Friday, December 4, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

பொருட்கள் ஏற்படுத்தும் மாசுக்கு உற்பத்தியாளரே கடைசி வரை பொறுப்பு ஏற்க முடியுமா?

உற்பத்தியாளரின் நீட்டித்த பொறுப்பு (Extended Producer Responsibility – EPR) என்ற சொற்கள், தற்போது இதழ்களிலும், நடுவண் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் அதிகம் உச்சரிக்கக் கூடிய சொற்களாக உள்ளன. இந்த சொற்கள் முதன் முதலில் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு, நடுவணரசு வெளியிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை மற்றும் நிர்வகித்தல் விதிகளில் (Plastic Waste Management – PWM) சொல்லப்பட்டது. இதில் சொல்லப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான விதிகள் எதையும் இன்று வரை எந்த ஒரு மாநில அரசாங்கமும் நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத சூழ்நிலையில் அந்த விதிகளில் ஒரு பிரிவான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? 2011 – க்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நடுவண் அரசின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளிலும் இபிஆர் பற்றிக் கூறப்பட்டு இருந்தது. அப்போதும் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. தற்போது பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை ஏற்பட்ட பிறகு, இப்போது நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு என்ன ஆயிற்று என்று அனைவரும் பேசத் தொடங்கி உள்ளார்கள்.

மேற்படி நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு என்கின்ற கருத்தாக்கம் கூட, எப்போதும் போல மேலை நாட்டைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட கருத்துதான். ஸ்வீடன் நாட்டில் தாமஸ் லிண்ட்லிஸ்ட் என்பவரால் 1990 – ல் உருவாக்கப்பட்டு ஸ்வீடன் அமைச்சரவையின் சுற்றுச் சூழல் துறையில் இபிஆர் விவரங்கள் அளிக்கப்பட்டன. நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு என்பதை எளிமையாக புரியும்படி சொல்வது என்றால், ‘ஒரு பொருளை உற்பத்தி செய்பவர், அந்த பொருளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையில், அந்த பொருளின் முழு சுழற்சி வரை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவது அவரின் பொறுப்பு ஆகும்.

இது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமான கருத்தாக்கம் இல்லை. உலகில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுக்குமான கருத்தாக்கம்தான் இந்த நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு என்ற கருத்ததாக்கம் ஆகும்.

Extended Producer Responsibility

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களின் மக்கள்தொகை, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளின் மக்கள் தொகையைக் கூட்டினால் கூட, ஒரு மாநி லத்தின் மக்கள்தொகைக்கு ஈடாகாது. மேலும், ஐரோப்பாவில் சிறு, குறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அங்கு உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் நடுத்தர அல்லது பெரிய தொழிற்சாலைகள்தான்.

ஒரு பொருளைத் தயாரிப்பவர் மட்டும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பொறுப்பு என்பதைப் போல இதை ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது. ஏன் என்றால் ஒரு பொருளை உற்பத்தி செய்பவர் மட்டும் அந்த பொருளை விற்பனை செய்வதால் பயன் அடைவது இல்லை. சான்றாக பிளாஸ்டிக் தொழிலை எடுத்துக் கொண்டால், பிளாஸ்டிக் மூலப் பொருள் உற்பத்தியாளர்கள், அவரிடம் மூலப் பொருட்களை வாங்கி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் மொத்த வணிகர்கள், மொத்த வணிகர்களிடம் வாங்கி சில்லரையில் விற்பனை செய்பவர்கள், பொருள்களை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர், பொருளின் பயன்பாடு முடிந்த உடன் அவற்றை கழிவுகளாக சேகரிக்கும் மறுசுழற்சி கடை நடத்துபவர்கள், அந்த கழிவுப் பொருட்களை வாங்கி மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை தயாரிப்பவர்கள், அனைத்து மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சேகரித்து மேலாண்¬ம் செய்ய வேண்டிய அரசுகள் – இவ்வாறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில் இருந்து, அவை கழிவுகளாக மாறும் வரை பல நிலைகளைக் கடக்கிறது.

தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட உடன், அதை நீக்கச்சொல்லி பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அந்தந்த மாநில அரசுகளை அணுகும்போது, அந்த மாநில அரசுகள், ‘உங்கள் தொழிலில் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவுகள்தான் சிக்கலாக இருக்கிறது. இந்த சிக்கல் இல்லை என்றால் தடை செய்ய வேண்டிய தேவை இருக்காது’ என்கின்றன. உடனே அங்கே சென்ற பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி யாளர்கள், ‘நாங்கள் தயாரிக்கும் பொருகள்கள் கழிவுகள் ஆன உடன் அவற்றை நாங்களே மீண்டும் வாங்கி மறுசுழற்சி செய்து குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உரையாடல் நிகழ்த்துகிறார்கள்.

இவர்கள் இப்படிக் கூறுவது, தீவிர பரிசீலனைக்கு உரிய ஒன்று. பிளாஸ்டிக்கில் சில பொருட்கள் கழிவுகள் ஆன உடன் உற்பத்தியாளரே வாங்கிக் கொள்ள முடியும். சான்றாக பெட் பாட்டில்களை வாங்க முடியும். எப்படி என்றால் பெட் பாட்டில்களை பயன்படுத்தும் பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள். மேலும் குளிர்பானங்களைத் தவிர்த்து பெட் பாட்டில்கள் குடிநீர் அடைப்பதற்குத்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குளிர்பானத்தையோ, குடிநீரையோ குடித்த உடன் அந்த பெட் பாட்டில்கள் கழிவு ஆகி விடுகின்றன. அது மட்டுமல்லாமல், பெட் பாட்டில் கழிவுகளை கையாளுவது எளிது. அவற்றை சில்லரையாக வாங்கி, நசுக்கி, மொத்தமாக பேல்களாகப் போட்டு, பெரிய அளவில் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். பெப்சி, கோக் போன்ற நிறுவனங்களால் அவர்கள் பயன்படுத்தும் பெட் பாட்டில்களை சேகரிக்க, அவர்கள் முகவர்கள் வாயிலாக இந்தியா முழுவதும் வலைப் பின்னலை ஏற்படுத்த முடியும்.

ஆனால், பேக்கிங் பொருட்களை, குறிப்பாக ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசி எறியப்படும் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களில் 95% பேர்கள் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் ஆவார்கள். இவர்கள் தயாரிக்கும் கேரி பைகளை எடுத்துக் கொண்டால், அவற்றின் முதல் பயன்பாடு முடிந்த உடனேயே கழிவு ஆகி விடுவது இல்லை. கேரி பைகள் மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்தப்பட்ட பின்னர், கடைசியாக அந்த பையில் வீட்டில் சேரும் அனைத்து குப்பைகளையும் போட்டு, முடிச்சு போட்டு குப்பைத் தொட்டிகளில் அல்லது தெருக்களில் வீசி எறிந்து விடுகிறார்கள். முதலில் பேக்கிங் பொருளாக இருக்கும் கேரி பைகள் முடிவில் குப்பைகளை சேகரிக்கும் பைகளாக (கார்பேஜ் பேக்ஸ்) உருமாறுகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள், கேரி பைகளை தடை செய்த பின்னர், சிறிது நாட்களில் நகரின் குப்பைப் பிரச்சினை, இப்போது உள்ளதை விட மிகப் பெரிய அளவில் வெடிக்கும். இப்போது இதை நாம் கூறினால் யாரும் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

கேரி பைகளில் உலர்ந்த, ஈரமான அனைத்து குப்பைகளையும் போட்டு வீசி எறியப்படும்போது, கேரி பைகளை மட்டும் பிரித்து எடுத்து மறுசுழற்சி செய்ய அனுப்புவது என்பது இமாலய பணியாகும். இதை அரசுகளாலேயே செய்ய முடியவில்லை. அரசுகளாயே செய்ய முடியாத இந்த வேலையை தனிப்பட்ட சிறிய சங்கங்களால் எப்படி செய்ய முடியும்?

கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் உருவாக்கப் பட்டன. அதன் அடிப் படையே வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கையாள வேண்டும் என்பது ஆகும். 2016 -ல் மற்றொரு மேம்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள் அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனாலும் இப்போதும் நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பெரு நகரங்கள் உட்பட வீடுகளில் இருந்து குப்பைகளை அப்படியே வாரி எடுத்துச் சென்று குப்பை மேடுகளில் கொட்டுவதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் மேலை நாடுகளைக் காப்பி அடித்து செயல்பட முயற்சிப்பது எல்லாம், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் மாறும். குப்பைகள் சேரும் இடத்தில் அவற்றைத் தரம் பிரித்து சேகரிக்க வழி செய்யாமல் ‘நீட்டித்த உற்பத்தியாளர் பொறுப்பு’ என்னும் கருத்தாக்கத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று சொல்வதாலோ, முயற்சிப்பதாலோ எந்த பயனும் விளையப் போவது இல்லை. அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் சற்று பொறுமையாக, நம்முடைய நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்திக்க வேண்டும். மற்ற நாடுகளின் கருத்தாக்கத்தை கண்களை மூடிக்கொண்டு நடைமுறைப் படுத்த முயற்சித்த பல நடைமுறைகள் ஏற்கெனவே பல சிக்கல்களைத் தந்த அனுபவம் ஏற்கெனவே நமக்கு இருக்கிறது.

– ஜி. சங்கரன், தலைவர், தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம், பு. எண்.26, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை – 600112. (90030 23815)

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.