Monday, September 27, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

கொரோனா – சிக்கித் தவிக்கும் ஆயத்த ஆடைகள் உற்பத்தித் தொழில்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் நமது சந்தையிலேயே பெரிய அளவில் விற்பனை ஆகின. அண்மைக் காலமாக, நமது நாட்டின் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் புதிய பாதைகள் வகுத்து செயல்படுவதால் இந்த வகையில் இந்திய ஆயத்த ஆடைகள் வணிகம் உச்சக் கட்டத்தை எட்டி இருந்தது. கொரோனா காலம் வந்து அத்தனையையும் புரட்டிப் போட்டு விட்டது.

- Advertisement -

உலக சந்தை உறைவிடமான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்திய ஆடைகளுக்குத் தேக்கம் ஏற்பட்டிருந்தாலும், உள்ளூர் சந்தை விநியோகம் விரிவடைந்து இருந்தது. நமது உள்நாட்டுத் தேவை, இன்னும் ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு தொய்வில்லாமல் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளதாக கருதிய நிலையில் கொரோனா வந்து அத்தனையையும் சொதப்பி விட்டது. அரசின் ஆடை உற்பத்தி கொள்கைகளும் தொழிலுக்கு துணை புரிந்து வந்த நிலையில் தற்போதைய நிலையை ஆடை உற்பத்தியாளர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?
ஆடைகள் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் ஏற்றுமதி நோக்கில் இருந்து விலகி உள்ளூர் தேவைகளை குறி வைத்து ஆடைகள் தயாரித்து வாணிபத்தைப் பெருக்கி வந்த நிலையில் இந்த எதிர்பாராத திருப்பம் ஆடை உற்பத்தியாளர்களை நிலை குலைய வைத்து இருக்கிறது.

Also read: சிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்

இந்திய ஆடைகள் உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களளிடம் கேட்ட போது, ”உள்ளூர் சந்தையில் இந்திய ஆடைகளின் வியாபாரம் நிதானமாகவும், சீரான வளர்ச்சியுடனும், சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு விரிவு அடைந்து வந்த நிலையில் ஏற்றுமதியை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை என்று கருதி உள்நாட்டு வணிகத்தில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இப்படி ஆகி விட்டதை எண்ணி வருந்தினாலும் இந்த நிலை ஒரு சவாலாகக் கருதி எதிர் கொள்ளத் தயாராகி விட்டோம்.

சில மாதங்களுக்கு  முன் மும்பையில் நடந்த தேசிய ஆடைகள் பொருட்காட்சியில் 800-க்கும் அதிகமான இந்திய சிறு, குறு ஆடை உற்பத்தியாளர்களும், பெண்களுக்கு என சிறப்பு வகை ஆடைகள் தயாரிப்பவர்களும், 40,000-க்கு மேற்பட்ட சில்லரை வியாபாரிகளும் கலந்து கொண்டனர். இந்த பொருட்காட்சியின் மொத்த விற்பனை 600 கோடி ரூபாயை எட்டியது.இந்த ஆடைகள் காட்சி வாயிலாக, நமது உள்ளூர் ஆடைகள் தேவை எவ்வளவு என்பது தெரிய வந்ததோடு, உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் தங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளவும் இந்த காட்சி கற்பித்தது.

நமது உற்பத்தியாளர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்து தமது ஆற்றலுக்கு ஏற்ப ஆடைகளை தயாரிக்கின்றனர். தங்களின் பிராண்டுகளை புகழ் பெறச் செய்ய, விளம்பரங்களுக்கு செலவிடவும் தயங்குவது இல்லை. இவர்களின் வணிகம் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் கூட சக்கைப்போடு போடுவதை சில மாதங்களுக்கு முன்பு கூட காண முடிந்தது.

உற்பத்தியாளர்கள் அணிவோரின் தேவைகளை, அளவு, முறைகள் முதலானவற்றை சரியாக அறிந்து செயல்பட்டதால் அனைத்து ஊர், நகரங்களிலும் ஆடை வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வந்தது.

அண்மைக் காலமாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நாடு முழுமையான இயல்பு நிலைக்கு வந்து விடும் என்று கருதுகிறோம். இந்த காலக் கட்டத்துக்குள் பெரிய, சிறிய ஆடைகள் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை படிப்படியாக தொடங்கி இருக்கிறார்கள். அனைத்து ஜவுளி விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டு விடும். பழைய இருப்பை விற்றுத் தள்ளும் முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபட வேண்டி இருக்கும். இதற்காக இவர்கள் கொடுக்கும் தள்ளுபடி போன்றவை பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்து இருக்கும் நுகர்வோருக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்றவாறு, சிறப்பான வித, விதமான ஆடை வடிவமைப்புகளளை அறிமுகப்படுத்துவதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டி இருக்கும்.  சமூக வலைத்தளங்களில், விற்பனையாளர்கள் புதியபுதிய வடிவமைப்புகளுடன் ஆடைகளை உலவ விட்டு மேலும் வணிகத்தை அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இளைய வயதினர் கணினி முன் அமர்ந்த படியே தாங்கள் விரும்பும் ஆடைகளை வரவழைத்துக் கொள்ளும் விருப்பத்தை இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.

கொரோனா தீவிரம் அடங்கியதும் ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கருதுகிறோம். ஏற்கெனவே சில ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் சுமார் 70% அளவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த நிலையை அடைய தொய்வு இல்லாமல் பாடுபட்டால்தான் முடியும்.

வங்கிக்கடன் தொடர்பான பல உறுதிகள் ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. அந்த உறுதிகளுக்கு ஏற்ப வங்கி மேலாளர்கள் எங்களுக்கு உதவ வேண்டும்.

இந்த நிலையை வெற்றி கொண்டு சமாளிக்கக எப்படியும் குறைந்தது ஒரு ஆண்டாவது ஆகும் என்று கணித்து இருக்கிறோம். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டியதும் எங்கள் தொழிலுக்கு மிகத்தேவை” என்கிறார்கள்.

– முத்து செல்வராஜா

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.