Latest Posts

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

- Advertisement -

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது.

Affiliate Marketing என்றால் என்ன?

அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை நீங்கள் விற்று தருகின்றீர்கள் என்றால், உங்களுக்கு அந்த பொருளின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையினை கமிசனாக வழங்குவார். ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருளுக்கு கமிசன் 10% என்றால், உங்களுக்கு கிடைக்கும் தொகை நூறு ரூபாய் ஆகும். அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல், இபே போன்ற பல நிறுவனங்கள் ஆன்லைனிலேயே இலட்சக்கணக்கான பொருட்களை விற்று வருகின்றன. சமையல் பொருட்கள், ஃபர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் முதல் அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள். இது போன்று ஆன்லைனில் விற்பனை செய்யும் இணைய தளங்களில் ஒரு தொடர்பாளர், அதாவது அஃபிலியேட்(Affiliate) ஆக இணைந்து கொண்டால் நமக்கு என்று ஒரு அஃபிலியேட் ஐடி தருவார்கள். அந்த ஐடியை வைத்து அனைத்து பொருட்களுக்கும் அஃபிலியேட் லிங்க் எடுத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.

எப்படி வேலை செய்கிறது?

நமது அஃபிலியேட் லிங்க் மூலம் பொருட்களை வாங்க வைப்பது எப்படி என்றால், ஒருவரை ஒரு பொருளை வாங்க வைக்க வேண்டும் என்றால் முதலில் அந்த பொருளை பற்றிய அனைத்து விபரங்களையும் அவருக்கு புரிய வைக்க வேண்டும். குறிப்பாக, பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வெப்சைட்டுகளை பார்த்து இருப்பீர்கள். அந்த வெப்சைட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் பற்றியும், அவற்றின் நிறை, குறைகளைப் பற்றியும் கொடுத்து, அவற்றை ஆன்லைனில் வாங்குவதற்கான அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல் போன்ற தளங்களின் இணைப்புகளை கொடுத்து இருப்பார்கள். அந்த இணைப்புகளை கிளிக் செய்து அதன் மூலம் பொருட்களை வாங்கும் போது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல் தளங்கள் தங்களது ஆன்லைன் கடையில் உள்ள பொருளை வாங்க வைத்ததற்காக அஃபிலியேட் கமிசனை அந்த வெப்சைட் உரிமையாளரின் கணக்கில் ஏற்றி விடும்.

Affiliate ஆக இணைப்பது எப்படி?

முழு நேர மற்றும் பகுதி நேர தொழில் செய்ய விரும்புவோர் அஃபிலியேட் சந்தை தொடர்பாக சிந்தித்துப் பார்க்கலாம். இதற்கு முதலில் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல் போன்றவற்றில் அஃபிலியேட் ஆக இணைத்து கொள்ள வேண்டும். நமக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சந்தையில் புதியதாக வந்து உள்ள பொருள்களை பற்றிய விவரங்களை எழுதியோ அல்லது ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட இரு வேறு பொருள்களை ஒப்பிட்டுக் காட்டி எழுதியோ, இந்த பொருள்களை இங்கே சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு, அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப் டீல் அஃபிலியேட் இணைப்புகளை கொடுக்க வேண்டும். விவரங்கள் அல்லது இரு வேறு பொருள்களை ஒப்பிட்டுக் காட்டி எழுதி பதிவிட்ட பக்கத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்சாப் போன்ற சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்வதின் மூலமாக
நீங்கள் பதிவிட்டு உள்ளதை பலரை பார்க்க வைக்க முடியும். அப்படி பார்ப்பவர்கள் உங்களது அஃபிலியேட் லிங்க் மூலமாக பொருட்களை வாங்கினால் உங்களுக்கு ஒரு தொகை கமிசனாக கிடைக்கும்.

அஃபிலியேட் மார்க்கெட்டிங் வாய்ப்பு தரும் சில நிறுவனங்கள் –

ஆன்லைன் ஷாப்பிங்

ஹோஸ்டிங்

ட்ராவல்ஸ்

வேலைவாய்ப்பு

மாட்ரிமோனியல்

இப்போதே பல சிறு ஆடை நிறுவனங்கள் இது போன்ற அஃபிலியேட் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் இறங்கி விட்டன. பொறியியல் படித்த சில இளைஞர்களும் இந்த தொழிலை முயற்சித்து வருகின்றனர். எதிர்காலத்தில் பெரிய தொழிலாக இந்த தொழில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஃபிலியேட் மார்க்கெட்டிங் செய்தால் பணம் வரும் என்று வெறும் நம்பிக்கையில் மட்டும் தொடங்காமல், அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன, அதில் நமக்கு எதற்காக பணம் கொடுக்கின்றார்கள், நாம் செய்யப் போகும் வேலைதான் என்ன என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொண்டு வேலையை தொடங்கினால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும்.                                                                                                               – கார்த்திகேயன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news