ஆலன் மைக்கேல் சுகர் என்பவர், பிரிட்டன் தொழிலதிபர், ஊடகப் பிரபலம், அரசியல்வாதி மற்றும் அரசியல் ஆலோசகராவும் திகழ்ந்தவர். 2016 இல் 1.15 பில்லியன் மதிப்புடன் 95வது பணக்கார நபராக இடம்பிடித்தார். இவர் கூறிய, வெற்றிக்கான பத்துக் குறிப்புகள்.
உங்களுக்கு முன் அனுபவம் இருக்கும் தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம்.
சந்தைப்படுத்துவதற்கு முன், தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை போன்ற மற்ற தொழில்கள் இல்லை என்பதை உறுதிசெய்யுங்கள். உங்கள் தொழிலை ஒத்த தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்குமென்றால், வாடிக்கை யாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? என்று ஆராய்ந்து பாருங்கள்.
Also read: இவர்கள் தரும் வெற்றிக்கான குறிப்புகள்
உங்கள் தொழில் சார்ந்த வல்லுநர்களிடம் மட்டும் கலந்து பேசுங்கள்.
முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்துகொள்வதற்கு உதவும். மற்றவர்கள் செயலை தீவிரமாக செய்ய உதவும்.
ஒவ்வொரு அடியாக வையுங்கள். நடக்க முடியும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். சிறியதாக தொடங்குங்கள். ஒன்று கிடைத்தபின் அடுத்த அடியை வைத்து வளருங்கள்.
பின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
உங்களுக்கென்று தனித்துவமான பாணியை கண்டுபிடியுங்கள். அது புதியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல விஷயங்கள் முன்பே செய்தவைதான். செய்யும் விதத்தை சிறந்ததாக செய்யுங்கள்.
Also read: எப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்!
வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள். தொழிலில் துணிகர முயற்சி எடுக்க தயாராக இருப்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். நீங்கள் தொழிலில் எவ்வளவு தீவிர ஈடுபாடு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், தயக்கம் குறைந்து பணத்தை கொடுப்பார்கள்.
பல்வேறு ஆதாரங்களில் இருந்து அறிவுரைகளை பெறுங்கள்.
சாதாரணமாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயல்படுத்த முடியுமா? என்பதை சிந்தியுங்கள்.
– த. செந்தமிழ்ச் செல்வன்