புதிதாக தொடங்கப்படும் நிறுவன ங்கள் தங்களுக்கென புதிய பிராண்டுகள், லோகோக்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை(Trade Mark) இந்திய அரசின் பேட்டன்ட் அண்டு டிரேட் மார்க் (Patent and Trademark) பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பதிவு செய்து கொள்ளப்படும் வர்த்தக முத்திரையை, பெயரை வேறு நிறுவனங்கள் பதிவு செய்வதில் இருந்து தவிர்ப்பதற்கு இந்த பதிவு உதவும்.
வர்த்தக முத்திரை என்றால் என்ன?
ஒரு நிறுவனத்திற்கான சொற்கள், பெயர்கள், சின்னங்கள், ஒலிகள் அல்லது நிறங்கள் ஆகியவற்றால் ஆன வர்த்தக முத்திரை எனும் ‘பிராண்ட் நேம்’ ஆனது தங்களுடைய உற்பத்திப் பொருளை அல்லது சேவையை பொது மக்களுக்கு பொதுவான குறியீட்டின் அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அல்லது சேவையை வழங்குவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. அதையே வர்த்தக முத்திரை என்று அழைக்கின்றோம்.
புதிய வர்த்தக முத்திரைச் சட்டம் -1999 என்றும் வர்த்தக முத்திரை விதிகள் 2002 என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இயற்றப் பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
வர்த்தக முத்திரையைப் பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள்
நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடைய பொருளை அல்லது சேவையை எளிதாக அடையாளம் காண உதவுகின்றது. போட்டியாளர்களிடம் இருந்து நம்முடைய சேவை அல்லது உற்பத்திப் பொருளை நம்முடைய வர்த்தக முத்திரைகள் வேறுபடுத்திக் காட்டுகின்றன.
வர்த்தக முத்திரைகளின் வகைகள்:வர்த்தக முத்திரைச் சட்டம், 1999 இன் கீழ் பதிவு செய்யக் கூடிய பல்வேறு வகையான வர்த்தக முத்திரை கள் பின்வருமாறு:-
பொருட்களுக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அடையாளம் காண உதவுகின்றன.
சேவைக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனங்களின் சேவைகளை அடையாளம் ஏற்புகை எண் வழங்கப்படும்.
வர்த்தக முத்திரைச் சட்டம் 1999 -இன் படி தடை செய்வது தொடர்பான விவரங்கள் அடிப்படையில் முழுவதுமாக மறுக்கப்படலாம் அல்லது அனுமதிக்கப்படலாம் என வர்த்தக முத்திரை அமைப்பு தீர்மானிக்கின்றது. அதன் பிறகு, இந்த வர்த்தக முத்திரை தொடர்பான ஆய்வு அறிக்கை ஒரு மாதத்திற்குள் அளிக்கப்படும்.
அந்த ஆய்வறிக்கையின் படி இந்த விண்ணப்பம் ஏற்கப்படுகின்றது அல்லது மறுக்கப்படுகின்றது அல்லது மறுப்பத ற்கான காரணம் கேட்கும் அறிவிப்பு அளிக்கப்படுகின்றது. அவ்வாறு காரணம் கோரும் அறிவிப்பு கிடைத்த பின்னர், அதற்கான வாதங்கள் மற்றும் பிரதி வாதங்களைக் கேட்டு, வர்த்தக முத்திரையை மறுத் தல், ஏற்கப்படுதல், குறிப்பிட்ட வரை முறைக்குள் ஏற்கப் படுதல் ஆகியவற்றுள் ஒன்று செயற்படுத்தப் படும். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் மேல் முறையீடு செய்ய முடியும்.
இறுதியாக ஏற்கப்படுவதை மட்டும், வர்த்தக முத்திரை இதழில் ஏற்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் வெளியிடப் படும். வர்த்தக முத்திரை இதழில் வெளியிடப் பட்ட நிலையில் மறுப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனில், அந்த வர்த்தக முத்திரையானது பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
– முனைவர் ச. குப்பன்