Latest Posts

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

- Advertisement -
இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்…
60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்… பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்…!!!
60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்.உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள். எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள். இளைஞர்களோடு பழகுங்கள்.
நன்றாக உடுத்துங்கள்
அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 60 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான். உலகின் மிகப் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 60+ காரர்கள் தான் அதிகம்..!!!
பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடி பயணம் செல்லுங்கள். வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை துள்ளிக் குதிக்க வைக்கும்.
புதிய சிந்தனைகளுடன் கூடிய புத்தகங்களைப் படியுங்கள்
புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப்படியுங்கள். நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பி காணுங்கள். சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள். பொறாமைக் காரர்களை காலவிரயம் கருதி ஒதுக்குங்கள்.
உடற்பயிற்சிகள் மிகத் தேவை
மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி,
எளிய உடற்பயிற்சிகள், சிறு சிறு ஆசனங்கள் அன்றாடம் செய்யுங்கள்.

வாரம் ஒரு முறையாவது உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடம் வெளி இடங்களுக்குச் சென்று சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள். மறந்தும் சாய்வு நாற்காலியைத் தேடி விடாதீர்கள்.

பொதுச் சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள். முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்.
– பெரீஸ் மகேந்திரவேல்
 
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news