இந்தியா மிகச்சிறந்த தரம் கொண்ட தேயிலைகளை உற்பத்தி செய்யும் நாடாகும். இதன் காரணமாக, அண்மையில் தேயிலை தோட்ட சுற்றுலாக்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தேயிலைத் தோட்டங் களைச் சுற்றியுள்ள சூழல் அற்புதமானதி ஆகும். தேயிலை தோட்டச்சுற்றுலாவிற்கு ஏற்றக் காலங்கள், நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும்.
டார்ஜிலிங், மேற்கு வங்கம்: நியூ ஜல்பாய்குரியில் இருந்து டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில் வழியாக டார்ஜிலிங்கை அடையலாம். இந்தியாவின் 25 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மொத்த தேயிலை உற்பத்தி, டார்ஜிலிங் தேயிலை தோட்டங்களிலேயே மேற்கொள்ளப்படுகிறது. ஹேப்பி வேலி தேயிலைத் தோட்டம் மற்றும் கிளென்பர்ன் தேயிலைத் தோட்டம், கட்டாயம் பார்க்க வேண்டியவையாகும்.
Also read: வாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு
ஜோர்ஹத், அசாம்: அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் அமைந்து உள்ள ஜோர்ஹத், “உலகின் தேயிலை தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. ஜோர்ஹத் இரயில் நிலையத்திலிருந்து வெகு அருகாமையில் அமைந்துள்ளது. வன மஹசீர் அடாபரீ தேயிலை; தோட்டத்திற்கு பின்னால் காணக்கிடைப்பது சிறப்பான காட்சியாகத் திகழும்.
மூணாறு, கேரளா: பசுமையான தேயிலைத் தோட்டங்கள் உங்களை வரவேற்கும். அலுவா இரயில் நிலையத்திலிருந்து தேயிலைத் தோட்டங்கள் மிக அருகில் அமைந்துள்ளன. தேயிலை பறிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை நீங்கள் நல்லதண்ணி எஸ்டேட் மற்றும் குண்டலி தேயிலைத் தோட்டங்களில் பார்வையிடலாம்
குன்னூர், தமிழ்நாடு: கோயம்புத்தூரிலிருந்து நீலகிரி மலை இரயில் வழியாக குன்னூரை அடையலாம். இது, அடர்த்தியான மற்றும் வாசனை மிகுந்த தேயிலைகளுக்காக பெயர் பெற்ற பகுதியாகும். ஹைபீல்டு டீ ஃபேக்டரி, டிரான்குவிலிடீ லௌஞ்ச் மற்றும் சிங்காரா தேயிலை தோட்டம் ஆகியவைகள் பார்க்க வேண்டிய பகுதிகளாகும்.
Also read: வேகமாக வளரும் ஒட்டுநெல்லி
பாளம்பூர், ஹிமாச்சல பிரதேசம்: வடஇந்தியாவின் தேயிலை தலைநகரம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள், தௌலா தார் மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் பைன் டாட்டட் லேண்ட்ஸ்கேப் மற்றும் ஸ்லாப்பிங் டீ கார்டன்களுடன் மிகுந்த அழகினைக் கொண்டுள்ளது. பாதக்னோட்டிலிருந்து புறப்படும் காங்ரா வேலி இரயில்வேறியல் ஏறினால் காங்ராவிற்குச் செல்லலாம். அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் நடக்கும் தொலைவே. சரியும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கடந்து செல்லும் சிறு காற்று, மன அழுத்தம் மிகுந்த வாழ்விலிருந்து சிறப்பான மீட்சியை அளிக்கும்.
– த. செந்தமிழ்ச் செல்வன்