Monday, September 27, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

தெரிஞ்சே ஏமாற, மல்டி லெவல் மார்க்கெட்டிங்

MLM – Multi level marketing ; தெரிஞ்சே ஏமாறுவோமா? கண்டிப்பா ஏமாறுவோம்‌. எனக்கு இதுல நடக்குற விஷயம் ரொம்ப நல்லா தெரியும். இது எல்லாம் தெரிஞ்சும் நான் ஏமாந்து இருக்கேன். சரி கதைக்கு வருவோம். அப்படி என்னதான் நடக்குது, இந்த மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்லன்னாமுதல்ல உங்கள நம்ப வைக்கனும். அடுத்தது உங்க ஆசைய தூண்டனும்.அதுக்கு அவங்க சொல்ற, பண்ணுற விஷயங்கள் ரொம்ப சாதாரணம்.

- Advertisement -

உங்க ஃபிரண்ட் உங்கள அப்ரோச் பண்ணுவான். வா மச்சான் ஒரு மீட்டிங் இருக்கு. நல்ல சோறு போடுவாங்கன்னு.நம்மளும் இன்னைக்கு ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நம்பி போவோம். அங்க ஒரு 20 பேர் நம்மள மாதிரியே உக்காந்து இருப்பான். அவனும் அதே சாப்பாட்டுக்கு வந்தவன்தான்.

இப்போ அங்க ஒரு மீட்டிங் நடக்கும்.ஒரு அரை மணி நேரம். அதுல வந்து பேசுறவன், ஒரு கோடிஸ்வரன் ரேஞ்ச்ல தான் பேசுவான். இதுதான் ஆசைய தூண்டுறது. அதாவது இவர மாதிரி நாமளும் பணக்காரன் ஆகனும்னு தோண வைக்குறது. அடுத்தது, இப்போ நீங்க பாக்குற வேலை கூட சேர்ந்து ஒரு பார்ட் டைம் ஜாப் வாரம் ரேண்டாயிரம் ரூபாய் கிடைக்குற மாதிரி இருந்தா எப்படி இருக்கும்? திரும்பவும் அதே ஆசைய தூண்டும் பேச்சு. அடுத்து அவங்க விக்க சொல்ற பொருள்கள் மேல நம்பிக்கைய உருவாக்குறது.

அதாவது உருப்படியே இல்லாததுனாலும் அமேசான் காட்டை இழுத்துட்டு வந்து. கோரனாக்கு எதிர்ப்பு சக்தி இதுல இருக்குன்னு நம்ப வைக்குறது. அடுத்ததும் அதே பழைய கதையில சொன்னதுதான். முதல் கேள்வி, உங்களால ஒரு பத்தாயிரம் ரூபாய் இன்வெஸ்ட் பண்ண முடியாதா? இரண்டாவது கேள்வி, உங்களால ரெண்டு பேர சேர்க்க முடியாதா? இதெல்லாம் நம்ம ஈகோவைத் தூண்டும் கேள்விகள்.

சரி, அவன் சொல்றது நியாயம்தானே. நம்மால ரெண்டு பேர சேர்க்க முடியாதா, வெறும் பத்தாயிரம் ரூபாய்தானேன்னு தோண வைக்குறது. அடுத்து நீங்க யோசிக்கிறதுக்கு முன்னாடி,  அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு சமமா உங்களுக்கு பொருள் கொடுத்திடுவோம்னு‌ சொல்லுவான்.

அவன் ஒண்ணும் நம்ம வீட்டுக்கு தேவையான சோப்பு, சீப்பு, கண்ணாடி கொடுக்க போறது இல்ல. மிடில் கிளாஸ் எப்பவும் பயன்படுத்த தயங்குற பொருள்களதான் இதுல விக்க சொல்லுவாங்க. எடுத்துக் காட்டா உடல் எடையைக் குறைக்கும் உணவு, கிரீன் டீ, ப்ளூ டீ – இப்படி ஏதாவது தொடர்பு இல்லாத புது பொருளா இருக்கும். அது சாப்பிட்டா உலகமே உங்க கைல இருக்குற ரேஞ்ச்ல அவனோட பேச்சு இருக்கும். நான் இந்த பிராடக்டட விக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கு கீழே நானூறு பேர் சேர்ந்திருக்காங்க. மாத வருமானம் சில பல லட்சம்னு சொல்லுவான்.நான் சேர்த்து விட்டவங்க வெறும் பதினஞ்சு பேர்தான். மத்தவங்க எல்லாம் அவங்களா சேரந்தாங்கன்னு அளந்து விடுவான். அது எந்த அளவுக்கு உண்மைன்னு யாருக்கும் தெரியாது.

நம்பிக்கைய கூட்ட வங்கி வரவு செலவு அறிக்கையைக் கூட காட்டுவாங்க. சரி அதுக்கப்புறம் அந்த கம்பெனிக்கு எங்க எங்க கிளைகள் இருக்குன்னு அடுத்த தகவல். நல்லா தெரிஞ்சிக்கோங்க, அவங்க உங்க கிட்ட நீங்க கட்ட வேண்டிய பணத்த பத்தி அதிகமா பேசவே மாட்டாங்க. வரப்போற பணத்த பத்தி மட்டுமே பேசுவாங்க. சரி அதுக்கப்புறம் உங்க ஃபிரண்ட் நல்லா சாப்பாடு போட்டு சாப்பிடுற நேரத்தில பேச்ச எடுப்பான். மச்சி வெறும் பத்தாயிரம்தான். வாரம் ரெண்டாயிரம் வரும்டா. நீ இரண்டு பேர் உனக்கு கீழ சேர்த்து விடு போதும்னு சொல்வான்.

நீங்க மழுப்பத் தொடங்கிற நேரத்தில உங்க முன்னாடி ஒரு பெரிய கை அதாவது, அவன் பெரிய பிசினஸ் மேனா இருப்பான். அவன் வந்து உங்கள கன்வின்ஸ் பண்ணுவான்‌. அதே ஆசைய தூண்டுறதுதான். நீங்க கொஞ்சம் ஜர்க் ஆவீங்க. அப்புறம் அவனே சொல்லுவான்‌. நீ சேர்க்காட்டியும் பரவாயில்லை, நாங்க சேக்குற ஆளுங்களும் உங்களுக்கு கீழேதான் வருவாங்க. அப்போ உங்களுக்கு பிசினஸ் பிச்சிக்கும்னு சொல்லுவான். சரி, அதான் நம்மள சேர்க்க வேணாம்னு சொல்றானேன்னு தோணும். அதுக்கப்புறம் நடக்குற பிரைன் வாஷ் எல்லாம் தனி. நமக்கு ஒரு சின்ன பொறி தட்ட வைப்பாங்க.

நாம கைல காசு இல்லைன்னு சொன்னா. இப்போ நான் கட்டுறேன். சம்பளம் வந்த உடனே கொடுன்னு சொல்லிடுவான்‌. நீங்க கட்டப்போற தொகை அதிக அளவா பதினைந்தாயிரத்துக்கு  உள்ளதான் இருக்கும். ஏன்னா அவங்க டார்கெட் எல்லாமே ஏதாவது பண்ணி காசு பாக்கனும்னு நினைக்குற மிடில் கிளாஸ்தான். நீங்க ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் உங்க மனசாட்சிய தூக்கி குப்பையில போட்டுட்டு உங்க சொந்தக்காரங்கள இதுல சேர்க்கனும். அப்படி சேர்த்தா உங்களுக்கு நீங்க போட்ட காசாவது திரும்ப கிடைக்கும். இல்லாட்டி ஊஊஊஊஊஊ தான்.

சரி இதுல என்ன நடக்குதுன்னு இப்போ சொல்றேன்‌. இந்த எம்எல்எம் (MLM) காரனும் மத்த கம்பெனிகாரன் மாதிரி இவங்க உருவாக்குற பொருள்களை விக்கிற ஐடியாதான் இந்த எம்எல்எம். அதாவது விளம்பரம் எதுவும் செய்யாமலே அதுக்காகுற செலவுல பாதிய மட்டும் உங்களுக்கு கொடுக்குறது. இரண்டாவது இருநூறு ரூபாய் பெறுமானம் உள்ள உங்களுக்கும் உங்க சொந்த காரங்களுக்கும் அறுநூறு ரூபாய்க்கு விக்குறது. அப்படி விக்கிற காசுலஉங்களுக்கே இருபது ரூபாய் கமிஷன் கொடுக்குறது. அவ்வளவுதான்‌ இந்த பிசினஸ். சரி, இதுல என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா?

இது வரைக்கும் நாம நம்ம ஃபிரண்ட்ஸ்க்கும் நம்ம ரிலேட்டிவ்ஸ்க்கும் நல்லா இருக்குறதத்ததான் பரிந்து உரைத்து இருப்போம். இப்போ இந்தப் பொருள்கள் எப்படி இருந்தாலும் அதை நீங்க விக்க பாப்பிங்க. அடுத்தது, முதல்லையே நான் சொன்னது மாதிரி உங்க மனசாட்சியை குழி தோண்டி பொதச்சிட்டு அந்த கருமத்த வாங்க சொல்லி பேசனும்‌.

நான் இந்த இரண்டாவத பண்ண கூச்சப்பட்டுக்கிட்டுதான் இந்த விஷயத்தில தோத்தேன். இதுல யாரு முன்னேறுவாங்கன்னா, இந்த சைக்கிள்ள முதல்ல ஏறி உட்கார்ந்து ஏமாத்த ஆரம்பிச்சாங்களே அவங்கதான். இதுல வருமானம் வரும், ஆனா பணத்த இழக்கவும் செய்வோம். அதாவது உங்கள ஆக்டிவா வச்சிக்க நீங்க ஒரு மாசத்துக்கு ஒரு பிராடக்டாவது வாங்கனும்னு உங்கள வற்புறுத்துவாங்க. இது இன்னொரு வகையில நாம பணத்த இழக்குறது அவ்வளவுதான். இதுல. என்ன நம்ம சொந்தகாரங்களையே நம்மள நம்ப வைக்க நாம போராடனும். ஒரு வாட்டி நம்மள நம்பி ஏதாவது பொருளை வாங்கிட்டா அப்புறம் நம்மள சந்திக்கவே அலறி அடிச்சு ஒடுவாங்க. அப்புறம் என்ன? சட்டி சுட்டதடா, கைவிட்டதடாதான்!

– கார்த்திக்

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.