நிறுவனத்தை வலுப்படுத்த ஊபர் ஈட்சை இணைக்கும் சோமாட்டோ

உணவு வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வந்த ஊபர் ஈட்ஸ், அதன் இந்திய வணிகத்தை சோமாட்டோ நிறுவனத்திடம் விற்க ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஊபர் நிறுவனம், இந்தியாவில் டாக்சி சேவையை முதன்மை வணிகமாக மேற்கொண்டு வருகிறது. 2017 -ம் ஆண்டில் ஊபர் ஈட்ஸ் என்ற பெயரில் இந்தியாவில் உணவு வழங்கும் வணிகத்தையும் தொடங்கியது.

Also read: பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

ஆனால், இந்திய நிறுவனங்களான சோமாட்டோ, ஸ்விகி ஆகியவை ஊபர் ஈட்சுக்கு கடும் போட்டியாக இருந்தன. இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாத நிலையில், அதன் இந்திய வணிகத்தை தற்போது சோமாட்டோ நிறுவனத்திடம் விற்க ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. 350 மில்லியன் டாலர் (ரூ. 2480 கோடி) மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஊபர் ஈட்சின் நேரடி உணவகங்கள், வாடிக்கையாளர்கள் என அந்த நிறுவனம் தொடர்புடைய அமைப்புகள் சோமாட்டோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. ஒப்பந்தத்தின் பகுதியாக, ஊபர் நிறுவனம் சோமாட்டோ நிறுவனத்தில் 9.99 சதவீதப் பங்குகளை கொண்டு இருக்கும். இந்த நிலையில், ஊபர் நிறுவனம் அதன் டாக்சி சேவையில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக அதன் சிஇஓ தாரா கோஸ்ரோஷாஹி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, சோமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபந்திர் கோயல் கூறியபோது, இந்தியாவில் 500 நகரங்களில் எங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம். இந்த நிலையில், ஊபர் ஈட்சை வாங்கி இருப்பது, எங்களது இடத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

Also read: நான் வைக்கும் சாம்பார் சுவையாக இருக்க என்ன காரணம்?

தொடக்கத்தில் ஸ்விகி நிறுவனத்துடன்தான் இணைவதாக ஊபர் ஈட்ஸ் கூறியது. உடன்பாடு ஏற்படாத நிலையில் சோமாட்டோ நிறுவனத்துடன் இந்தப் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது.

– சீனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here