Latest Posts

ஏலம் விட்டுப் பட்டியல் தொகையைப் பெற முடியுமாம்!

- Advertisement -

எம்எஸ்எம்ஈஸ் (MSMEs) என சுருக்கமாக அழைக்கப்படும், மிகச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வர்த்தக வரவுகளின் அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு போதுமான கடன் அளிப்பதற்கு, ரிசர்வ் வங்கி, மார்ச் 2014 – ல்  Factoring-Trade Receivables Exchange எனும் அமைப்பை நிறுவி நடைமுறை மூலதன சிக்கலை தீர்வு செய்யலாம் எனும் கருத்தமைவை வெளிட்டது.

அதனைத் தொடர்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள் Payment & Settlement Systems Act, 2007 (2007 ஆம் ஆண்டு 51 ஆவது) பிரிவின் 18 வது பிரிவுடன் பகுதி 10 (2) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது.

இதன்படி பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதால் உருவாக்கப்படும் வர்த்தக பெறுதல்களின் (Trade Receivables) அடிப்படையில் அவ்வாறான எம்எஸ்எம்ஈகளுக்கு நடைமுறை மூலதன கடன் அளிக்க உதவுவதற்கான நிறுவன அமைப்பு முறை (Trade Receivables Discounting System (TReDS)) என அழைக்கப்படும்.

இந்த டிஆர்டீஎஸ்கள் விலைப் பட்டியல் (Invoices), பில் ஆஃப் எக்ஸ்ச்சேஞ் (Bills of exchange) ஆகிய இரண்டிற்கான நடவடிக்கைகளையும் எளிதாக்குகின்றது. மேலும், அடிப்படைக் கூறுகள் ஒன்றுதான்.

இதனால் அதிக பணபரிவர்த்தனைகள் இந்த அமைப்புக்குள் வந்து, எம்எஸ்எம்ஈ நிலையை சிறந்ததாக நிர்ணயிக்கின்றன. இந்த டி.ஆர்.இ.டிஎஸ் இன் கீழ் செயல்படும் பரிவர்த்தனைகள் எம்எஸ்எம்ஈகளுக்கு “எந்த விதமான தொந்திரவும் இல்லாமல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

டிஆர்இடிஎஸ் என்பது வர்த்தக வரவுகளின் மீது கடன் வழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடம் ஏலம் விடுவதன் வாயிலாக கடன் திரட்ட அனுமதிக்கும் ஒரு மின்னணு தளம் ஆகும்.

அதாவது பட்டியல்களுக்கான தொகையை வழங்குவதற்கான காலக்கெடுவிற்கு முன் விற்பனையாளர் அந்த பட்டியலை ஒரு நிதியாளரிடம் சமர்ப்பித்து, அதன் மீது தள்ளுபடி வழங்கி பட்டியல் தொகையை முன்கூட்டியே பெறுகின்ற செயல் முறை இதுவாகும். அந்த தள்ளுபடி தொகையே வர்த்தக வங்கிகளுக்கான வட்டி போன்ற தொகையாகும்.

இந்த செயல் முறையில் எம்எஸ்எம்ஈகள் மட்டுமே பங்கேற்க முடியும். பெரிய நிறுவனங்கள் பங்கேற்க முடியாது. இந்த திட்டத்தை தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி (Payment And Settlement Systems Act இதன்படி Receivables Exchange of India (RXIL), A Treds Mynd Solution, Big Push ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி உள்ளது.

– வசந்த குமார்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news