எம்சிஏ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசின் கம்பெனிகளின் விவகாரத்துறை அமைச்சகமானது (Ministry of Corporate Affairs) ‘கம்பெனிகளின் இயக்குநர்களின் நியமனமும் தகுதியும் நான்காவது திருத்தம் விதிகள் 2018’ எனும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது
இதன்படி எம்சிஏ இணைய பக்கத்தில் பதிவு செய்து DIN எனும் இயக்குநரின் பதிவு எண் பெற்ற ஒவ்வொரு இயக்குநரும் DIR3KYC எனும் படிவத்தை எம்சிஏ இணைய பக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 31 இற்குள் வழங்க வேண்டும்.
அதற்கு பிறகு எனில் அபாரதத்துடன் இந்த படிவத்தை வழங்க வேண்டி இருக்கலாம். சில நேரங்களில் கெடு தேதி நீட்டிக்கபடக் கூடும். இவ்வாறு சமர்ப்பிக்க வில்லையெனில் இவருக்கு ஒதுக்கப்பட்ட
DIN எண் செயல்படாமல் நிறுத்தம் செய்யப்பட்டு விடும்.
அதனைத் தொடர்ந்து அந்த இயக்குநர் வேறு எந்தவொரு கம்பெனியிலும் இயக்குநராக செயல்பட முடியாது. எம்சிஏ இணைய பக்கத்தில் பல்வேறு படிவங்களை பதிவேற்றம் செய்திடும் போது செயல்படாத இயக்குநரின் DSC எனும் டிஜிட்டல் கையொப்பத்தினை பயன்படுத்த முடியாது.
குப்பன்