முதலில் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட் எனப்படும் டிஎஸ்சி (DSC) பெற வேண்டும். தற்போது கம்பெனி பதிவுக்கான எம்சிஏ (Ministry of Corporate Affairs (MCA) இணைய பக்கம் மட்டுமல்லாமல், நம்ம்டைய அனைத்து நடவடிக்கைகளும் இணையத்தின் வாயி லாகவே நடைபெறுவதால், அதில் டிஜிட்டல் கையொப்பமிட இந்த டிஎஸ்சி தேவை. அங்கீகாரம் பெற்றவர் கள் வழங்கும் இந்த டிஎஸ்சி சான்றிதழை இணைப்பது என்பது உரியவர்கள் கையெழுத்து போடுவதற்கு சமமாகும். இந்த டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபி கேட் பெறவிரும்புவோரின் மார்பளவு படம், அவர் கையொப்பமிட்ட முகவரி சான்றிதழின் நகல், அவர் கையொப்ப மிட்ட பான்கார்டு நகல் ஆகியவற்றுடன் இந்த சான்றிதழை வழங்க உரிமம் பெற்றவர்களிடம் விண்ணப்பித்தால், அவர்கள் டிஎஸ்சி-யை வழங்குவார்கள்.
எந்தவொரு கார்ப்பரேட் ஆக பதிவு பெற்ற நிறுவனத்தையும் இயக்குநர்குழுவே வழிநடத்தும். எம்சிஏ இணைய தளத்தின் வாயிலாக இயக்குநர் குழுவின் ஒவ்வொரு இயக்குநருக்கும் DIN என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர் அடையாள எண் (Director Identification Number) ஒன்று வழங்கப்படுகின்றது அதனை இயக்குநராக பொறுப்பேற்கும் ஒவ்வொரு வரும் பெற வேண்டும். இதற்கு டின் (DIN) பெற விரும்புவோரின் மார்பளவு படம், அவர் கையொப்பமிட்ட அவருடைய முகவரி சான்றிதழின் நகல், அவர் கையொப்பமிட்ட அவருடைய பான் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப் பித்தால், டின் கிடைக்கப் பெறும்.
ஒரு பிரைவேட் லிமிடெட் பதிவு செய்வதற்கு முன் அந்நிறுமத்திற்கான பெயரை முதலில் பெற வேண்டும் இதற்கு INC-1 எனும் மின்படிவத்தை நிரப்பி, உரிய கட்டணத்துடன், நாம் பெயரிட விரும்பும் பெயர்களாக ஆறு பெயர்களை வரிசைப்படுத்தி MCA இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால், வேறு யாரும் தேர்வு செய்யவில்லையா என சரிபார்த்து அவற்றுள் ஒரு பெயர் அறுபது நாட்களுக்குள் அனுமதிக்கப்படும். நாம் பட்டியலிட்டபெயர்கள் ஏற்கெனவே வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் வேறு பெயர்ப் பட்டியலை மீண்டும் வழங்குமாறு நமக்கு தகவல் வரும். நாம் கேட்கும் பெயர்கள் உச்சரிக்கவும், நினைவில் கொள்ளவும் எளியதாக இருக்க வேண்டும்.
அடுத்ததாகபடிமுறை-4 SPICe (Simple Form for Incorporating Company) என அழைக்கப்படும், நிறுவனத்தை இணைப்ப தற்கான படிவத்தை நிரப்பி வழங்க வேண்டும்.
பொதுவாக ஒரு நிறுமத்தின் அடிப்படை நோக்கம், செயல் குறிப்புகள் அடங்கிய MOA எனசுருக்கமாக அழைக் கப்படும் Memorandum of Association of Company என்பதும் அவற்றை எவ்வாறு செயல்படுத்தப் போகின்றோம் என்பதை விளக்கும் AoA என அழைக்கப்படும் Articles of Association ஆகிய அடிப்படை யான ஆவணங்களை கவனமாக உருவாக்க வேண்டும்.
அதனைதொடர்ந்து வாடகை இடம் எனில் SPICe எனும் படிவத்துடன், நிறுமத்தின் பதிவுஅலுவலகம் அமைய உள்ள இடத்திற்கான சொந்தக்காரரின் NOC (நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிஃபிகேட்) சான்றிதழ், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இயக்குநர்களாக செயல்பட உள்ளவர்களின் DIR – 2 எனும் படிவத்தின் வாயிலான ஒப்புதல், முதன்முதலாக முதலீடு செய்யும் பங்குநர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் INC – 9 எனும் படிவத்தின் வாயிலான வெளிப்படையான வாக்குமூலமும், அறிவிப்பும், அதனோடு அவை பதிவு பெற்ற சட்டவல்லுநரின் சான்றொப்பமும் கொண்டதாக இருக்க வேண்டும்
முதன்முதலாக முதலீடு செய்யும் பங்குநர்கள், இயக்குநர்களின் சான்றிதழ், நிறுமத்தை பதிவு செய்வதற்காக அரசிற்கான முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவை செலுத்திய சான்று, நிறுமத்திற்கு தேவையான றிகிழி, TAN ஆகியவற்றை பெறுவதற்கான விண்ணப்பம் செய்த நகல்
ஆகிய சான்றுகளுடன் SPICe இணைத்தின் வாயிலாக MCA இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் நிறும பதிவாளர் (கம்பெனி ரிஸ்ட்ரார்) இவற்றை சரிபார்த்து Certificate of Incorporation (CoI) எனும் பதிவுச் சான்றி தழை வழங்குவார்
இதனைத் தொடர்ந்து நிறுமம் தன் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்க லாம். அதன் பின்னர் கம்பெனி சட்டம் 2013 இன்படி தேவையான படிவங் களையும், ஆண்டு அறிக்கைகளையும் அதற்கான படிவங்களில் எம்சிஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
– முனைவர் ச. குப்பன்