பிரவுசிங் சென்டர்களில் இவற்றையும் செய்யலாம்!

நாம் கல்லூரியில் படிக்கும் போதே நமக்கு பிரவுசிங் சென்டர்களின் தேவைகள் பற்றி தெரிந்து இருக்கும். நமக்கும் பிரவுசிங் சென்டர்களுக்கும் ஒரு நீண்ட தொடர்பு இருக்கிறது. குறிப்பாக, புராஜெக்ட் செய்யும்போது, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ஜெராக்ஸ் எடுக்கும் போதும், இணையம் இல்லாதவர்கள் பிரவுசிங் செய்யும் போதும் இந்த பிரவுசிங் சென்டர்களின் அதிகப்படியான தேவையை அறிந்து இருப்போம்.


ஜெராக்ஸ், பிரின்ட் அவுட், கலர் பிரின்ட் ஆகியவற்றையும் செய்து கொடுக்கின்றன. குறைந்த விலை வைத்தால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதாவது நமக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குறிப்பாக, அங்கு மாணவர்களின் வருகை அதிகமாகும்.


இங்கு ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களையும் விற்கலாம். குறிப்பாக, கீபோர்டு, மவுஸ், பென்டிரைவ், டேட்டா கார்டு, லேப்டாப் சர்வீஸ், இயங்குதளம் நிறுவித் தருதல், மென்பொருள்களை ஏற்றிக் கொடுத்தல் போன்ற இதர வேலைகளையும் இதன் மூலம் செய்யலாம். இந்த வேலைகள் மூலமாகவும் வருவாய் கிடைக்கும்.


கல்லூரி வளாகம், நகர்ப் புறங்கள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு அருகில் இந்த தொழிலை தொடங்கினால், அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பிரவுசிங் சென்டர் வைப்பது என்பது ஒரு சாதாரண தொழில் இல்லை. நம்மிடம் அதைப் பற்றிய முழு விவரங்கள் இருக்க வேண்டும். அதாவது கணினி மற்றும் அதன் தொழில் நுட்பங்கள் பற்றி படித்திருக்க வேண்டும், உடன் அதில் ஆழமான அனுபவம் இருக்க வேண்டும். கணினி, ஐடி ஆகியவற்றைப் படித்தவர்கள் பிரவுசிங் சென்டர் வைத்தால் சிறப்பாக நடத்தலாம்.


இப்போது பிரவுசிங் சென்டர்கள் வெறும் பிரவுசிங் சென்டர்களாக மட்டும் இல்லை. கூடுதலாக வேறு பணிகளையும் செய்து கொடுத்து பொருள் ஈட்டுகின்றன.

-அ. விஜயராணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here