நகரங்களில் பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக சில தொழில்களைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய தொழில்கள் சில..
வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புதல்
ப்போது பெரும்பாலான இல்லங்களில் கணவனுக்கு இணையாக மனைவியும் அலுவலகம் செல்கிறார். அவர் களால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆட்களைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு பொருத்தமான ஆட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
எங்கு சிக்கல் இருக்கிறதோ, அங்குதான் வர்த்தக வாய்ப்பு உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.
வீட்டு வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்களைத் தெரிவு செய்து, இவ்வாறு வேலை ஆட்களை தேடுபவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இதற்கான கட்டணத்த அவல்களிடம் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவை இத்தகைய சேவைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் எப்படி செய்கிறார்களை என்பதை கவனித்து நமது தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாம்.
த்தகைய பணிகளுக்கான குறுகிய காலப் பயிற்சிகளையும் கொடுக்கலாம்.
உரிய சான்றிதழ்களுடன் வரும் மிகவும் நம்பிக்கையான ஆட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அல்லது தேவையற்ற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.
இதற்கென ஒரு இணைய தளத்தைத் தொடங்கி விவரங்களைப் பதிவிட்டால், வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்வார்கள். அல்லது நாளிதழ்களின் வரி விளம்பரங்கள் பகுதியிலும் விளம்பரம் கொடுத்துப் பார்க்கலாம்.
வளர்ப்பு விலங்கு மற்றும் சேவை மையம்
பெருநகரங்களில் தனிக் குடும்பமாக வாழ்வோர் அதிகம். இவர்கள் தங்கள் தகுதிக்கு அடையாளமாகவோ அல்லது தனிமையைப் போக்குவதற்கோ அல்லது திருட்டுப் பயம் காரணமாகவோ வளர்ப்பு விலங்குகளை வளர்க்கிறார்கள்.
நாய், பூனை, முயல், பறவைகள் (கிளி, புறா), மீன், வெள்ளை எலி போன்றவற்றை பெரும்பாலோர் விரும்பி வளர்க்கின்றனர்.
வற்றுக்கான உணவுகள், சிறு கூடுகள், கூண்டுகள், பயிற்சிக் கருவிகள், போன்றவை விற்பனை செய்யும் கடை தொடங்கலாம்.
– மென்புத்தன்