இப்போது வருமான வரிப் படிவத்தில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்க்க வேண்டும்

பொதுவாக 2016-17 ஆம் நிதியாண்டு வரையில் நிறுவனங்கள், தங்களுடைய வருமானவரிப் படிவங்களை (IncomeTax Return (ITR)) சமர்ப்பிக்கும் போது எக்சைஸ் டூட்டி, வாட் என்பன போன்ற மறைமுகவரி விவரங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டி இருக்கவில்லை.

தற்போது ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வருமானவரிப் படிவத்தில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும் எனும் நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதாவது ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த வியாபார வருமானமும், தொழில்முறை (Professional) வருமானமும் பெறுபவர்கள் தங்கள் வருமானவரி அறிக்கையில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

சம்பளம் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் பெறுபவர்களான மிஜிஸி 1 . ITR 2 ஆகிய வருமானவரி படிவங்களை வழங்குவோர் தங்கள் மிஜிஸி களுடன் எந்த ஜிஎஸ்டி விவரங்களையும் வழங்க வேண்டியது இல்லை.

ஆனால் ITR 3 முதல் ITR 6 வரையிலான வருமானவரிப் படிவங்களை அளிப்போர் தங்கள் வருமானவரி அறிக்கையில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

வருமானவரிப் படிவம் ITR 3 அளிப்போர், தங்கள் வருமானவரிப் படிவத்துடன் ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் 9 மாத விற்பனையில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விவரங்களான CGST, SGCT, IGST, UTGST ஆகியவற்றுடன் சேர்த்து அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் இந்நிறுவனங்கள் ஜிஎஸ்டி இணையதளத்தில் (GST potral) ஏற்கனவே அளித்த இது தொடர்பான தங்களுடைய மின்னணு பொறுப்பு பதிவேட்டின் (Electronic Liability Register) விவரங்களுடன் சரியாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து தாம் கொள்முதல் செய்த பொருட்களுடன் சேர்ந்த CGST, SGST, IGST, UTGST ஆகிய ஜிஎஸ்டி வரியை தாங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியில் கழித்து நிகரமாக செலுத்தி இருப்பார்கள். இந்த ஜிஎஸ்டி வரவு தொகை, இதே ஜிஎஸ்டி தளத்தில் ( GST potral ) ஏற்கனவே அளித்து உள்ள இது தொடர்பான இவர்களின் மின்னணு வரவு பதிவேட்டின் (electronic credit ledger) விவரங்களுடன் சரியாக இருக்கவேண்டும்

அதனோடு வரி செலுத்துவோர் நிகரமாக தாம் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி விவரங்களை தங்கள் வருமானவரி விவரங்களில் தெரிவிக்க வேண்டும். இந்த நிகர ஜிஎஸ்டி வரியானது இவர்களுடைய ஜிஎஸ்டி போர்ட்டலில் ஏற்கனவே அளித்து உள்ள இது தொடர்பான நிகர தொகையாக உள்ள மின்னணு ரொக்க பேரேட்டுடன் (electronic cash ledger) சரியாக இருக்க வேண்டும்.

மேலும் வரி செலுத்துவோர் 31.03.2018 அன்று தாம் நிகரமாக செலுத்த வேண்டிய CGST, SGST, IGST, UTGST ஆகிய ஜிஎஸ்டி வரியை தம் வருமானவரி விவர அறிக்கையில் (ITR) குறிப்பிட வேண்டும்.

வரி செலுத்துவோர், தாம் அதிகமாக செலுத்திய CGST, SGST, IGST, UTGST ஆகிய ஜிஎஸ்டி வரியில் அரசிடம் இருந்து மிகுதி வரவேண்டிய, ஆனால் இலாப நட்ட கணக்கில் வருமானமாக காட்டப் படாதவை ஏதேனும் இருந்தால் அவ்விவரங்களை தனியாக தங்களுடைய வருமானவரி விவர அறிக்கையில் காண்பிக்க வேண்டும்.

வருமானவரிபடிவம் ITR 4 அளிப்போர், தங்கள் வருமானவரி படிவத்துடன் ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்பட்ட 9 மாத விற்பனையின் மொத்த விற்பனை வருமான விவரங்களை அளிக்க வேண்டும். இந்த தொகையும் இவர்கள் ஏற்கனவே அளித்த ஜிஎஸ்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள தொகையும் சரியாக இருக்க வேண்டும். மேலும் இவர்களின் ஜிஎஸ்டி பதிவு எண்ணை தங்கள் வருமானவரி படிவத்தில் குறிப்பிடவேண்டும்.

இது ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்படும் முதல் ஆண்டாகும். அதனால் ஜிஎஸ்டி செலுத்துவோர், சரியாக புரிந்து கொள்ள இயலாமல் இந்த ஆண்டு சில தவறுகளை செய்து இருக்கலாம். மேலும் வரி செலுத்துவோருக்கு, தங்களுடைய ஜிஎஸ்டி கணக்கில் பதிவு செய்து உள்ள கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது கடினமான பணியாகக்கூட இருக்கலாம். இருப்பினும் வரி செலுத்துவோர், வருமான வரிப் படிவத்தை (ITR) அளிப்பதற்கு முன் ஜிஎஸ்டி ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி ஆலோசகர்கள், ஆடிட்டர்களின் துணையையும் நாடலாம்.

ஜிஎஸ்டி வந்த பிறகு வணிகர்களின் சிரமங்கள், செலவுகள் கூடித்தான் இருக்கின்றன. ஜிஎஸ்டி நடைமுறைகளை இன்னும் எளிமைப்படுத்தினால்தான் வணிகர்களின் சிரமமும், செலவுகளும் குறையும்.

– முனைவர் ச. குப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here