Latest Posts

நிலக்கரி சாம்பல் மொத்த விற்பனையில் அசத்தும், நஜ்முன்னிசா

- Advertisement -

சென்னை, செங்குன்றத்தைச் சார்ந்த திருமதி. நஜ்முனிசா, எம்பிஏ படித்திருக்கிறார். அவருக்கு தொழில் தொடர்பாக பெரிய கனவு இருந்திருக்கிறது. அந்தக் கனவு திருமணத்திற்கு பின்புதான் நிறைவேறியது என்கிறார், இவர். அது எப்படி? அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் –


பிஸ்மில்லா டிரேடர்ஸ் தொடங்கியது எப்படி?
அனைத்து சராசரி பெண்கள் மாதிரிதான் என் வாழ்க்கையும் நகர்ந்தது. நன்றாக படித்தேன். எம்பிஏ முடித்தேன். திருமணமும் சிறப்பாக முடிந்தது. என் கணவர் திரு. ஷேக் அப்துல்லா, என்னுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டு என்னை ஊக்குவிப்பவராக இருந்தார். அதுதான் என் தொழில் கனவை நிறைவேற்ற துணையாக அமைந்தது. “உனக்கு என்ன வணிகம் செய்ய ஆசையோ அதைச் செய், உனக்கு பக்கபலமாக இருக்கிறேன்” என்று உறுதி அளித்தார். அவர் கொடுத்த அந்த உறுதி எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. என்ன வணிகம் செய்யலாம், எதை நம்மால் செய்ய முடியும் என்று சிந்தித்தேன். பல வணிகம் பற்றி சிந்தித்து பின்னர் ஃப்ளைஆஷ் (Fly Ash) எனப்படும் நிலக்கரி சாம்பல் விற்பனைத் தொழிலைத் தேர்ந்து எடுத்ததேன்.


ப்ளை ஆஷ் பயன்பாடு பற்றி சொல்ல முடியுமா?
ஃப்ளை ஆஷ் பெரிய அனல் மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து பெறப்படும் துணைப் பொருள் ஆகும். இது ஹாலோ பிளாக் செய்வதிலும் சிமென்ட் செங்கல் தயாரிப்பிலும், சிமென்ட் ஆலைகளின் ஒரு மூலப் பொருளாகவும் பெருமளவு பயன்படுகிறது. அண்மையில் இயற்கை மணல் தட்டுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமான பணிகளிலும் சிமென்ட் உடன் குறிப்பிட்ட அளவு கலந்து பயன்படுத்தப்படுகிறது. ஃப்ளை ஆஷ் குவியல்களை அள்ளி விற்பனை செய்ய அரசு டெண்டர் விடும். டெண்டர் எடுப்பவர்கள் நிலக்கரி சாம்பலை எடுத்து விற்பனை செய்யலாம். நாங்கள் தமிழ்நாடு முழுவதும் நிலக்கரி சாம்பலை அனுப்பி வருகிறோம்.


ஃப்ளை ஆஷ் விற்பனை மட்டுமா? வேறு தொழில்களும் செய்கிறீர்களா?
2009 – ல் ஃப்ளை ஆஷ் வணிகத்தைத் தொடங்கும்போது, அதை மட்டுமே செய்து வந்தேன். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வாகனங்களை ஒப்பந்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், எங்களுடைய பெயரிலேயே டிரான்ஸ்போர்ட் தொழிலையும் இணைத்துக் கொண்டோம். இப்போது, எங்களுடைய சொந்த லாரிகள் உட்பட ஒப்பந்த லாரிகளையும் சேர்த்து 150 லாரிகள் எங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதனால், தமிழ்நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எங்களால் விரைவாக பொருளை எடுத்துச் செல்ல முடியும்.


பெண் தொழில் முனைவோர் என்பதால் நெருக்கடிகள் உண்டா?
நிறைய நெருக்கடிகளைச் சமாளித்துதான் தொழில் செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு பெண் நம்மை விட வேகமாக வணிகம் செய்கிறார். டெண்டரையும் எடுத்து விடுகிறார். எப்படி? என்று சிலர் வெவ்வேறு விதமாக நெருக்கடி கொடுப்பது உண்டு. ஆனால், எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை துணிச்சலுடன் செய்வேன். குறிப்பாக, சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே என்னுடைய தொழில் முயற்சிகளில் நான் செயல்படுவேன். அதனால் அந்த குறுகிய மனம் படைத்த சிலர் தரும் நெருக்கடிகள் மற்றும் போட்டிகள் எதுவும் பெரியதாக என்னை பாதித்தது இல்லை. இந்த தொழிலில் தமிழ்நாட்டில் 100 ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்கிறேன். எனக்கு பெரும் துணையாக என் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருக்கின்றனர்.


இந்த தொழிலில் சவால் என்று எதை எடுத்துக் கொள்வீர்கள்?
நான், எல்லாவற்றையும் சேலஞ்சாகத்தான் எடுத்து செய்கிறேன். ஆனால், பெரிய சேலஞ்ச் என்பது லாரிகளை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்புவதுதான். குறிப்பாக, ஒரு லாரியில் லோடு அனுப்பும் போது ஓவர் லோடு இருக்கக் கூடாது. அதை சரி பார்ப்போம், அந்த வண்டிக்கான உரிமம், ஓட்டுநர் உரிமம், சீருடை, வண்டிக்கான பெர்மிட் என அனைத்தும் சரி பார்த்து அனுப்புவோம்.


பொதுவாக எந்த ஒரு வாகனத்திலும் சட்டத்திற்கு உட்பட்டு பொருட்களை அனுப்பினால், சிக்கல் வர வாய்ப்பு இல்லை. இந்த சரிபார்ப்பை ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும். இதை எல்லாம் சரிபார்த்து முடித்து விட்டு தூங்கப் போவதற்கு இரவு 12 முதல் 1 மணி ஆகி விடும். தினமும் 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. ஒரு வேளை எதிர்பாராமல் வாகனங்கள் எதுவும் பழுது ஆகி நின்று விட்டால், விபத்துகள் நேரிட்டு விட்டால், அதை மீட்டு எடுக்கும் பொறுப்பை எனது கணவர் எடுத்துக் கொள்வார். டிரான்ஸ்போர்ட் தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை அவர்தான் கவனித்துக் கொள்கிறார்.


உங்களுடைய வெற்றிக்கான உத்தி?
எளிமையான ஒரே உத்திதான். சில வணிகர்கள் ஒரு பொருளுக்கு 100 ரூபாய் லாபம் வைத்து 10 பேர்களிடம் விற்கிறார்கள். நான், 10 ரூபாய் லாபம் வைத்து 1000 பேர்களிடம் விற்பனை செய்கிறேன்.. குறைந்த விலையில் கிடைக்கும் போது, அதிக விற்பனை இருக்கும் என்பது புதிது அல்ல. ஆனால், குறைந்த லாபத்தில் விற்பதற்கு மனசும், ஆளுமையும் வேண்டும். அது என்னிடம் இருப்பதால் துணிந்து செய்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், “தன்னிச்சையாக செய்யணு; தன்னம்பிக்கையோட செய்யணும்“ என்பதை ஒரு முழக்கமாகவே வைத்திருக்கிறேன்.


குடும்பம் பற்றி..
எனக்கு முகமது அப்ரிடி, முகமது அசார் என்று இரண்டு பசங்க. ஒரு பையன் நான்காவது படிக்கிறான். ஒரு பையனுக்கு ஒரு வயசு ஆகப்போகிறது. இவர்களை எங்கள் பெற்றோர் அன்புடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை முழுவதும் அவர்களோடு மட்டுமே என் நேரத்தை செலவிடுவேன். குடும்பத்தோடு வெளியில் போவோம். அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து மகிழ்வோம். ஒவ்வொரு நாளும் அவர்களோடு தூங்கி எழுவதால், பெரிய அளவில் மிஸ் பண்ணுவதாக தோன்றவில்லை. (9962814308)

-குறளமுதன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]