம் அல்லது ப்ளாக் போன்றவற்றில் இருந்தால் அந்த வலைத் தளம் அல்லது ப்ளாக் பாதுகாப்பானது என்று பொருள். படிப்பவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். அதனால் இங்கு https என்பதை தேர்வு செய்யுங்கள்.
வலைத்தளத்திற்கு https வேண்டும் என்றால் அதற்கு ஆண்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இவற்றை SSL certificate என்று அழைப்பார்கள்.
முக்கியமான சில வலைத்தளங்களைப் அவை பெற்று இருப்பதைப் பார்க்க முடியும்.https என்பதற்கு முன் சிறு பூட்டு படம் இருக்கும். உதாரணமாக தமிழ் கம்ப்யூட்டர் என்ற வலைத்தளத்தில் பாருங்கள் சிறு பூட்டு (lock) அடுத்து https என்பது இருப்பதை பார்க்கலாம்.
https என்பது முக்கியமானது என்றாலும் சாதாரணமான static வலைத்தளத்திற்கு தேவையில்லை.ecommerce போன்ற dynamic வலைத்தளத்திற்குத்தான் தேவை. இவற்றை வலைத்தளத்தை உருவாக்கும் பொழுது வாங்க வேண்டும் என்று இல்லாமல் எப்பொழுது வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம்.
Also read:ஆன்லைனில் ட்ரேட்மார்க் பதிவு செய்வது எப்படி?
ப்ளாகில் கட்டுரை அதற்கு ஏற்ற படங்கள், வீடியோ போன்றவை பதிவேற்ற முடியும். மிக முக்கியமாக படங்கள் மற்றும் வீடியோக்கள் நகல் எடுக்கப்படாமல் நமது சொந்த படங்களாகவோ, வீடியோக்களாகவோ இருந்தால் சிறந்தது ஆகும். மற்றவர்கள் பதிவு இட்டு இருக்கும் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்துவதாக இருந்தால் அவரிடம் ஒப்புதல் வாங்கி பயன்படுத்தலாம்.
இணையத்தில் ஏராளமாக படங்கள் உள்ளட. அவற்றில் பதிப்பு உரிமை இல்லாதவற்றை நாம் பயன்படுத்த தடை இல்லை. பதிப்பு உரிமை உள்ளவற்றைப் பயன்படுத்த, அவர்களிடம் அனுமதி வாங்கியே பயன்படுத்த வேண்டும். சில நிறுவனங்கள் படங்கள், வீடியோக்களை விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களிடன் உரிய கட்டணம் செலுத்தினால் அந்த படங்களையோ, விடியோக்களையோ நம்மை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பார்கள்.
இவ்வாறே அரிய செய்திகளையும், கட்டுரைகளையும் விற்பனை செய்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் படங்கள் பயன்படுத்தும் பொழுது சரிபார்த்து பயன்படுத்த வேண்டும். ஆனால், காப்பிரைட் இல்லாதவையும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.
ஒரு ஜிமெயில் முகவரிக்கு ஒரு பிளாக் மட்டுமே உருவாக்க முடியும். புதிய ப்ளாக் உருவாக்க அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட ப்ளாக் வேண்டும் என்றால் புதிய ஜிமெயில் முகவரி கொடுத்து உருவாக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு ப்ளாக் முக்கியமானதாகும். வாரம் ஒரு கட்டுரையாவது இதில் பதிவு செய்தால் தொடர்ந்து படிப்பார்கள். பல மாதங்களுக்கு ஒரு கட்டுரை என்று எழுதினால் ப்ளாக்குக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள். தொடர்ந்து கட்டுரைகள், படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் ப்ளாக்கில் எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள், எந்த கட்டுரையை படிக்கிறார்கள், எந்த நாட்டில், மாநிலத்தில், ஊரில் இருந்து படிக்கிறார்கள், ஆண்-பெண் எத்தனை பேர் ப்ளாக்கிற்கு வருகை தருகிறார்கள் என்பதை அறிய கூகுள் அனலிடிக்ஸ் பயன்படுத்தலாம். தொடரின் மூன்றாவது கட்டுரை (https://valar.in/4609/how-to-you-google-analytics) கூகுள் அனாலிடிக்ஸ் எப்படி பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்த்தோம். அதே போல் உங்கள் ப்ளாக்கிற்கு கூகுள் அனலிடிக்ஸ்tracking id பயன்படுத்தி பார்வையாளர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளுங்கள்.
ப்ளாக்கரில் கூட பார்வையார்களின் எண்ணிக்கையை பார்க்க முடியும். ஆனால் அதிகப்படியான தகவல் அனாலிடிக்ஸ் வழங்குவதால், அனாலிட்டிக்சை பயன் படுத்திக் கொள்ளலாம்.
Also read: கூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4
ப்ளாக்கர் கூகுள் நிறுவனத்தின் இலவச சேவை என்பதால் அனைவரும் இதில் இணைந்து கொள்ள முடியும் . தொழில் செய்யும் அனைவரும் தங்கள் தொழில் தொடர்பான செய்திகளை இதில் வெளியிட்டு வந்தால் வாடிக்கையா ளர்களாலும், உங்கள் நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் புதியவர்களாலும் உங்கள் நிறுவனத்தின் செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
– செழியன். ஜா