பிராக்டோ (Practo), மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், சலூன்கள், ஜிம் ஆகியவற்றை தங்கள் பகுதிகளில் கண்டறிவதற்கும், மருத்துவர் களிடம் முன் பதிவு செய்வதற்கும், மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை பெறுவதற்கும் உதவும் ஒரு ஆப் (platform & health app) ஆகும்.
சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் தனது சேவைகளை வழங்குகிறது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், எட்டாயி ரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பதிவு செய்து உள்ளனர். மாதத்திற்கு நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இதன் மூலம் மருத்துவர்களிடம் முன் பதிவு செய்கின்றனர்.
இந்த நிறுவனம் திரு. சஷாங் (Shashank) என்பவரால் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திரு. சஷாங் தொழில் முனைவோருக்கு பின்வரும் குறிப்புகளைக் கூறுகிறார் –
> பின்னடைவை ஊந்துதலாக எடுத்துக்கொள்ளுங்கள்
> நிறுவனத்தின் தொடக்க காலத்தில் இருந்த பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு விலகுவது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவது, போதிய முதலீடு இல்லாமல் தவிப்பது போன்றவை எல்லா தொழில் முனைவோருக்கும் நேர்வதுதான். இத்தகைய நிகழ்வுகள் உங்களுக்கும் நேரும். இவற்றை சமாளிக்கும் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
> எல்லா ஏற்ற இறக்கங்களும் உங்களை உறுதியுடன் செயல்படச் செய்ய வேண்டுமே தவிர சோர்வு அடையச் செய்து விடக்கூடாது. எல்லா இறக்கங்களும் உங்களுக்கு உந்துதலைத் தர வேண்டும்.
Also read:என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?
> தீர்க்க வேண்டிய சிக்கல்களைக் காதலியுங்கள் ஆனால் ஐடியாவை அல்ல. நீங்கள் தொழில் தொடங்கும் போது கொண்டிருக்கும் ஐடியாக்கள் கொஞ்ச நாள் சென்ற பிறகு வேறு விதமாக மாறலாம். அதனால் ஐடியாக்களை காதலிக்காதீர்கள்.
இவரைப் போலவே ‘அலிபாபா’ திரு. ஜாக் மா என்ன கூறுகிறார்?
> நிறுவன நோக்கத்தை முதன்மை யாக்குங்கள், இது பணியாளர்களிடம் ஊக்கத்தை உருவாக்கும். இதனால் நோக்கத்திற்கு எது நல்லது என்பதே முதன்மையாக அமையும்.
> எப்போதும் ஒரிரு நிமிடங்களில் நிறுவனம் பற்றிய ஐடியாக்களை விளக்குவதற்கு தயாராக செய்திகளை வைத்திருங்கள்.
> முதல் ஆயிரம் வாடிக்கையாளர்கள் பெறுவது கடினமாக இருக்கும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கூடுதல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கும்.
> ஒரு சந்தையில் நன்றாக கால் பதித்த பிறகே புதிய சந்தையில் நுழையுங்கள். முதலில் ஒரு சந்தையை கைப்பற்ற உங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்துங்கள்.
– மலர்