பொதுவாக ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரி பொறுப்பிற் கான GSTR-1 எனும் படிவம்;
அவ்வாறே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போதும், வரியே இல்லாது அனுப்பிடும் போதும் வழக்கமான பொரு ளை அல்லது சேவையை பெறும் போதும் நம் கணக்கில் ஜிஎஸ்டி செலுத்திய வரி வரவுக்கான GSTR3B எனும் படிவம்;
ஒரு வியாபார நிறுவனத்திலிருந்து மற்றொரு வியாபார நிறுவனத்திற்கு B2B (business to business) என்றவாறு விற்பனை பட்டி வாயிலாக பொருட்களை அல்லது சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது அதற்காக செலுத்தப் போகும் வரி வரவை (input tax credit (ITC)) குறிப்பிடுவதற்கான GSTR2A எனும் படிவம்;
ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவு, செலுத்தப் போகும் உள்ளீட்டு வரி வரவு ஆகிய படிவங்களை தனித் தனியாக ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டி ற்கும் இந்த ஜிஎஸ்டி இணைய தளத்தில் வழங்குவோம்.
பொருளை அல்லது சேவையை பெறுபவரும், வழங்குபவரும் இந்த படிவங்களை தனித்தனியாக வழங்கும் போது அவைகளை ஒப்பீடு செய்து சரி பார்ப்பது என்பது மிகச் சிரமமான பணியாகும். இதனை எளிதாக்க ஜிஎஸ்டி இணைய பக்கத்தில் இவைகளை ஒருங்கிணைத்து, நாம் கோரும் வரி வரவு வரி செலுத்து வதற்கான விவரங்களை மாதவாரியாக ஒரே அட்டவணையாக காண்பதற்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த அட்டவணையின் வாயிலாக இப்படிவங்களில் ஏதேனும் மாறுதல் உள்ளதாவென ஒப்பிட்டு சரி செய்து கொள்ள முடியும்.
பொதுவாக வழக்கமான ஜிஎஸ்டி செலுத்துபவர் உள்ளீட்டு வரி வரவை GSTR3B எனும் படிவத்திலும், அவ்வாறு செலுத்தப் போகும் உள்ளீட்டு வரி வரவை GSTR2A எனும் படிவத்திலும் பதிவு செய்து மேலேற்றம் செய்வார்கள்.
அதனைத் தொடர்ந்து GSTR-1 எனும் படிவத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு உள்ளீட்டு வரி வரவை கணக்கில் கொள்ள முடியும் என்ற அட்டவணை இந்த புதிய செயலி (ஆப்) வாயிலாக கிடைக்கின்றது. இந்த அட்டவணையை எக்செல் தாளாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
இந்த வசதி ஜிஎஸ்டி – இன் இணைய பக்கத்தில் இதன் Returns எனும் முகப்பு பக்கத்தில் Comparison of liability declared and ITC claimed என்பதன் கீழ் உள்ளது.
-வசந்தகுமாரி