Latest Posts

அமெரிக்காவுக்கு விளையாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்

- Advertisement -

அமெரிக்கக் குழந்தைகள் என்றால் எல்லோரும், ‘கம்ப்யூட்டரில்தான் விளையாடுவார்கள், கைபேசிகளில்தான் காலம் தள்ளுவார்கள்’ என பலரும் தவறாய் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. குழந்தைகள் என்றால் எல்லா நாட்டிலும் ஒன்றுதான்.


பல சந்தைகளிலும், திருவிழாக்களிலும் குழந்தைகள் அதிகம் வாங்குவது பலூன்கள்தான். சிலருக்கு இது வியப்பாய் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. நம் ஊரில் விற்பனை ஆகும் அதே மாதிரி வண்ணவண்ண பலூன்கள் அமெரிக்காவிலும் பல வடிவங்களில் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் இவை கடைகளையும், வீடுகளையும் அலங்கரிக்கின்றன.


நீண்ட நாட்கள் கடுங்குளிர் வாட்டுவதாலும், ஏழு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை பெரியவர்கள் துணை இல்லாமல் விளையாட விடக் கூடாது எனும் சட்டம் இருப்பதாலும் தெருக்களில் குழந்தைகளை சாதார ணமாகப் பார்க்க முடியாது. இதனை சில எழுத்தாளர்கள் தவறாகக் கணித்து விடுகின்றனர்.


குளிர் காலங்களில் குழந்தைகள் வீட்டுக்கு உள்ளேயேதான் விளையாடிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தயாரிக்கப்பட்டவையே வீடியோ கேம் எனும் காட்சி விளையாட்டுகள். இவற்றை நம் ஊர் குழந்தைகளுக்கு தேவை இல்லாமலேயே வாங்கிக் கொடுக்கிறோம். இந்த காட்சி விளையாட்டுகளாக நம் ஊர் கபடி, கிட்டிப்புள், பல்லாங்குழி போன்ற எண்ணற்ற விளையாட்டுகளை தயாரித்துக் கொடுத்தால் அவற்றுக்கும் அமெரிக்காவில் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கக் கூடும். மாற்றத்தை விரும்புவது மனித இயல்பு. குழந்தைகள் என்றால் கேட்கவா, வேண்டும்.


அமெரிக்காவுக்கு குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அவர்கள் தயாரிப்புகள் அனைத்தும் பிளாஸ்டிக் கால் இருக்கின்றன. நாம் நடைவண்டி களை மரத்தில் தயாரித்து அனுப்பினால் வரவேற்பு கிடைக்கக் கூடும். தரம் மிகவும் முக்கியம். குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம். குழந்தைகளுக்கு சிறு கீறல்களை ஏற்படுத்தி விடும் அளவில் மழமழப் பாக்காத பொருள்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல. குழந்தை களுக்கு ஒவ்வாமையே ஏற்படுத்தி விடும் வண்ணப்பூச்சுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஏனெனில் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவேற்று வதில் அமெரிக்க அரசினர் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப் பற்ற, தவறான பொருட்களை விற்றால் சிறை தண்டனை கிடைக்கும். இறக்குமதி தடைபடும். வண்ணங்கள் தரமற்றவை என்றாலும் நடவடிக்கை பாயும். இழப்பு ஏற்படும்.


விளையாட்டுப் பொருட்கள், அதற்கான தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் ஆலோசனையோடுதான் தயாரிக்கப்பட்டன என்பதற்கான சான்று லேபிள்கள் ஒவ்வொரு பொருளிலும் ஒட்டப்பட வேண்டும்.


குழந்தைகளுக்கான தொட்டில்களுக்கு அதிக தேவை இருக்கிறது. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும் தொட்டில்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அலைந்து திரிந்துதான் வாங்க வேண்டியது இருக்கிறது. என் பேத்திக்கு தொட்டில் வாங்க படாதபாடுபட்டோம். எனினும் சரியாக அமையவில்லை.


அங்கே வீடுகளின் சுவர்களும், கூரைகளும் மரத்தால் செய்யப்படுகின்றன. எனவே மேற்கூரையில் வளையம் அடிக்க முடியாது. சுவர்கள் பொதுவாக பிளைஉட் கொண்டு அமைக்கப்படுபவை. எனவே இரண்டு சுவர்களில் ஆணி அடித்து தொட்டில் கட்ட முடியாது. தூக்கி நிறுத்தக்கூடிய தூண் போன்றவை வளையங்களுடன் கூடிய அமைப்பு பரவலாகக் கிடைக்கின்றது. தொட்டிலை இயல்பாக ஆட்டி விட்டால் தூணில் இடிக்கும். நாம் அருகேயே நிற்க வேண்டும். இதுவும் சீனத் தயாரிப்புதான். இதற்கு மாற்றாக, இதில் உள்ள குறைகள் இல்லாமல் யாராவது தொட்டிலை வடிவமைத்து தயாரித்து அனுப்பினால் வரவேற்பு கிடைக்கும்.


படிப்புடன் கூடிய விளையாட்டுப் பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கூட்டல், கழித்தலை கற்றுத் தரும் பொம்மைகள், எழுத்துகளைப் புரிய வைக்கும் பொம்மைகள் அல்லது விளையாட்டுப் பொருட்களுக்கும் வாய்ப்புகள் உண்டு. தொடக்கப் பள்ளிக்கான பாடநூல்கள் அரசு தயாரிப்பது இல்லை; பாடத் திட்டங்களை கொடுப்பதும் இல்லை. ஆனால் பள்ளிக் கூடங்களை அரசுதான் நடத்துகிறது. அறிவுத் திறனை வளர்க்கும் எதனையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.


முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிங்கப்பூரில் தயாரிக்கப் பட்ட புத்தகங்களைக் கூட பயன்படுத்து கிறார்கள். நாமும் இத்தகைய புத்தகங் களை தயாரிப்பது குறித்து சிந்திக்கலாம்.


அமெரிக்காவில் வாழும் சுமார் முப்பது லட்சம் இந்தியர்களும் அரிசிச் சோறு உண்ண விரும்புகிறார்கள். வட இந்தியர்கள் பொதுவாக பாசுமதி அரிசி வாங்க விரும்புகிறார்கள். தென் இந்தியர்கள் பொன்னி அரிசியும், இட்லி அரிசியும் அதிகம் வாங்குகிறார்கள். நல்ல பொன்னி அரிசி, இட்லி அரிசியை அனுப்புகிறவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.


எந்த பொருளை அனுப்பினாலும் தரமாக அனுப்புங்கள். தரமற்ற உணவுப் பொருள்கள் என்று நுகர்வோர் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். சில நேரங்களில் கடையையே மூடி விடுவார்கள். இறக்குமதியாளரைத் தேடிப்பிடித்து தண்டம் விதிப்பார்கள்.


அவர்கள் தண்டம் விதிப்பார்கள் என்பதற்காக அல்ல; வணிகத்தில் உறுதியாக வளர்வதற்குத் தேவையான பண்பு நம்பகத் தன்மையுடன் செயல்படுதல் மற்றும் தரமான பொருட்களைக் கொடுத்தல் என்பது உலகம் அறிந்த ஒன்றுதானே!

– நாஞ்சில் நடராசன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]