Latest Posts

பங்குகள் இனி டிமேட்- ஆக மட்டுமே!

- Advertisement -

இனி அனைத்து பங்குப் பரிமாற்றங்களுக்கும் 2.10.2018 முதல் டிமேட் (Demat) முறையையே பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கம்பெனி விவகாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து வந்ததற்கு பதில் அனைத்து பங்குகளும் டிமேட் வடிவத்திலேயே கையாளப்பட வேண்டும். பங்கு பரிமாற்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு, கம்பெனி நிர்வாகத்தின் மேம்பாடு ஆகியவற்றிற்காக இந்த மாற்றம் என கூறப்பட்டு உள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு –
பங்குச் சான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டு போதல், அழிந்து போதல், மோசடியாக அபகரித்தல் போன்ற அபாயங்கள் அறவே அகற்றப்படும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு மேம்படும்.

பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு.
பங்குப் பரிமாற்றம், பங்குகளை அடமானம் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எளிமை ஆகும்.
2.10.108 முதல் எந்தவொரு நிறுவனமும் பொதுப் பங்குகளை இனி டிமேட் வடிவத்தில் மட்டுமே வெளியிடும்.

Also Read: எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது

ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் தற்போது நடப்பு பங்குகளை வைத்து இருக்கும் அனைத்து பங்குநர்களின் பங்குகளுக்கு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி ஐடென்டிஃபிகேஷன் எண் (International security Identification Number (ISIN) ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குநர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு வரும் தன் பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்ய விரும்பினால் முதலில் பங்குகளை டிமேட் வடிவத்துக்கு மாற்றிய பிறகே மாற்ற முடியும்.

டிமேட் செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அணுகி தீர்வு செய்து கொள்ளலாம்.

– முனைவர் ச. குப்பன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news