Latest Posts

கார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள்

- Advertisement -

பயன் கிடைக்கக் கூடிய வகையில் பணியாற்ற ஒரு மேலாளர் கவனிக்க வேண்டியவை:


குறுகிய கால, நீண்டகாலக் குறிக்கோள்கள் குறித்து மிகவும் தெளிவு.


குறிக்கோள்களை அடைய வளமைக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கான திட்ட மும், வரவு-செலவு அளவீடும்.


இத்தகைய திட்டங்களைச் செயற் படுத்துவதற்கும் தேவையான பொறுப்பும், அதிகாரமும்.


பணிநிகழ்வு குறித்துத் தகவலளிக்கப் போதுமான கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கல். இதனால் சரியான நேரத்தில் உரிய திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏது வாயிருக்கும்.


இத்தகைய அளவீடுகள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. இவை அனைத்துமே விளக்கப்பட்ட குறிக் கோள்களை அடைவது குறித்தும், விளைவுகளைக் சாதிப்பது குறித்தும் தொடர்புடையவையாகும். தேவையானது சாதனையே தவிர நடவடிக்கையல்ல.


நிருவாகத் திறமையினை உள்ளீட்டுக் காரணிகளைக் கொண்டோ பணியமைப்பின் பல்வேறு பகுதிகளின் திறமையைக் கொண்டோ அளவிடுவதில்லை. மனித வளமையின் பங்கீடு, பொருள் வளப் பயன்பாடு, பணியாளர் நிருவாகம், நிதி நிருவாகம் ஆகியவற்றின் தந்திர நிலை எல்லாமே சிறப்பான பங்கு வகிக்கின்றன என்றாலும், நிறுவனம் எந்தக் காரணத்திற்காக இயங்குகிறதோ அந்தக் காரணத்தை முன்னிட்டு அவை இயக்குவிக்கப்பட்டால்தான் திறமையான நிருவாகமாகக் கருதப்படும்.


நீண்ட காலமாகப் பலர் இத்தகைய உள்ளீடுகளை அவை தத்தமக்குள் முடிவுற்றுவிடக் கூடியவை என்று கருதியே அவற்றின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வந்தார்கள்.


குறிக்கோள்கள் தேவைப்பட்ட விளை வுகளை அடையாளப் படுத்துவனாகும். இவற்றை அடைவதற்கான உள்ளீடுகளே வளமைக் கூறுகளாகும்.


அதே சமயத்தில், நிறுவனமானது குறிக்கோள்கள் மாறக் கூடியவை, மாறுபவை என்பதைப் புரிந்துகொண்டு, கால நீட்டிப் பின்றி, அதற்கேற்றவாறு மாறுதல்களை எதிர்கொள்ளக் கூடியதாக, வளைந்து கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.


உற்பத்தி என்பது விளக்கப்பட வேண்டும். முடியுமானால் அளவீடு உடையதாக ஆக்கப்படவேண்டும். புள்ளி விவரம் எப்போதுமே பொருத்தமுடையதாக அமையாவிட்டாலும் அளவீடுகள் இன்றி யமையாதவை. உற்பத்தி நடவடிக்கைகள் அளவிடப்படக் கூடியனவாகவும், உற்பத்தி என்பது அளவிடப்பட இயலாத்தாகவும் சில சமயம் அமையலாம். இது பின்னும் குறிக்கோள்களை அமைப்பதைப் பொறுத்ததாகும். ஒரு குறிக்கோளைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக் காவிட்டால் உற்பத்தி என்பதும் இத்தகைய தெளிவற்ற நிலையில்தான் கணக்கிடப்படும்.


தனியார் துறை பொருளாதாரத்தில் ஒருவர் பிழைத்திருக்க வேண்டுமென்றால் இலாபம் அதிகம் ஈட்டுவதை நிலையாக எதிர்பார்த்து அவர் செயல்பட வேண்டும் அல்லது அதே அளவு இலாபத்தையாவது தொடர்ந்து பெற முயலவேண்டும். இதற்குக் கீழ்க்கண்ட நான்கு வழிகளில் ஒன்றை அவர் பின் பற்றியாக வேண்டும்:


உற்பத்திச் செலவைக் குறைத்தல், தரத்தையோ விலையையோ பாதிக் கக்கூடாது.
விலைகளை உயர்த்துதல், விற்பனை அளவைக் குறைக்காத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும்.


பொருள் கலவைத் தரத்தை உயர்த்துதல், அதே அடிப்படை வளங்களைப் பயன் படுத்தி அதிகமாகச் சாதித்தல்.


விற்பனை அளவை உயர்த்துதல், நிலையானச் செலவினங்களை உயர்த் தக்கூடாது.


இவை போன்றே பொதுத் துறையில் நீடுத்திருக்கவும் ஒருவர் அதிகத் திறமையான விளைவுகளைச் சாதிக்க வேண்டும். குறிப்பிட்ட குறிக்கோள்களை நோக்கி முன்னேற வேண்டும். கிடைத்துள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதே சமயம் உற்பத்திச் செலவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளைவுகளுக்குப் பொறுப் பேற்றல் என்பதும் இங்கு இணையாகப் பொருத்தமுடையமாகும். இரு துறைகளிலுமே வெற்றிக்கு முதல் தேவை, தகுதி வாய்ந்த நிருவாகமாகும்.


ஒரு மேலாளர் தம் பதவிக்கு உரிய உற்பத்தித் தேவைகளை, அதாவது உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு நிறைவு செய்கிறார் என்பனைக் கடுமையாகச் சீர் தூக்க வேண்டும். ஓரு நிறுவனமானது ஏராளமான வளமையினை அவருக்காகவும் அவருடைய தொழிற்பகுதி அல்லது பகுதிகளுக்காகவும் முதலீடு செய்துள்ளது. ஆகவே, இந்ந முதலீட்டுக் உரிய வருவாய் நிலையானது என்று உறுதிப்படுத்தினால் தான் அவற்றின் நீட்டிப்பு குறித்து நியாயப்படுத்த முடியும்.


அவ்வாறே மேலாளர், பணியர்த்தப் பட்டுள்ள ஒவ்வொரு பணியாளரும் முதலீட்க்கு உரிய வருவாயை அளிக்கிளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.


குறிகோள்களை அடைவதற்கு ஒவ்வொரு பதவியும் எந்த விதத்தில் உண்மையிலேலே உதவியாய் இருக்கிறது?
ஒரு பதவியை உருவாக் கவில்லையென்றால் அல்லது நீக்கி விட்டால் நிறுவன விளைவாக்கத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
ஒருவரை அதிக விளைவுக்குரியவராக மாற்ற என்ன தேவைப்படும்?
இது நிகழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
எப்படி? எப்போது?


ஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான பொருளாதாரச் செயற்பாடு தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு மேலாளர் அடுத்தடுத்து நிகழக்கூடய நிகழ்ச்சி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்முடைய திறமையால் அவற்றை எல்லாம் அல்லது அவற்றுள் ஒன்றைச் சமாளிக்கக் கூடும் என்பதை உணர்ந்திருக்கவேண்டும்.


இந்த இடத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருள்களைக் கொண்ட நான்கு சொற்களை விளக்குவது அவசியமாகிறது.


பொறுப்புகள்:
நீங்கள் செய்து முடிக்கவேண்டய பணிகளும், நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவைகளும்.


அதிகாரம்:
உங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் திறன்.


உங்களுடைய பணி ஆலோசனை வழங்குவதாகவோ பரிந்துரை செய்யக் கூடயதாகவோ இருந்தால் தவிர, உங்கள் பொருப்புகளும் அதிகாரங்களும் எப்போதும் சமன்பாட்டுடன் இருக்கவேண்டும். இல்லை யெனில், மற்றது இல்லாமல் இரண்டுமே விளைவு பயக்கக் கூடியனவாக அமையாது.


கணக்குக் கொடுத்தல் என்பதற்கும் தனி அளவீடு உண்டு. அதன் பொருளாவது மொத்தச் சாதனைக்கும் பொறுப்பு வகிப்பதாகும். ஓரு மேலாளர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்குக் கொடுக்க வேண்டியவராகிறார்
அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் அறியும் போது தேவைப்பட்ட தரம்.


அவருடைய விளைவுகள் எவை என்பனவற்றை அவர் அறியும் போது அவை எப்படி அளவிடப்படுகின்று அல்லது சீர் தூக்கப்படுகின்று என்பது.


அவருடைய விளைவுகளைப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிகாரமும், வளங்களும் அவரிடம் உள்ள போது நடவடிக்கை எடுக்க வசதிகள். இவற்றுள் ஏதாவது விட்டுப்போயிருந்தால் கணக்குக் கொடுப்பதற்கு அவரைப் பொறுப்பாளியாக்க முடியாது.


மேற்பார்வையாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் மேலாளர் பொறு ப்பையும் அதிகாரத்தையும், கணக்குக் கொடுக்கும் கடமையையும் வழங்கி அதிகாரப்படுத்தும்போது இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும்.


உற்பத்தித் திறன் என்பதை உற்பத்தியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. உற்பத்தித்திறன் என்பது எல்லா வளமைக் கூறுகளின் உள்ளீட்டுக்கும், சாதிக்கப்படும் உற்பத்திக்கும் இடையே உள்ள வீத அளவைக் காட்டுவதாகும். கையிலுள்ள வளமைக் கூறுகளைக் கொண்டு அதிக உற்பத்தியைக் கூட்டுவதோ குறைந்த அளவு வளமைக் கூறுகளைக் கொண்டு அதே அளவு உற்பத்தியைச் சாதிப்பதோ அளவீடாக அமையலாம். இத்தகைய வளமைக் கூறுகள் மனிதச் சக்தி, பணம், பொருள்கள், மற்றப் பலப்பொருள் வசதிகளை உள்ளடக்கியதாகும்.


“உங்களுடைய பணி என்ன என்பதைத் தெளிவாக நீங்கள் அறியாத போது விளைவுகளுக்கு நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரப்படலாமா?” என்ற கேள்விக்கு இது வழிவகுக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு நபருக்கும் ஒரு பணி விளக்கம் இருக்க வேண்டும் என்று வாதிட இடமாகிறது. ஒரு பதிவிக்கான பணி விளக்கம் அதனுடைய குறிக்கோள்களைக் கோடிட்டுக் காட்டி அவற்றை நிறைவேற் றுவதில் ஏற்படும் முன்னேற்றத்தைச் சீர் தூக்கத்தக்கதாய் இருக்க வேண்டும்.


கடமைகளைப் பட்டியலிட்டுவிட்டு, அதனைப் பணி விளக்கம் என்று பெயரிட்டால் அது போதுமானதாகாது. ஏனென்றால் இப்பட்டியல் நடவடி க்கைகளைக் காட்டுவதாக இருக்குமேயன்றி, உற்பத்தியையோ இலக்குகளையோ காட்டு வதாக இருக்காது.


பணியில் ஈடுபட்டவர்கள் இரண்டு வினாக்களுக்கான தகவல்களையும், உறுதிப் பாட்டையும் நாடுகின்றனர்:
“என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறுங்கள்”.
“நான் எப்படிச் செயலாற்றுகிறேன் என்பதைக் கூறுங்கள்”.


ஒரு பணி விளக்கம் பணி செய்பவரிடம் கலந்தாலோ சிக்கப்பட்டு முறையாக உருவாக்கப்பட்டால் இந்தத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அதிலிருந்து குறிப்பிட்ட பயிற்சிக்கான தேவைகளையும் இனங்காண இயலும்.


நிறுவனத்தின் ஒவ்வொரு பணிக்கும் சாதனையை அளவிடக் கூடிய வகையில் தரத்தேவைகள் உள்ளன. இவற்றை இனங்காண்பது தொடக்கத்தில் கடினமாக இருக்கலாம். சிலர் “நான் செய்யும் பணிகளுக்கு அளவீடு செய்ய இயலாது” என்று கூறலாம். அப்படி இல்லை. இந்த பணியை வேறு எப்படித்தான் நிறை வேற்ற இயலும் அல்லது அப்பணி முடிப்பை எப்படித் தான் சீர் தூக்க இயலும்? சாதனைத் தர நிருணயம் என்பது குறிக்கோள் நிறுவுதலுக்கு அடிப்படைக் கூறாகும். மேலாளருக்குத் தேவையான கட்டுப்பாட்டு முனைகளை அது அளிக்கிறது. பணியாளருடைய முனைப்புக்குத் தேவையானவற்றுக்கும் தொடர்ச்சியாக அவருடைய பணியள வீட்டுக்கும் அது வழி வகுக்கிறது.


பணி விளக்கங்கள் முறையாக மறுபரிசீலனை செய்யப்பட்டுத் தேவைப் பட்டால் நடப்புத் தேதிக்கு ஈடு செய்யப்பட வேண்டும். அவை மதி நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டால் உரியவர்களுக்கு இன்றியமையாத மதிப்புடையதாக மட்டும் அல்லாமல் பணியாளர் நிருவாகத்தின் பல்வேறு இனங்களில் மைய அங்கம் வகிப்பதாகவும் அமையும்.


ஒரு முதன்மையான குறிப்பு என்னவென்றால் ஒவ்வொரு தொழிலா ளிக்கும் தெளிவாக விளக்கப்பட்ட பணி அல்லது பணிகள் இருக்கவேண்டும். இது அவருக்கே வழங்கப்பட்டதாகவும், இந்தப் பணித் தொகுப்புக்கு அவரே பொறுப்பாக்கப்படுவார் என்று அவர் உணருமாறும் அமைய வேண்டும்.


இதன் பொருளாவது, இலக்குகள் தெரியக் கூடினவாயும் அடையக் கூடியனவாயும் இருக்கவேண்டும் என்பதாகும் அடைய முடியாத இலக்கை ஒருவர் நிருணயித்தால் நம்பிக்கை இழ்த்தலையும், குழப்பத்தையும் அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இயல்பான நோக்கம் இல்லையெனில் ஊக்கம் என்பது தவிர்க்க முடியாதபடி குன்றிவிடும்.


நிருவாகம் என்பது நீங்கள் மாந்தருடன் செய்யும் பணி; அவர்களுக்குச் செய்யும் பணியன்று.


-கார்டன் பி. ராபி. தமிழில் :பி. சுப்பராயலு

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]