Thursday, September 23, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம், பதிவு பெறுவது எப்படி?

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் நடைமுறையில் இருந்து வந்த உணவு தொடர்பான சிக்கல்களைக் கையாளும் பல்வேறு சட்டங்களையும் ஆணைகளை யும் ஒருங்கிணைத்து புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 (Food Safety and Standards Act, 2006) என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

- Advertisement -

இந்த சட்டத்தை கண்காணித்து செயல்படுத்துவதற்காக இதன் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (The Food Safety and Standards Authority of India (FSSAI)) என்பது உற்பத்தி, சேமித்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் ஆகிய உணவு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காகவும், உணவிற்கான அறிவியல் அடிப்படை யிலான தரநிலைகளை பராமரிப்பதற் காகவும், உருவாக்கப்பட்டு உள்ளது. இது மனித நுகர்விற்கான பாதுகாப் பானதும் ஆரோக்கியமானது-மான உணவு கிடைக்கும் தன்மையை உறுதிப் படுத்துகிறது.

உணவு மாசுறுதல் தடுப்பு சட்டம் 1954 (Prevention of Food Adulteration Act, 1954), பழங்களின் உற்பத்திகள் ஆணை,1955 (Fruit Products Order, 1955), இறைச்சி உணவுகளின் உற்பத்திகள் ஆணை, 1973 (Meat Food Products Order, 1973), தாவர எண்ணெய் உற்பத்திகள் (கட்டுப்பாட்டு) ஆணை, 1947 (Vegetable Oil Products (Control) Order, 1947), சமையல் எண்ணெய் பேக்கேஜிங் (ஒழுங்குமுறை) ஆணை 1988 (Edible Oils Packaging (Regulation)Order, 1988), எண்ணெய், சமையல் உணவு மற்றும் சமையல் மாவு (கட்டுப்பாட்டு) ஆணை, 1967 (Solvent Extracted Oil, De- Oiled Meal and Edible Flour (Control) Order, 1967), பால் மற்றும் பால் பொருட்கள்ஆணை,1992 (Milk and Milk Products Order, 1992) என்பன போன்ற பல்வேறு சட்டங்கள், ஆணைகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் நாள் முதல் நீக்கம் செய்யப்பட்டு அவைகளுக்கு பதிலாக இந்த புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் சட்டம், 2006 நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது .

உணவு பாதுகாப்பு, தர நிலைகள் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதற்கு எந்த ஒருவரும் பல்வேறு நிலைகளுக் கும், பல்வேறு துறை களுக்கும் செல்வதற்கு பதிலாக ஒற்றைச் சாளர முறையில் தீர்வு காண்பதற்கு, இந்திய உணவு பாது காப்பு மற்றும் தர நிலைகள் ஆணையம் வழிவகை செய்கின் றது.

இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் உள்ளது.. இந்தியாவில் எந்தவொரு உணவு தொடர்பான வணிகத்தையும் தொடங்குவதற்கு முன் இந்த FSSAI உரிமம் பெறுதல் அல்லது எஃப்எஸ்எஸ்ஏஐ-இல் பதிவு செய்தல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், மளிகைக் கடைகள், ஏற்று மதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வீடுகள் சார்ந்த உணவு தொழில்களை செய்பவர்கள், பால்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், உணவு உற்பத்தி செய்பவர் கள், சில்லறை விற்பனையாளர்கள், இணையம் வழியிலான விற்பனை யாளர்கள் போன்ற உணவு வியாபா ரத்தில் ஈடுபட்டு உள்ள பல்வேறு உணவு தொடர்பான வணிகங்கள் அனைத்தும் இந்த எஃப்எஸ்எஸ்ஏஐ – இல் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு ஒதுக்கப்படும் 14 இலக்க பதிவு எண், அல்லது உணவுப் பொதிகளில் அச்சிடப்பட வேண்டிய உணவு உரிமஎண் பெறப்பட வேண்டும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெற வேண்டியவர்கள்

இணையத்தின் வாயிலாக அல்லது நேரடியாக உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள்; உற்பத்தி செய்தல், கட்டுதல், விற்பனை செய்தல், ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல் ஆகிய உணவு உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து நுகர்வோர்களிடம் சென்றடையும் வரையிலான அனைத்து பணிகளையும் கையாளுபவர்கள்; பிஸ்கட் போன்ற தயார்நிலை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்; பால், பால்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்; உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லும் போக்குவரத்த் நிறுவனங்கள்; ஊறுகாய், உலர் பழங்கள் தயாரிப்பவர்கள்; .பொருட்களை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் மற்றும் கிழங்குகள்; .உணவகங்கள் ஆகியன.

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமங்களின் / பதிவுகளின் பல்வேறு வகைகள்

எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் நடுவணரசு உரிமம்

ஒரு நிறுவனத்தின் உணவு வணிக ஆண்டு வருமானம் ரூ. 20 கோடிக்கு மேல் இருந்தால் எஃப்எஸ்எஸ்ஏஐ நடுவணரசு உரிமம் (Central License) பெற வேண்டும். இந்த உரிமம் நடுவண் அரசால் வழங்கப்படுகிறது. மேலும், உணவுப் பொருள் தொடர்பான தொழில் செய்யும் FBO (Food Business Operator) கள் தங்கள் தலைமை அலுவலகத்திற்கு இந்த சென்ட்ரல் லைசன்சை பெற வேண்டும்.

அதிலும் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் உணவு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும் நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்களை கொண்ட உணவு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும், எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் சென்ட்ரல் உரிம அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒவ்வொரு கடையின் விற்பனை வருமானத்தின் அடிப்படையில் மாநில அல்லது சென்ட்ரல் உரிமத்தை பெற வேண்டும். இந்த உரிமத்தின் காலம் ஒராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் மாநில உரிமம்

உணவு தொடர்பான வணிகத்தைச் செய்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கும் மேல் ரூ. 20 கோடிக்குள் இருப்பவர்கள் எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் மாநில உரிமத்தைப் பெற வேண்டும்.

மேலும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன்களுக்கு மேல் உணவு உற்பத்தித் திறன் கொண்ட உற்பத்தியாளர்கள், நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் லிட் டருக்கு மேல் கையாளும் பால் பொருட்கள் உற்பத் தியாளர்கள், மூன்று நட்சத்திர மற்றும் அதற்கு மேல் நட்சத்திர தகுதி உள்ள தங்கும் விடுதிகள், உணவுப் பொருட்களை ரீபேக் செய்பவர்கள், மறுபெயர் அச் சிட்டு ஒட்டுபவர் கள், பொழுது போக்கு மன்றங்கள், உணவகங்கள், ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் கேட்டரிங் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங் களும் எஃப்எஸ்எஸ்ஏஐ மாநில உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தின் காலமும் ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு

சிறிய அளவிலான உணவு உற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகன நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகிப்பாளர் கள் போன்ற உணவு தொடர்பான நிறுவனங்களின் ஆண்டு வணிக வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் அனைவரும் எஃப்எஸ் எஸ்ஏஐ – இல் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஆண்டு வணிக வருவாய்ரூ.12 லட்சத்துக்கு மேல் உயரும் போது இந்த எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவினை மாநில உரிமமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வதற்கான ஆவணங்கள்

மத்திய மற்றும் மாநில எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமத்திற்கு, உரிமையாளரின்/இயக்குநர்களின்/நிறுவனத்தின் வருமானவரி பதிவுஎண் (PAN); .உரிமையாளரின்/இயக்குநர்களின் ஆதார், கடவுச்சீட்டு, வாக்காளர் அட்டை, போன்றவை; .உரிமையாளரின் / இயக்குநர்களின் மார்பளவு உருவப்படம்; வாடகை ஒப்பந்தம், சொந்த இடம் எனில் அதற்கான சான்று; நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டாண்மை ஒப்பந்தம்/MOA & AOA சான்றிதழ் போன்றவை; தயாரிக்கும் அல் லது பதப்படுத்தும் அல்லது சேமிக்கும் உணவுப் பொருட்களின் பட்டியல்; .உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஏதேனும் இருந்தால் தயாராக இருக்கும் வர்த்தக உரிமம்; .நிறுவனம் உற்பத்தி செய்யும் அல்லது கையாளும் உணவு வகைகளின் பட்டியல்; நிறுவனத்தில் கையாளப்படும் எந்திரங்கள், கருவிகளின் பட்டியல்

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வதற்கான ஆவணங்கள்

உரிமையாளரின்/இயக்குநர்களின்/நிறுவனத்தின் வருமானவரி பதிவுஎண் (PAN); .உரிமையாளரின்/இயக்குநர்களின் ஆதார், கடவுச்சீட்டு, வாக்காளர் அட்டை, போன்றவை; .உரிமையாளரின் / இயக்குநர்களின் மார்பளவு உருவப்படம்; வாடகை ஒப்பந்தம், சொந்த இடம் எனில் அதற்கான சான்று; நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டாண்மை ஒப்பந்தம்/விளிகி & கிளிகி சான்றிதழ்

எஃப்எஸ்எஸ்ஏஐ இணையத்தின் வாயிலாக பதிவு செய்வதற்கான வழிமுறை பின்வருமாறு –

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து தகுதிகளும், தேவையான ஆவணங்களும் இருக்கின் றதாவென முதலில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நாம் பெற வேண்டியது, உரிமமா (லைசன்ஸ்) அல்லது பதிவா (ரெஜிஸ்ட்ரேஷன்) என்பதை முடிவு செய்ய வேண்டும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ இணைய பக்கத்திற்கு சென்று பயனாளர் பெயர், கடவுச் சொற்களுடன் இந்த உணவு உரிமம் மற்றும் பதிவு முறை இணைய தளத்திற் குள் உள்நுழைவு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் வலைத்தளத்தில் உரிமம் / பதிவு படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து நிரப்ப வேண்டும்.

பின்னர்அவ்விவரங்களுக்கான சான்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு பதிவு செய்வதற்கான கட்டணத்தை (மத்திய உரிமம், மாநில உரிமம் அல்லது/பதிவு ஆகியவற்றின்) இணையத்தின் வாயிலாக அல்லது சலான் வழியாக செலுத்த வேண்டும்.

தொடர்ந்து இதே இணையதள பக்கத்தில் உருவாகும் படிவம் ஙி ஐ அச்சிட்டு அதில் பதிவு செய்பவர் தம்முடைய கையெழுத்தினை இட்டு அந்த படிவத்தை ஸ்கேன் செய்து அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். உடன் இந்த விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கப் பெறும்.

இணையம் வாயிலாக நிரப்பிய பின், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அரசானது இந்த படிவத்தை நமக்கு திரும்ப அனுப்பி வைக்கும். படிவம் நமக்குக் கிடைத்த நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் நாம் அதனை சரிசெய்து அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அதில் கேட்கப்பட்ட விவரங்களை சரி செய்து பதில் அளிக்கா விட்டால், நம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பொதுவாக இவ்வாறு நாம் விண்ணப்பிக்கும் நம் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாநில அல்லது மத்திய எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் எனில் 30 முதல் 50 வேலை நாட்களுக்குள் அரசானது அதற்கான ஒப்புதலை வழங்கும். அடிப்படை பதிவிற்கு மட்டும் எனில் 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் அரசு அதற்கான ஒப்புதலை வழங்கும் (ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப இந்த காலஅளவு மாறுபடும்).

– முனைவர் ச. குப்பன்

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.