அமெரிக்காவிலிருந்து மெய்நிகர் நாணயங்கள் (கிரிப்டோ கரன்சி) பெயரில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து இலட்சங்களில் வருமானம் ஈட்டும் சகோதரர் திரு. முகுந்தன் வேலுப் பிள்ளை ( ஓசூர்) நேற்று என்னிடம் பேசினார்.
நம்பிக்கையான நிறுவனம். 140 நாடுகளில் டிரேடிங்க் செய்து கோடிகளில் இலாபத்தைப் பிரித்துத் தருகிறார்கள். ஆனால் எப்படி இவ்வளவு இலாபம் கொடுக்க முடிகிறது? நெகடிவ் ஆக எதுவும் கூறாமல் விளக்கம் கூறுங்கள் என்று கேட்டார்.
“முதலில், நீங்கள் சொல்லும் நிறுவனத்தின் முகவரியாக வலை தளங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள அப்படியொரு நிறுவனமே டெக்சாஸ், அமெரிக்காவில் இல்லை. போலியான முகவரியைக் கொண்டு இயங்கும் நிறுவனத்திற்கு என்ன கருத்து கூறுவது?”
Also read: அமெரிக்காவில் சைனா செய்யும் முதலீடுகள்
முதலீடு செய்து குயிக் மணி (Quick Money) சம்பாதிக்க முடிவு செய்து விட்டால், நீங்கள் மட்டும் அந்த இடரை (Risk Venture) எடுத்துக் கொள்ளுங்கள். கடை திறந்திருக்கும் வரை உங்கள் நல்வாய்ப்பைப் பொறுத்து இலாபம்.
அடுத்தவரை இணைத்து இலாபம் பார்க்கும் வலையில் விழாதீர்கள். இது போன்ற நிறுவனங்களின் தந்திரமே, நமது முதலீட்டு மோகத்தை அதிகரித்து, நமது மூளையை வேலை செய்ய விடாமல் அவர்களின் பண சுழற்ச்சியை வளர்த்துக் கொண்டு பின்பு எதாவது சட்ட சிக்கல்கள், அரசுகளின் கிரிப்டோ கரன்சி தடைகள், சர்வர் ஹேக்கிங் என்று சொல்லி ஓடி விடுவதே!
2017-2018 வரை ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி உருவாக்கக் குழுவில் ஆலோசகராக இருந்த காரணத்தால் சொல்கிறேன், வந்த வரை இலாபம் என்று முடிவு செய்து விட்டால் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். முட்டாள் தனத்திலும் அது புத்திசாலித்தனம்.
– எம்எம். பிரபு