Latest Posts

சட்டைகள் உற்பத்தித் தொழிலில், இரண்டு ஆண்டுகளில் நல்ல பயிற்சி கிடைத்தது!

- Advertisement -

ட்ருஃபாக்ஸ் என்ற பெயரில் ஆண்களுக்கான சட்டைகள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகிறார், திரு. பி. சவுந்தர்ராஜன். தனது தொழில் பற்றி இவர் கூறும்போது,

”தொடக்கத்தில் சில தொழில்களைத் தொடங்கி நடத்தி, போதிய அனுபவம் இல்லை என்பதால் அவற்றில் வெற்றி காண முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து வேறு என்ன தொழில் தொடங்கலாம் என்று கள நிலவரங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஆண்கள் அணியும் சட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் வளர முடியும் என்று தோன்றியது.

அதன் பிறகு, அது தொடர்பான தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வாடிக்கையாளர்கள் எத்தகைய ஆடைகளை விரும்புகிறார்கள், ஆண்டு விற்பனை எந்த அளவுக்கு இருக்கிறது, மூலப் பொருட்கள் எங்கே கிடைக்கின்றன, விற்பனைச் சங்கிலி எப்படி செயல்படுகிறது என்பது போன்ற விவரங்களை முயன்று பெற்றேன்.

ஆடைகள் விற்பனை என்று முடிவு செய்தவுடன், ஆண்களுக்கான சட்டைகள் தயாரித்து விற்பனை செய்யலாம் என உறுதியான முடிவு எடுத்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ருஃபாக்ஸ் (Trufox) என்ற பெயரை பதிவு செய்து தொழில் தொடங்கினேன். நிறுவனத்தின் பெயரை முறைப்படி ட்ரேட் மார்க் (Trade Mark) பதிவு செய்து உள்ளேன்.

முதலில் ஆண்கள் அணியும் டி-ஷர்ட் தயாரித்து விற்பனையில் கவனம் செலுத்தினேன். ஆண்கள், டி-சர்ட்டை விரும்பி வாங்கினாலும் விடுமுறை போன்ற நாட்களில் மட்டுமே அதனை அணிகிறார்கள். அதனால் டி-சர்ட் விற்பனையை பெரிய அளவில் கொண்டு வர முடியாது என்று நினைத்து, சட்டைகள் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன்.

சென்னையில் ஆடை தயாரிப்பவர்கள், அதற்கான மூலப் பொருளான துணி வகைகளை வாங்க பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மட்டுமே செல்வார்கள். அகமதாபாத்தை விட பெங்களுரில் விலை சிறிது உயர்வாக இருக்கும் என்பதால், துணி குறைவாக வாங்கும் பொழுது பெங்களூரிலும், பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனை ஆகும் என்பதால் அகமதாபாத் சென்றும் வாங்குவோம்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் அதிக அளவில் துணிகளின் மொத்த விற்பனைக் கடைகள் இருப்பது போல், துணி தைக்கும் நிறுவனங்கள் வியாசர்பாடியில் அதிக அளவில் உள்ளன. அங்கு நிறைய துணி தைக்கும் சிறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.. பெங்களூர், அகமதாபாத் போன்ற நகரங்களில் இருந்து வாங்கி வரப்படும் துணிகளை வியாசர்பாடியில் கொடுத்து எங்களுக்கு ஏற்ற விதங்களில் தைத்து வாங்கிக் கொள்வோம்.

தைக்கப்பட்ட சட்டைகள், தையல் நிறுவனத்தில் இருந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள எங்கள் கிடங்குக்கு வரும். சரக்குக் கிடங்கில் இருந்து முகவர்கள், ஷோரூம், சிறு துணி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவோம்.

முகவர்களுக்கு ஒரு விலையிலும், நேரடி விற்பனை ஆகும் ஷோரூம், சிறு துணி கடைகள் போன்றவற்றுக்கு ஒரு விலையிலும் கொடுப்போம். எங்களிடம் வாங்கும் முகவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு விற்பனைக்குத் தருவார்கள்

சென்னையை வடக்கு, தெற்கு, மேற்கு, நடு என்று பிரித்து அங்கு உள்ள துணிக் கடைகளுக்கு ட்ருஃபாக்ஸ் சர்ட் வகைகளை விற்பனைக்கு கொடுக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் முகவர்களை நியமிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடைகளுக்கு விற்பனைக்குக் கொடுக்கும்போது, சரக்குக்கான பணம் உடனடியாக கிடைக்காது. சுமாராக ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதங்கள் வரை காலம் எடுத்துக் கொள்வார்கள். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் தருபவர்களும் உண்டு. எனவே பண வசூலுக்கு என்றே பணியாளர்களை நியமித்து இருக்கிறோம்.

பணம் உள்ளே வந்தால்தான் நாம் நாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க முடியும். இது ஒரு சங்கிலி வியாபாரத் துறையாகும். தொடக்கத்தில் நமக்கு யாரும் கடனில் தர மாட்டார்கள். நிலைத்து நின்று, நாம் நாணயமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினால்தான், நாமும் கடனுக்கு துணிகளைப் பெற முடியும். கடன் கொடுத்து வாங்கும் தொழிலாக இருப்பதால் நடப்பு முதலீட்டுக்குத் தேவையான பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் உற்பத்தியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன என்பதால் கடைகளில் பரவலாக தெரிய தொடங்கி விட்டது. ஆண்கள் அணியும் துணிகள் என்று எடுத்து கொண்டால் சராசரியாக ஒரு ஃபார்மல் பேன்ட அல்லது ஜீன்ஸ் பேன்டுக்கு நான்கு, ஐந்து சட்டைகள் வைத்து இருப்பார்கள். ஆக சட்டைகள் அதிகமாகவும், பேன்ட்கள் குறைவாகவும் வாங்குவதால், பல டிசைனகளில், வண்ணங்களில் சட்டைகளைத் தைத்து சந்தைப்படுத்தினால் மட்டுமே வளர முடியும். இதற்கு வாடிக்கையாளர்களின் தேர்வு எப்படி இருக்கிறது என்பதை தொடரந்து கண்காணித்து வர வேண்டி இருக்கிறது.

எங்களைப் போன்ற புதிய நிறுவனங்கள், எற்கெனவே உள்ள பெரிய பிராண்டுகளைப் பின்பற்றியே செயல்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் அறிமுகப்படுத்தும் வண்ணங்கள், டிசைன்களையே நாங்களும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தினால் ஏற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் எங்களைப் போன்றவர்கள் அறிமுகப்படுத்தினால் வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். எனவே பெரிய பிராண்டுகளின் செயல்பாடுகளை நாங்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம்.

சான்றாக ஸ்லிம் ஃபிட் என்ற சட்டை வகைகள், உடலோடு ஒட்டியபடி சற்று இறுக்கமாக இருக்கும். இந்த வகை சட்டைகளை பெரிய பிராண்டுகள் அறிமுகம் செய்ததாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த வகை சட்டைகள் விரும்பி வாங்குகிறார்கள். எங்களைப் போன்றவர்கள் ஸ்லிம் ஃபிட் சட்டைகளை அறிமுகப்படுத்தி இருந்தால், சட்டைத் துணியை மிச்சம் பிடிப்பதற்காக இப்படி இறுக்கமாகவும், உயரத்தைக் குறைத்தும் தைத்து இருக்கிறார்கள் என்று கூறி புறக்கணித்து இருப்பார்கள்.

பெரும்பாலும் பெரிய பிராண்டுகளைப் பின்பற்றியே சட்டைத் தயாரிப்பில் ஈடுபடுகிறோம். வழக்கமான நார்மல் ஃபிட் சட்டைகளின் விற்பனையும் எப்போதும் போல இருக்கிறது. எங்கள் கணிப்பின்படி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே ஸ்லிம் ஃபிட் சட்டைகளின் விற்பனை இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து விடும். பிறகு வேறு ஏதேனும் டிசைன்களில் சட்டைகள் தயாரிக்கப்படக் கூடும். ஆனால், நார்மல் ஃபிட் சட்டைகளின் விற்பனைக்கான வாய்ப்பு நிலையாக இருக்கும்.

பெரிய நிறுவனங்கள் என்ன மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் அதிக அளவிலான விளம்பரங்கள் மூலம் மூலம் மக்கள் மனதில் பதியச் செய்து விடுவார்கள். வாங்கும் ஆசையை உருவாக்கி விடுவார்கள்.

இன்று ஆண்கள் அணியும் ஸ்லிம்ஃபிட் சட்டைகளைம் தைக்க நார்மல் சட்டைக்குத் தேவைப்படும் துணி அளவை விட குறைந்த அளவு துணி இருந்தாலே போதும். அதன் மூலம் நிறுவனங்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும். பத்து சட்டைகளுக்கான துணியில் பதினொன்று தைத்து விடலாம். அதனால் இன்று பெரிய நிறுவனங்கள் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கின. ஆனால் இந்த வகை சட்டையை ஆண்கள் அணிந்தால் மிகுந்த இறுக்கமாக இருக்கும். கையை தூக்க முடியாது, இழுத்துப் பிடிக்கும். ஆனால் விளம்பரங்கள் அதனை மறக்கடித்து மக்களை வாங்க வைத்து விடுகிறது. விளம்பரங்கள் மூலம் ஒருமுறை மட்டுமே வாங்க வைக்க முடியும். ஒருமுறை வாங்கி அணிந்தவர்கள் மறுபடியும் ஸ்லிம்ஃபிட் சட்டைகளை வாங்குவதாகத் தெரியவில்லை.

நாங்கள் தயாரிக்கும் சட்டைகளின் தரம் பெரிய பிராண்டுகளின் தரத்துக்கு இருந்தாலும், அவற்றைப் போல நாங்கள் விலை வைக்க முடியாது. அவர்களிடம் ஆயிரம் ரூபாய், ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு கிடைக்கும் சட்டைகளை, அதே தரத்துடன் நாங்கள் ஐநூறு ரூபாய் முதல் அறுநூற்று ஐம்பது ரூபாய் விலையில் விற்பனை செய்கிறோம்.

ஆண்கள் அதிகமாக தனிவண்ண (பிளைன் நிறம்) சட்டைகளையே வாங்குகிறார்கள். இவற்றின் விற்பனை எப்போதும் அதிகமாகவே இருக்கும். இதற்கடுத்து சிறிய கட்டம் போட்ட சட்டைகள் விற்பனை ஆகின்றன. பெரிய கட்டம், பெரிய கோடுகள், புள்ளிகள் உடைய சட்டைகளின் விற்பனை குறைவாகவே இருக்கின்றன. நாங்கள் பிளைன் நிற சட்டை வகைகளையே அதிக அளவில் தயாரிக்கிறோம்.

நிறங்கள் என்று பார்த்தால் பொதுவாக நீலம், வெள்ளை, கருப்பு நிற சட்டைகள் அதிகம் விற்பனை ஆகின்றன. விழாக் காலங்களில் பளபளப்புடன் இருக்கும் சட்டைகளை விரும்பி வாங்குவதைப் பார்க்க முடிகிறது. ஆடைகள் வணிகம் என்றும் வருமானத்தைக் கொண்டு வரும் தொழிலாகும். இன்னும் கிராமங்களில் உள்ள துணி வணிகர்கள் சைக்கிளில் அல்லது மோட்டார் சைக்கிளில் ஆடைகளை மூட்டையாகக் கட்டி வந்து விற்பனை செய்வதை இப்போதும் பார்க்கலாம். இவர்களில் சிலர் தவணை முறையிலும் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். குறைந்த முதலீட்டிலும், அதிக முதலீட்டிலும் செய்வதற்கு ஏற்ற தொழில் இதுவாகும்.

Also Read: உணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்

ட்ருஃபாக்ஸ் நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டதால், எதிர்கால திட்டங்கள் என்று சிலவற்றை வரைந்து உள்ளேன். போதுமான அனுபவம் இல்லாமல் தொடங்கினாலும், இப்போது தேவையான அனுபவம் கிடைத்து விட்டது. தொழிலைப் பற்றிய புரிதல் ஏற்பட்டு விட்டது. முதன்மையான புரிதல், அனைத்தையும் விட கடைகளில் இருந்து வசூலிக்க வேண்டிய பணத்தை வசூலிப்பதில் சிறிதும் சுணக்கம் காட்டக் கூடாது. இதில் சுணக்கம் காட்டினால் பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போது எங்கள் ட்ருஃபாக்ஸ் சட்டைகளை சென்னையில் உள்ள கடைகளுக்கு நாங்களே நேரடியாக விற்பனைக்கு வழங்கி வருகிறோம். அடுத்ததாக வெளி மாவட்டங்களிலும் எங்கள் விற்பனையை விரிவாக்க இருக்கிறோம். அங்கெல்லாம் முகவர்களை நியமிக்க இருக்கிறோம். வெளி மாவட்டங்களில் நேரடியாக சப்ளை செய்ய வாய்ப்பு உள்ள இடங்களில் நேரடியாகவும் சப்ளை செய்வோம். அமேசான், ஃபிளிப்கார்ட் வாயிலாகவும் விற்பனை செய்கிறோம்.

எங்களிடம் முகவர்களாக விரும்பிகிறவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைத் தருகிறோம். ஆர்வம் இருப்பவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.
சென்னையில் பெரிய ஆயத்த ஆடைகள் அங்காடி ஒன்றைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் நாங்களும் ஒரு பெரிய பிராண்ட் ஆக வேண்டும் என்ற இலக்கோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார், திரு. சவுந்தரராஜன். இவர் எம்பிஏ பட்டம் பெற்று இருக்கிறார். (89399 11357)

– செழியன். ஜா

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]