Friday, December 4, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

ஆன்லைன் விற்பனை – சிந்தனைக்கு சில செய்திகள்

வேதி உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய என்று இணைய தளங்களைத் தொடங்கிய பலர் அவற்றை தொடர்ந்து இயக்க முடியவில்லை. அத்தகைய இணைய தளங்கள் பலவற்றைத் திறந்து பார்த்தால் அவை இயக்கம் இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதைப் போல மளிகைச் சாமான்களை ஆன்லைனில் விற்கிறோம் என்று தொடங்கப்பட்ட இணைய தளங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கணினி உதிரி உறுப்புகள், மொபைல்கள், பிற எலெக்ட்ரானிக் பொருட்களை இணையம் வாயிலாக வாங்குவதில் ஆர்வம் காட்டு க்ஷ்பவர்கள் ஏன் மளிகைச் சாமான்களை, தானியங்களை இணையத்தில் வாங்குவது இல்லை?

மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலைகளை ஒப்பிட்டு, எங்கே விலை குறைவாக இருக்கிறது என்று பார்த்துதான் நுகர்வோர் வாங்குகிறார்கள். அதைப் போலவே அருகில் கிடைக்காத பொருட்களையும் விலைகளை ஒப்பிட்டு வாங்கும் வாய்ப்பு நுகர்வோருக்கு இருக்கிறது.

Also read: இணையதளம் வாயிலாக, வளர்ச்சிக்கான பாடங்கள்

ஆனால், மளிகைச் சாமான்கள் அனைத்தும் பெரும்பாலும் அருகிலேயே கிடைக்கின்றன. விலையும் ஆன்லைனில் குறைவாக இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க வேண்டியும் இருக்கிறது. தெருவில் உள்ள கடைகளில் கிடைக்கும் கடலை மிட்டாயை எதற்கு ஆன்லைனில் வாங்க வேண்டும் என்றுதான் வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். அதுவும் அத்தகைய பொருட்களின் விலை ஆன்லைனில் அதிகமாகவும் இருக்கின்றன.

தொலைபேசியில் சொன்னாலே வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு பணத்தை வாங்கிச் செல்லும் முறை பெரும்பாலும் எல்லா பலசரக்குக் கடைகளிலும் இருக்கின்றன. பிக் பசார், நீல்கிரீஸ் போன்ற பெரிய கடைகள் கூட தொலைபேசி ஆர்டர்களை ஏற்று வீட்டில் கொண்டு பொருட்களைத் தருகிறார்கள். இவர்கள் தொலைபேசி போல ஆர்டர் பெற இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். இப்படி கடை வைத்து இருப்பவர்கள் ஆர்டர் பெற இணையத்தைப் பயன்படுத்துவது வெற்றி பெற்று வருகிறது. வெறும் ஆன்லைன் வழியாக மட்டுமே விற்பனை என்பது அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சோப்புகள், ஷாம்புகள், தூய்மைப் படுத்தும் பொருட்களைக் கூட அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கவே விரும்புகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் கொஞ்சம் பெரிய அளவில் மொத்தமாக வாங்க நினைப்பவர்கள் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், பிக் பசார் கடைகளுக்கு சென்று விடுகிறார்கள். இங்கு அவ்வப்போது சில சலுகைகளையும் அறிவிக்கிறார்கள் என்பதோடு, விலைகளிலும் சிறிய அளவுக்கு பயன் பெறுகிறார்கள்.

இயற்கை விளை பொருட்களை ஆன்லைனில் விற்கிறேன் என்று முயன்றவர்களாலும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கும் விலைதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. அனைத்தும் கூடுதல் விலையுடன் இருப்பதால் இந்த பொருட்கள் நடுத்தர மக்களைக் கவரவில்லை. இத்தகைய இயற்கை விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் கடைகளும் இப்போது எல்லா பகுதிகளிலும் இருக்கின்றன. இருந்தாலும் அங்கும் பெரிய அளவில் வணிகம் நடப்பதாகச் சொல்ல முடியவில்லை.
குறிப்பாக செக்கு எண்ணெயை வாங்க வேண்டுமானால், நேரடியாக ஆட்டித் தரும், தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளுக்கே சென்று வாங்கிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு செக்கு எண்ணெய்க் கடைகள் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்து வருகின்றன.

தங்கள் பகுதியில் கிடைக்காத பொருட்களையும், ஓப்பீட்டளவில் விலை மலிவாக இருக்கும் பொருட்களையும் வாங்கவே பெரும்பாலும் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் எந்த மளிகைக் கடையின் வணிகமும் அதிக அளவில் பாதிக்கப் படவில்லை.

Also read: வணிக உறவு வலைப்பின்னல் வணிகத்தை அதிகரிக்கும்

எனவே, புதிதாக இணையம் வாயிலான விற்பனை என்று தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியது மிகத்தேவை. ஏற்கெனவே நேரடியான கடைகள் மூலம் பலசரக்கு விற்பனை செய்யும் கடைகளை வைத்து இருப்பவர்கள், தங்களின் கூடுதல் விற்பனைக்கு இணையத்தைப் பயன்படுத்தலாம். அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை நடுவர்கள் பெரிய அளவில் இயங்குகிறார்கள். அவர்கள் எதையும் வாங்கி விற்பது இல்லை. வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடைய புரோக்கராக செயல்படுகிறார்கள். அதற்கு இணைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த நிறுவனத்தை நம்முடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. தேவையானால் அந்த இணைய தளத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

இப்போது எல்லா நிலைகளிலும் இணைய தொழில் நுட்பம் ஆட்சி செய்கிறது. இணையம் சார்ந்த விற்பனை பற்றிச் சிந்திக்கும் போது, எந்த பொருட்களை இணையம் மூலம் விற்பனை செய்ய முடியும் என்பதில் ஒரு தெளிவுடன் ஈடுபட வேண்டும். மேலும் டெலிவரி செய்வதற்கான கூரியர் கட்டணங்கள், வாகனக் கட்டணங்கள் போன்றவை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

– நேர்மன்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.