நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன் ஐஐடி. மற்றும், ஐஐஎம் நிறுவனங்களால் நடத்தப்படும் அமைப்பு, ழிறிஜிணிலி NPTEL ( National Programme Technology Enhanced Learning )
ஆண்டிற்கு இரண்டு முறை (ஜனவரி முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) குறுகிய கால சான்றிதழ் படிப்பை இணைய தளம் வழியாக இலவசமாக கற்றுத் தருகிறார்கள். இதில் சேர வயது வரம்பு கிடையாது. கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.
கணினி தொழில் நுட்பம், நிர்வாக மேலாண்மை, எந்திர தொழில் நுட்பம், ஏற்றுமதி, தனி மனித முன்னேற்றம், என்று 235 பயன் உள்ள படிப்புகள் உள்ளன. அனைத்தும் வல்லுநர்களால் வழங்கப்படுகின்றன.
நமக்குத் தேவையான, விருப்பமான படங்களைத் தேர்வு செய்து படிக்கலாம். இது தொடர்பான முழுமையான தகவல்கள் ஸீஜீtமீறீ.ணீநீ.வீஸீ என்ற வலைத்தளத்தில் உள்ளது. தொழில் நுட்ப பேராசிரியர்கள் பாடங்களை நடத்தும் பாடங்கள் வீடியோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். தேர்வு கட்டணம் ருபாய் 1000. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்பிடிஎல் வழங்கும் சான்றிதழ் பெறலாம்.
-எஸ். எஸ். ஜெயமோகன்