Friday, December 4, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

உன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..!

தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன?

மனிதர்களுக்கு, ‘தன்னை அறிந்து இருத்தல்’ என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன? என் திறமைகள் என்ன?; என் திறமை இன்மை என்ன?; என்னால் முடிந்தது என்ன?; என்னால் முடியாதது என்ன?; என் பலம் என்ன?; என் பலவீனம் என்ன?; என்னால் முடியக் கூடியது என்ன?; என்னால் முடியாதது என்ன?; எது எனக்குப் பிடிக்கும்?; எது எனக்குப் பிடிக்காது?; நான் விரும்புவது என்ன?; நான் வெறுப்பது என்ன?; என் தேவை என்ன?; என் தேடல் என்ன? போன்ற கேள்விகள் ஒருவருக்கு தன்னைப் பற்றி தெரிந்து இருக்க உதவும். சாக்ரட்டீசின், ‘உன்னையே நீ எண்ணிப் பார்’ என்ற வரிகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும்.

நம்மில் பெரும்பான்மையோருக்கு மேற்கூறிய பெரும்பாலானவற்றில் தெளிவு இருக்காது. யாரிடமாவது திடீரென்று உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுப்  பாருங்கள்; தடுமாறிப் போவார்கள். ஏன, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், உடனே பதில் வராது. உன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்.., வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்று சொல்கிறார்களே, அது எப்படி? நான் என்னை அறிவதாலேயே எப்படி உயர்வு அடைய முடியும்? நான் என்னைப் பற்றி அறிந்து இருந்தால், இது என்னால் முடியும் என்றும், இது என்னால் முடியாது என்றும் தெளிவாக முடிவு எடுக்க முடியும்.

முடிவு எடுக்கும் திறமை வளர தன்னை அறிந்து இருத்தல் மிகத்தேவை

ஒருவருடைய வெற்றி, தோல்வி என்பது அவரது முடிவு எடுக்கும் திறமையினால்தான் உறுதி செய்யப்படுகிறது. எனவே முடிவு எடுக்கும் தன்மை (Judgement Capacity) வெற்றிக்கான அடிப்படை ஆகும். முடிவு எடுக்கும் திறனை அடைய தன்னை அறிந்து இருத்தல் அடிப்படை தேவை ஆகும். என் திறமை இவ்வளவு, இதற்கு இவ்வளவு ஆதாரம் தேவை, இந்த முயற்சியில் இந்த இந்த தடைகளை எதிர்கொள்ள நேரலாம் என்பது தெரிந்து முயற்சியில் ஈடுபடும்போது தடைகளும் கூட உங்கள் முயற்சியின் ஒரு கூறு ஆகி விடும்.

தன்னை அறிதல் என்பதில் நம்முடைய உயர்வுகள் என்ன, பின்னடைவுகள் என்ன என்பதை அறிந்து இருப்பதும் ஆகும். முடியாததை முடியாது என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், முடியும் என்பதை முடியும் என்று ஏற்றுக் கொள்ளும் தெளிவும் இருக்க வேண்டும். அப்படி அறிந்து இருந்தால் பெரும்பாலும் தோல்விகளுக்கு வாய்ப்பு இல்லை. மேலும் ஒருவர் தொடர்ந்து வெற்றிகளை சந்திக்கும் போது அவருடைய தன்னம்பிக்கை இயல்பாகவே உயர்கிறது. துணிச்சலும் தானாக வந்து சேரும். முடிவு சரியாக இருக்கும்போது வெற்றி வந்து சேர்கிறது;வெற்றிகள் தன்னம்பிக்கையை  அதிகரிக்கின்றன; தன்னம்பிக்கை ஆக்கப் பூர்வமான துணிச்சலை வழங்குகிறது. இவை ஒரு சங்கிலி போல ஒன்றை ஒன்று பின்தொடர்ந்து வருகின்றன.

திறமைக்கு ஒவ்வாத முடிவை எடுத்தால்..?

இதே போல நமக்கு போதிய திறமை இல்லாத, திறமைக்கு ஒவ்வாத ஒரு முடிவை எடுக்கும்போது தோல்வியை சந்திக்க நேர்கிறது. தோல்விகளை சந்திக்க சந்திக்க தன்னம்பிக்கை குறையும்; களைப்பும், சோர்வும் எற்படும்; துணிச்சல் குறையும். மற்றவர்களுக்கு நம் மீது இருக்கும் நம்பிக்கை குறையவும் இந்த தோல்விகள் வாய்ப்புகளைத் தந்து விடும். ஏனையோரின் மதிப்பில்  நாம் குறைந்து போய் விட்டால் நமக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விடும். வாய்ப்புகள் குறைந்தால் வளர்ச்சி தடைபடும். இந்த மாதிரி தன்னம்பிக்கை குறையும் போது அப்படியே விட்டு விட முடியாது. மீண்டு வர வேண்டும். தன்னம்பிக்கை பெறுவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சிகளில் பங்கு பெற வேண்டும்; நூல்களைப் படிக்க வேண்டும். தன்னம்பிக்கை தருபவர்களின் நட்பைப் போற்றி அவர்களுடன் அடிக்கடி கலந்து உரையாட வேண்டும்.

இதுவும் கூட சாதனைதான்!

வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் என்ற இரண்டு மட்டும் இல்லை, இருந்த இடத்திலேயே அதாவது ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் இருந்த இடத்திலே இருப்பதும் ஒரு நிலை ஆகும். ஏற்றம் அடைவது மட்டும் சாதனை அல்ல; இன்றைய வேகமான, போட்டி மிகுந்த, போராட்டம் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் வீழ்ச்சி அடையாமல் இருப்பதும் ஒரு சாதனைதான். இந்த கோரோனா காலம் அதையும் நமக்கு உணர்த்தி வருகிறது. இருக்கும் நிலையை விடக் கீழே சென்று விடாமல், வீழ்ச்சி அடைந்து விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதும் சாதனையாகவே கருதப்பட வேண்டும்.

என்னை நான் அறிந்து இருப்பதால் என் திறமை எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஓ இவருக்கு இவ்வளவு தெரிகிறதா என்று மற்றவர்கள் வியக்கிறார்கள். தெரிந்தவர் இவர் என்று மதிக்கிறார்கள். வாய்ப்புகள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் இவருக்கு இவ்வளவு தெரிகிறதா என்று சிலருக்கு காழ்ப்புணர்ச்சியும் தோன்றுகிறது. அவர்கள் நம் மீதான வெறுப்புணர்ச்சியை பரப்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு வினை ஆற்ற வேண்டி இருக்கிறது.

Also Read:

எனவேதான் நம்மைப் பற்றி யாராவது ‘தெரியும்’ என்று கூறிய உடன் ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற முன் எச்சரிக்கை உணர்வு தோன்றுகிறது. நம்மைப் பற்றி தெரிந்து இராதவர்களிடம் இந்த அச்சம் ஏற்படுவது இல்லை. அவர்களை துணிச்சலுடன் எதிர் கொள்கிறோம். நம்மைப் பற்றி நாம் தெரிந்து வைத்து இருப்பதில் உள்ள நன்மைகளை இப்படி எல்லாம் உளவியல் நமக்குக் கற்றுத் தருகிறது.

– டாக்டர் மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.