Latest Posts

மறுசுழற்சி ஒன்றே சிறப்பான தீர்வ

- Advertisement -

அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ள வளர்ச்சி மிகுந்த துறை பிளாஸ்டிக் துறை ஆகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களின் பங்கு எப்போதும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்கிறார், சிப்பெட் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட் யூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியின் தொழில் நுட்ப வல்லுநரும், பணி வாய்ப்புப் பிரிவின் பொறுப்பாளரும் ஆன திரு. ஏ. ஜி. எஸ். நீலகண்டன்.

பிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள் குறித்து அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது,

“நெடுவாசல் என் சொந்த ஊர். நான் 1982 -ல் டிப்ளமா மெக்கானிக்கல் படிப்பை முடித்தேன். பின்னர் அடிசன் கட்டிங் என்னும் நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணி புரிந்தேன். பின்னர் சிம்சன் நிறுவனத்தில் டிசைன் பிரிவில் சில ஆண்டுகள் பணி புரிந்தேன். அதன் பிறகு 1987 -ல் சிப்பெட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு இன்றுவரை சிப்பெட்டில் பணி புரிகிறேன்.

எனக்கு டிசைன் மற்றும் மோல்டு ஆகிய இரண்டிலும் ஆர்வமும், பயிற்சியும், அனுபவமும் உண்டு.

சிப்பெட் 1968-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பல துறைகளுக்கான தலைமை அலுவல கங்கள் டெல்லியில் அல்லது வேறு மாநிலங்களிலேயே அமைந்து உள்ளன. சிப்பெட் மட்டுமே சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனம் ஆகும். 2016-ல் சிப்பெட்டை வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி நடைபெற்ற பொது, அந்த முயற்சிக்கு எதிராகப் போராடி, தமிழ் நாட்டு அரசின் மற்றும் அரசியல் தலைவர்களின், ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று சிப்பெட் தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து மாற்ற இருந்ததைத் தடுத்து நிறுத்தனோம். சிப்பெட் மீண்டும் இங்கேயே இருக்கும்படி செய்தோம்.

சிப்பெட், பிளாஸ்டிக் துறையில் பட்டப் படிப்புகளையும், தொழில் பயிற்சிகளையும் வழங்குகிறது. இது பிளாஸ்டிக் துறைக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் சுமார் 29 இடங்களில் சிப்பெட் கிளைகள் உள்ளன.

இங்கே வழங்கப்படும் படிப்புகள் மற்றும் பயிற்சிகளை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை, பிஇ., எம்இ., மற்றும் பிடெக்., எம்டெக்., இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள். இதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அண்மையில் நுழைவுத் தேர்வு எழுதும் முறையையும் கொண்டு வந்து விட்டார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இரண்டாம் நிலை, இளங்கலை மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள். இதில் இளங்கலை டிப்ளமா படிப்புகள் மூன்று ஆண்டுகள். இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சிப்பெட்டின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டாம் நிலையில் பிளாஸ்டிக் டெக்னாலஜி, மோல்டு டெக்னாலஜி, பிளாஸ்டிக் பிராசசிங் மற்றும் டெஸ்டிங் உட்பட பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் உள்ள முதுகலை டிப்ளமா படிப்புகளுக்கு பிஎஸ்சி., வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி யாக இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிக்கலாம்.

சிப்பெட், சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துடன் இணைக்கப் பட்டது ஆகும். மேற்கண்ட இரண்டு நிலையில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில் விதிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப் படுகிறது. மூன்றாம் நிலை, வேலை இல்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூன்று மாத கால மெஷின் ஆப்பரேட்டர் பயிற்சிகள். இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு தங்கும் விடுதி, உணவு வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கைப்பை முதல் செல்பேசி, கார், விமானம், ஏவுகணை வரை அனைத்திலும் பிளாஸ்டிக் உறுப்புகள் நிறைந்து உள்ளன. ஆனால், அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டனவா, என்று கேட்டால் அதற்கான தெளிவான பதில், இல்லை என்பதுதான்.

பல வகையான பிளாஸ்டிக்குகள், பல வகையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல பயன்பாடுகளுக்காக, பல்வேறு தரத்திலும், விலையிலும் உருவாக்கப்படுகின்றன. அதாவது, நாம் கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கான மூலப் பொருகள்களும், ஏவுகணையின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக் மூலப் பொருள்களும் வெவ்வேறானவை.

ஒரு பிளாஸ்டிக் பையின் தடிமன் அளவு 40 மைக்ரானுக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு விதிமுறை வகுத்து உள்ளது. ஆனால், இன்றளவும் நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலும் 20 மைக்ரான் தடிமன் என்ற அளவிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்றன. பிளாஸ்டிக் நிறுவனங்கள், விதிமுறைகளைப் பின்பற்றி அரசு நிர்ணயித்து உள்ள தடிமனுக்குக் குறையாத அளவில் தயாரித்து மக்களுக்கு அளிக்க வேண்டும். அதனை அரசாங்கமும் முறையாக மேற்பார்வை செய்ய வேண்டும். தவறினால் இவ்வாறுதான் நிகழும்.

அந்த தடிமன் குறைந்த பைகளைப் பயன்படுத்திய பின்னர் நாம் என்ன செய்கிறோம்? அவற்றை கண்ட இடங்களில் தூக்கி எறிந்து விடுகிறோம். நாம் 2 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்திய பிறகு நாம் தூக்கி எறியும் நிலையிலும் 50 காசு அளவில் மதிப்பு உடையதாகத்தான் அந்த பொருள் இருக்கிறது.

தூக்கி எறியும் நிலையிலும் பழைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஒரு விலை மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அனைத்து பிளாஸ்டிக் வகைகளையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பைகளையும், பழைய பிளாஸ்டிக் பொருகளையும் உரிய முறையில் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப மறப்பதால்தான் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

அனைத்து தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்து, அவற்றை தரம் பிரித்து முறையாக மறுசுழற்சி செய்தால், சுற்றுச் சூழல் பாதிப்புக்கே இடம் இல்லை. மறுசுழற்சிக்கென ஒரு தனியான அரசு அமைப்பை நிறுவி, இந்த வேலையைச் செய்தால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும், அதே நேரத்தில் சுற்றுச் சூழலும் காப்பாற்றப்படும்.

நம் சந்தையில் கிடைக்கின்ற 70% க்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை ஆகும். நாம் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உரிய முறையில் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் பொருட் களின் அளவு வெகுவாக குறையும்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க முடியாது. ஆனால், முறையாகக் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது ஒரு மிகப் பெரிய துறை. வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் துறை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளாஸ்டிக் துறையில் பட்டம் பெற்று வெளியில் வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 60. இந்திய அளவில் 1200 பேர்கள் வரை பட்டம் பெறுகிறார்கள். பிளாஸ்டிக் மோல்டு, தயாரிப்பு, டிசைன், மார்க்கெட்டிங், சேல்ஸ், ஆர்&டி மற்றும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெவ்வேறு நிலையிலும், தரத்திலும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றன இவற்றில் பல மோல்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருந்தால் தொழில் முனைவோர் அத்தகைய பாகங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம்.
சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க முடியாது. ஆனால், முறையாகக் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது ஒரு மிகப் பெரிய துறை. வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் துறை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளாஸ்டிக் துறையில் பட்டம் பெற்று வெளியில் வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 60. இந்திய அளவில் 1200 பேர்கள் வரை பட்டம் பெறுகிறார்கள். பிளாஸ்டிக் மோல்டு, தயாரிப்பு, டிசைன், மார்க்கெட்டிங், சேல்ஸ், ஆர்&டி மற்றும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெவ்வேறு நிலையிலும், தரத்திலும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றன இவற்றில் பல மோல்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருந்தால் தொழில் முனைவோர் அத்தகைய பாகங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம். சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

– லிங்கம்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news