கேள்வி: நான் கூட்டு வணிகத்தில் 2017-18 – ல் கூட்டாளிக்கு அலுவலக வாடகை மாதம் ரூ.10,000 செலுத்துகிறேன். இதற்கு ஜிஎஸ்டி வரி உண்டா?
பதில்: 01.07.17 முதல் 13.10.17 வரை Reverse Charge Mechanism (RCM) ல் இந்த நிறுவனம் 18 % வரி செலுத்த வேண்டும். இதுவரை செலுத்தாவிடில் வட்டி 18% செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி மட்டும் Input Tax Credit-ITC எடுத்து கொள்ளலாம். கூட்டாளிக்கு ரூ.20 லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ளதால் அவருக்கு ஜிஎஸ்டி பதிவு தேவையில்லை.
கேள்வி: ஒரு நபர் கலப்பு திட்டத்தில் தவறாக சேர்ந்து அதற்குரிய வரியை செலுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
பதில்: தவறாக சேர்ந்து கலப்பு வரி கட்டினால் சிஜிஎஸ்டி section 73 அல்லது 74 ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டம் வசூலிக்கப்படும்
கேள்வி: நடவடிக்கைக்குரிய உரிமை (actionable claim) ஜிஎஸ்டி யில் எவ்வாறு எடுத்து கொள்ளப்படுகிறது?
பதில்: நடவடிக்கைக்கு உரிய உரிமை (actionable claim) அட்டவணை III ன் கீழ் வருவதால் அவை வழங்கலாக (neither supply of goods nor services) கருதப்பட மாட்டாது.
கேள்வி: செல்வன் என்பவர் எழிலனை அணுகி முகிலன் என்பவருக்கு அவருக்கு வேண்டிய சரக்கை அனுப்ப செய்து அதற்கு உரிய இன்வாய்சை அனுப்ப செய்கிறார். சரக்கு நேரடியாக செல்கிறது. இதில் செல்வன் என்பவர் ஜிஎஸ்டி யில் ஏஜென்டாக கருதப்படுவாரா? ?
பதில்: Circular No. 57/31/2018-ஜிஎஸ்டி dt 04.09.18 ன் படி அவர் ஏஜென்ட் ஆக ஜிஎஸ்டி யில் வருவது இல்லை.
Also read:சேவைத் தொழில்களுக்கும் ஜிஎஸ்டியின் கீழ் காம்போசிஷன் திட்டம்
கேள்வி: ஒரு ரசாயன உரம், உரமல்லாத பயன்பாட்டிற்கு வழங்கல் செய்தால் ஜிஎஸ்டி வரி விகிதம் என்ன?
பதில்: Circular No. 54/28/2018-ஜிஎஸ்டி தேதி 09.08.2018ன் படி உரமல்லாத பயன்பாட்டிற்கு வழங்கல் செய்தால் 18% வரி வசூலிக்கப்பட வேண்டும்.
கேள்வி: அரசின் சேவைகளை பெறும்போது Reverse Charge Mechanism (RCM) ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்றால் தண்டம் மற்றும் அபாரதத்தின் மீதும் வரி உண்டா?
பதில்: அதன் மேல் ஜிஎஸ்டி வரி கட்ட தேவை இல்லை..
கேள்வி: ஆபரண தங்கம் மற்றும் வைரம் இறக்குமதிக்கு ஜிஎஸ்டி வரி உண்டா?.
பதில்: ஆம். சுங்க வரி செலுத்திய பின் 3% IGST விதிக்கப்படும். அந்த ஐஜிஎஸ்டியை Input Tax Credit- ITC எடுத்து கொள்ளலாம்
கேள்வி: ஜிஎஸ்டி போர்ட்டலில் என்னுடைய ரீஃபண்ட் ஸ்டேட்டஸ் எவ்வாறு தெரிந்து கொள்வது?
பதில்: ஜிஎஸ்டி portal ™ Services > Refunds > Track Application Status service ல் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: என்னுடைய எல்லா சப்ளையும் zero rated (exports) ஆக இருந்தால் ஜிஎஸ்டி பதிவு தேவையா?
பதில்: ஆம். கொள்முதலில் உள்ள ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறுவதற்கோ இல்லை output IGST யை திரும்ப (ரீஃபண்ட்) பெறுவதற்கோ ஜிஎஸ்டி பதிவு அவசியம் தேவை.