Wednesday, January 27, 2021

வணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்

தொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

நான் வைக்கும் சாம்பார் சுவையாக இருக்க என்ன காரணம்?

– 86 வயது சமையல் கலைஞர் நாராயணன் விளக்குகிறார்!

தொழில் முனைவோர் எந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்; அவர்களுக்கு யாராலும் பணி ஓய்வு கொடுக்க முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் எண்பத்து ஆறு வயதிலும் தனது சிறிய அளவிலான உணவகத்தை தனது மகளுடன் சேரந்து நிர்வகித்து வரும் திரு. நாராயணன். இவர் சென்னை, குன்றத்தூரில் ­உள்ள சம்பந்தம் நகரில், ஓட்டல் தென்றல் என்ற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். சமையல் துறைக்கு அவர் வந்தது குறித்தும், அவர் தொழில் வாழ்க்கை குறித்தும் வளர்தொழிலுக்க அவர் அளித்த பேட்டியின் போது,

”நான் கேரளாவைச் சேர்ந்தவன். எனக்கு அப்போதி பதினொரு வயது இருக்கும். என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதாவது வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். தெரிந்தவர் ஒருவர் என்னை ஒரு ஓட்டலில் பணிக்கு சேர்த்து விட்டார். அங்கு என்னுடைய வேலை, சமையலுக்குத் தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவது, சமையலுக்கு உதவியாக இருப்பது ஆகியவைதான். அதற்கு மாத ஊதியமாக ஒன்றரை ரூபாய் தந்தார்கள்.

அந்த உணவகத்தில் சில மாதங்கள்தான் வேலை பார்த்தேன். என்னுடைய அண்ணன் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தார். அப்போதுதான் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலையில் கீதா கஃபே திறப்பதற்கான பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அங்கே வேலைக்கு சேர்ந்தேன். அப்போது அது பெரிய உணவகமாக அமைந்து இருந்தது. சென்னையின் பல பகுதிகளில் இருந்து அங்கே உண்ண வருவார்கள். உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்கும். பரிமாறுகிறவர்களும் நல்ல சீருடையுடன், நட்புடன் பரிமாறுவார்கள். அந்த காலக் கட்டத்தில் கீதா கஃபேயின் காப்பிக்கு அடிமையானவர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள்.

அங்கு சில மாதங்கள் வேலை பார்த்த பிறகு, வேறு ஓட்டலுக்கு சென்று விட்டேன். எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். இதனால் ஏதாவது காரணங்களால், அவ்வப்போது கோபப்பட்டு ஓட்டல் ஓட்டலாக மாறிக் கொண்டிருந்தேன். எனது இந்த கோபத்தை கட்டுப்படுத்தி பணி புரிந்து இருந்தால் என் வளர்ச்சி இன்னும் பெரிதாக இருந்து இருக்கும். தொழில் முனைவோராக இருந்தாலும், பணி புரிவோராக இருந்தாலும் தேவையற்ற கோபங்களில் இருந்த தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். கோபம் என்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு எடுக்கும் முடிவுகள் பல நேரங்களில் தப்பாக போய் விடுவதை என் அனுபத்தில் கண்டு உணர்ந்து இருக்கிறேன்.

பல ஓட்டல்களில் பணி புரிந்ததால், ஓட்டல் தொழில் தொடர்பான பல செய்திகளை விரைவிலேயே கற்றுக் கொண்டேன். இருபத்தைந்து வயதிலேயே மாஸ்டர் ஆகி விட்டேன். நான் பணி புரிந்த அனைத்து உணவகங்களிலுமே, அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அன்பானவனாகவே இருந்தேன்.

கோவையில் ஒரு ஓட்டலில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன். அந்த ஓட்டலில் ஒவ்வொரு மாத சம்பளத்தில் இருந்தும் ஐந்து ரூபாய் பிடித்து வைத்திருந்து, அவசரத்தேவை என்றால் அந்த தொகையை நம்மிடம் கொடுப்பார்கள். ஒருமுறை என் தேவைக்காக அந்த தொகையைக் கேட்ட போது கொடுக்க மறுத்ததோடு என்னை அடித்தும் விட்டார்கள்.

அங்கிருந்து வெளியேறி சொந்தமாக தேநீர் கடை தொடங்கினேன். சரியாக வரவில்லை.

கேரளாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் தேநீர்க் கடை, சிறிய ஓட்டல்கள் தொழிலில் ஈடுபடுவதாக பலரும் எண்ணுகிறார்கள். கேரளாவில் இருந்து மட்டும் அல்ல; வெளியூர்களுக்கு வேலைக்கு வருபவர்கள் அனைவருமே இந்த வேலைகளில், தொழில்களில்தான் ஈடுபடுவார்கள். ஏனென்றால், தேநீர்க் கடைகளிலும்,

ஓட்டல்களிலும் தான் உடனடியாக வேலை கிடைக்கும். அதே போல், சொந்தமாக கடை வைப்பவர்களும் முதலில் தேநீர்க் கடையைத் தான் தேர்ந்து எடுப்பார்கள். ஏனென்றால் அதற்கு குறைந்த அளவு முதலீடு போதும். உரிமையாளரே டீ மாஸ்டராகவும் இருந்தால் லாபமும் கூடுதலாக இருக்கும். தேநீர் அனைவரும் அருந்தக் கூடிய ஒன்றாகவும் உள்ளது. எனவே பொதுவாக அதில் நட்டம் ஏற்படாது.

பிறகு சிறிய உணவகம், இனிப்பகம், தேங்காய்க் கடை, எண்ணெய்க் கடை, காப்பித் தூள் கடை என பல கடைகள் வைத்தேன். எதையும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இப்போது சிந்தித்துப் பார்த்தால் என்னுடைய பொறுமை இன்மையும், சிந்திக்காமல் எடுத்த அவசர முடிவுகளே இதற்குக் காரணமாக இருக்குமோ என்று எண்ணுகிறேன்.

ஓட்டல் தென்றல் என்னுடைய இருபத்தெட்டாவது கடை. இங்கு வியாபாரம் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. என் மகள் லட்சுமி வயிற்று பேத்தியின் பெயர் தென்றல். அவள் பெயரில்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். லட்சுமிதான் எனக்கு உதவி யாக இருக்கிறார். சாப்பிட வருபவர் களுக்கு பரிமாறுவது, பார்சல் கட்டுவது போன்ற வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். சமையல் வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஒரு முறை எங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டவர்கள், தொடர்ந்து வருகிறார்கள். காலையில் இட்லி, பூரி-கிழங்கு, பொங்கல், வடை ஆகியவற்றை தயாரிப்பேன். பொங்கல் அதிகமாக விற்பனை ஆகும். இதற்குக் காரணம் பொங்கலுடன் நான் வழங்கும் சுவையான சாம்பார்தான். என் சமையலின் சுவைக்கு காரணம் நான் சேர்க்கும் பொருள்கள்தான்.

பொங்கலுக்கு, ஒரு கிலோ பச்சரிசி என்றால், ஒரு கிலோ பாசிப்பருப்பு சேர்ப்பேன், பெரிய ஓட்டல்களில் கூட கிலோ அரிசி என்றால் நூற்று ஐம்பது அல்லது இருநூறு கிராம் பருப்பு மட்டுமே சேர்ப்பார்கள். இரண்டாவது, ஒரு கிலோ பொங்கலுக்கு முக்கால் கிலோ எண்ணெய் சேர்த்தால் கரண்டியில் ஒட்டாது, மென்மையாகவும் இருக்கும். அடுத்து, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை நெய்யில் தாளிக்க வேண்டும். பானையில் வைத்து தம் கொடுக்க வேண்டும். அதாவது பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து விட வேண்டும். இதைத்தான் தம் கொடுப்பது என்கிறேன். இதைப் போன்ற பல நுட்பங்கள் உணவகச் சமையலில் இருக்கின்றன. இவற்றை ஓட்டல்கள் நடத்தும் தொழில் முனைவோர் கற்றுக் கொள்ள வேண்டும்..

அடுத்து சாம்பார். பருப்பு வேக வைக்கும் போதே தேவையான அளவு காய்கறிகள், மற்றும் மசாலாக்களை (மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்) சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனோடு தாளிப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும். தாளிப்பின் போது கட்டிப் பெருங்காயம் சேர்க்க வேண்டும். உடன், கொத்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கம்போது மேலும் மணமாக இருக்கும். இந்த சாம்பாரை விரும்பி வரும் வாடிக்கையளர்கள் அதிகம். இந்த சாம்பாரை வாங்கிக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

சில பெரிய ஓட்டல்களில் சாம்பார் செய்முறை முற்றிலும் மாறுதலாக இருக்கும். பருப்பை வேக வைத்து, புளித் தண்ணீரில் தேவையான காய்கறிகளையும், மசாலா வையும் சேர்த்து தனியே வேக வைத்து சாம்பாரைத் தாளித்து, மேற்கண்ட கலவையை சேர்த்து கொதிக்க வைப்பர். இறுதில் கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இறக்குவார்கள். இந்த முறையில் சுவையும், மணமும் குறைவாகவே இருக்கும்.

நான் ஓட்டல்களில் வேலை செய்துக் கொண்டு இருக்கும் போதே, சுவைக்காகவும், மணத்திற்காகவும் சற்று மாறுதலாக சமைத்துப் பார்ப்பேன். வாடிக்கையாளர் களை கவர்வதற்கு இத்தொழிலில் சுவையும், மணமுமே முக்கிய காரணம் ஆகும்.

தொடக்கத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் தொடங்கிய இந்த வேலைதான் இன்றைக்கு என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. இடையில் எனக்கு நடிகராக வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. அதன் விளைவாக என்னுடைய 22-ஆவது வயதில் ஒரு நாடகத்தில் நடித்தேன். அதில், என்னுடன் நடிகர் சிவகுமாரும் இணைந்து நடித்தார். மேலும், எனக்கு பாடல்கள் எழுதுவதிலும், பாடுவதிலும் ஆர்வம் உண்டு. என் மனைவி திருமதி. தங்கமணியை நினைத்து நிறைய கவிதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். எனக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். அவர்களில் இருவர் இறந்து விட்டனர். ஒரு மகள் என்னுடன் இருக்கிறார். மகன்கள் வேறவேறு தொழில்களில் இருக்கிறார்கள். அவ்வப்போது அன்புடன் என்னைப் பார்த்துச் செல்வார்கள்.” என்றார் திரு. நாராயணன்.

– சா. கு. கனிமொழி

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

Don't Miss

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.