ஜூலியனே பொனன், குழந் தைப் பருவத்தில் இருந்தே கடுமையான அதிர்ச்சி கொடுக்கும் ஒவ்வாமை நோயால் (Anaphylaxis – Hyper Sensitive Alergy Shock) பாதிக்கப் பட்டவர். தற்போது 28 வயதாகும் இவரை, ஃபோர்பஸ் இதழ், 2019 ஆண்டுக்கான ஐரோப்பாவில் 30 சிறந்த இளம் தொழில் முனைவோர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.
மொத்தத்தில் 300 இளம் வெற்றி யாளர்கள் கலை, பண்பாடு, பொழுது போக்கு, மற்றும் சமூக தொழில் பங்களிப்பு என பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக் கப்பட்டு, கடைசியாக 2019 ஆண்டுக்கென 30 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்களில் சில்லறை விற்பனைத் துறை சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூலியனே பொனனும் ஒருவர். இதனைப் பற்றி ஜூலியனே சொல்வதாவது,
“இந்த வகையில் இளம் வெற்றி யாளர்களை அடையாளப் படுத்துவது சிறப்பானது. இவர் சொந்தமாக நடத்தி வரும் ‘கிரியேட்டிவ் நேச்சர் சூப்பர் ஃபுட்ஸ்’ தயாரித்து விற்பனை செய்யும் மேம்படுத்தப்பட்ட இயற்கை உணவுகள் அவரை, சிறந்த பெண் தொழில் முனைவோராக உயர்த்தி உள்ளது.
சில பருப்பு வகைகள், கொட்டை வகைகள், சில கொழுப்பு வகைகள், ஜூலியனே பொனனுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தி, அவரைத் துயரப்பட வைத்தது. இவரது பெற்றோர் பொனனுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவு வகைகளை, தேடித் தேடி வாங்கிக் கொடுத்தனர்.
அந்த அனுபவம்தான், தன்னைப் போன்று ஒவ்வாமை மற்றும் இதர குறைபாடுகளில் அல்லல் படுபவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற தூண்டலை இவருக்குள் எழுப்பியது.
வர்த்தக மேலாண்மை மற்றும் நிதித் துறையில் பட்டம் பெற்ற ஜூலியனே பொனன், பீஜிங்கில் உள்ள ஒரு முதலீட்டு வங்கித் துறையில் பணியாற்றத் தொடங் கினார். ஓராண்டுக்குப் பின்பு, தாய் நாடான பிரிட்டனுக்குத் திரும்பிய அவர், தனது 22 ஆவது வயதில் (அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு), தன் நண்பருடன் சேர்ந்து, சர்ரேயில், வால்டன் ஆன் தேம்சில் வாழும் போது, ஏற்கெனவே கடும் இழப்பில் (நஷ்டத்தில்) ஓடிக் கொண்டு இருந்த கிரியேட்டிவ் நேச்சர் என்ற நிறுவனத்தை வாங்கி, மறுவடிவமைப்பு செய்தார்.
‘உணவில் இருந்து விடுபட்டு, ஊட்டச் சத்தை உண்ணுங்கள் என்பதே இவரது கிரியேட்டிவ் நேச்சர் நிறுவனத்தின் கொள்கை முழக்கம்.
நிறுவனத்தை வாங்கிய 24 மாதங் களுக்குள் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிக் காட்டினார். அதாவது, தன்னைப் போல பலவித நோய்க் குறைபாடுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கான மேம்படுத்தப் பட்ட இயற்கை உணவு வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
பலவித கீரைப் பொடிகள், சிறுதானிய மாவுகள், மூலிகைப் பொடிகள், சிறந்த மாவு உணவுகள், இயற்கையான பார்லி மாவு, பசுமையான கீரைகள், பாறை உப்பு,, வாழைப்பழ ரொட்டிக் கலவை – போன்ற இயற்கை உணவுகளையே விற்பனை செய்து வருகிறார்.
2018 இல் இந்த நிறுவனம் உலகம் முழுவதும், உடல்நலம் மற்றும் நலவாழ்வுச் சந்தையில் ஸ்நாக்ஸ் ஏற்றுமதியில் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றது. விற்பனை 1.7 மில்லியன் டாலராக பெருகியது.
உணவுப் பொருட்களை மட்டும் அல்லா மல், சருமங்களைப் பாதுகாக்கும் இயற்கை வாசனைத் திரவியங்களையும், முக சவரம் செய்த பிறகு பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ்ஸ் இயற்கைத் திரவத்தையும் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். இவர் கைக்குழந்தையாக இருந்த போது, பலமுறை அலர்ஜியால், மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப் பட்டார். இதைச் சாப்பிடாதே, அதைச் சாப்பிடாதே என மருத்துவர்களும், பெற்றோர்களும் இவருக்குக் கடுமையான உணவுக் கட்டுப் பாடுகளை விதித்தனர்.
இதுவே ஒவ்வாமை ஏற்படுத்தாத இயற்கை உணவுகளைத் தேடித் தேடி அவரைத் தயாரிக்கத் தூண்டியது.
ஐரோப்பிய நாடுகளில் மட்டும் அல்ல, அவற்றைச் சுற்றியுள்ள சில ஆசிய ஆஃப்ரிக்கா நாடுகளிலும் இவரது இயற்கைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே வந்து விடும் வருகிறார்கள். 2018 இல் கிரவுட் ஃபண்டிங் மூலம் 500 ஆயிரம் யூரோ முதலீடாகத் திரட்டி உள்ளார். 2017 இல் பிபீசி தொடரில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் ஜூலியனே பொன்னன்?
நான் சத்துணவு தயாரிப்பு நிறுவனங் களில் பணி செய்யவே ஆர்வமாக இருந்தேன். அவற்றின் நிறுவனர்களின் முக்கிய இலக்கு விற்பனை மட்டுமே என்று என்னால் உணர முடிந்தது. ஆனால் எனக்கென்று ஒரு கனவு இருந்தது. நான் தயாரிக்கும் பொருளில் எனக்கென்று தனித்த முத்திரை இருக்க வேண்டும் என எண்ணினேன்.
என்னிடம் ஒவ்வாமைக் குறைபாடு இருந்ததால், சத்தான உணவு வகைகளில் தான் என் கவனத்தைச் செலுத்தினேன். நான் ஒரு முதலீட்டு வங்கியில் பணியாற்றியதால் சில வகை தொழிலறிவைப் பெற்றுக் கொண்டேன். வரி செலுத்தும் முறைகள், வாட் ரிட்டர்ன், பணப்புழக்கத்தை நிர்வாகம் செய்வது, போன்ற அடிப்படைகளை அங்கு தெரிந்து கொண்டேன்.
நான் இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு, 56 ஆயிரம் யூரோ வரை கடுமையான இழப்பில் இருந்தது. ஏற்கெ னவே இந்த நிறுவனத்தில் மெழுகுவர்த்தி, சிலைகள் முக்கியமாக விற்பனை செய்யப் பட்டன. பெயருக்குக் கொஞ்சம் சூப்பர் ஃபுட் ஐட்டங்களும் விற்பனை செய்யப் பட்டன. ஆனால் எனக்கு, சூப்பர்ஃபுட் ஐட்டங்களே, சிறந்த விற்பனை வாய்ப்புள்ள துறையாக தெரிந்தது.
எனவே இயற்கை உணவுகளை, புதுமையான சத்துணவு மிக்ஸ் வகைகளாக ஆக்கி, ரீபிராண்ட் செய்து, விற்பனை செய்ய முடிவெடுத்தேன். வரவேற்பு குறைவான பொருட்களை, விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கினேன். இது கடினமான முடிவாக இருந்தாலும், வெற்றி முடிவாக அமைந்தது.
அப்போது என்னிடம் பணம் (முதலீடு) இல்லை; அனுபவம் இல்லை; வாடிக்கையாளர் தொடர்பும் இல்லை.
தொடக்க நாட்களில் நான் கிரவுட் ஃபண்ட் முறையில் முதலீட்டைத் திரட்ட நினைத்தேன். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னணி இடத்தை அடைய வேண்டும் 150 ஈரோ திரட்ட வேண்டும் என்பதில், கனவு மட்டும் இருந்தது. ஆனால் முதலீட்டாளர்கள் என்னை நம்பவில்லை. நீங்கள் சிறுபிள்ளை யாக இருக்கிறீர்கள், உங்களது குறிக்கோள் தவறானது என்று தயங்கினார்கள். அவர் களை மீறி, என்னை நிரூபிப்பதில் கவனத் தைச் செலுத்தினேன்.
சப்ளையர்களைப் பொறுத்தவரை, என்னை நம்பவில்லை அல்லது பொருட் படுத்தவில்லை என்றும் சொல்லலாம். ஏனெ னில் இளம் வயது, சொல்லப் போனால், என் ஒவ்வாமை காரணத்தால், அப்போது, ஒரு சிறுமியாகவே தோற்றமளித்தேன். கடைசியாக ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் ஒரு சப்ளையரை சந்தித்தேன்.
நீண்ட உரையாட லுக்குப் பின்பு, என் மீது நம்பிக்கை வைத்து, 60 நாட்கள் கெடு வைத்து கடனுதவி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். எங்களி டம் தெளிவான வணிகத் திட்டம் இருந்த தால் அந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு வர்த்த கரின் முக்கிய தேவை, பொருத்தமான சப்ளையரைக் கண்டுபிடிப்பது தான்.
எங்களது நிறுவனத் தயாரிப்புகள் பல்வேறு உணவு விருதுகளைப் பெற்று உள்ளன. நம் தயாரிப்புகளின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழி விருதுகளே. நம் தயாரிப்புகளை சிறந்தவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத்தான் விருதுகள் சுட்டிக்காட்டு கின்றன. விருதுகள் வாடிக்கையாளர்களின் கண்களில் மிகப் பெரிய நம்பகத் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும் நான் இளம் பெண் தொழில் முனைவோராக இருப்ப தாலும், என் பொருட்கள் பல தரப்பின ராலும் பாராட்டப் படுவதாலும், ஏராள மான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.
சமூக ஊடகங்கள் எங்களுக்கு முக்கியம். இவை நேரடியாக எங்கள் வாடிக் கையாளர்களிடம் பேசுவதற்கும், அவர்க ளின் விருப்பு வெறுப்பை விரைவாக அறிவ தற்கும் பயன்படுகின்றன. எங்களது பிராண்ட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நம்பிக்கையை எழுப்பவும் சமூக ஊடகங்கள் துணை செய்கின்றன.
நான் தொழில் தொடங்கி எட்டு ஆண்டுகளில், இந்த ஆண்டில்தான் (2019) இரண்டு வார விடுமுறை எடுத்துக் கொண் டேன். கடந்த காலங்களில் எங்கள் தொழிலை மேம்படுத்த கடுமையாகப் போராடிக் கொண்டு இருந்தோம். செய்யும் தொழிலில் நேரத்தைச் செலவிடுவதை மகிழ்ச்சியாகக் கருதினோம்.
தற்போது ஏற்றுமதியில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறோம். ஏற்கெனவே ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்கிறோம். இதை வடக்கு அமெரிக்காவுக்கும் விரிவு படுத்த விரும்பு கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்களது சந்தைப் பங்கை கேட்டரிங், ஏர்லைன்ஸ், கஃபேஸ் முதலிய துறைகளில் அதிகரிக்க குறிக்கோள் வைத்து உள்ளோம்.
மற்றும் பெண்கள் சார்ந்த சுகாதாரப் பொருட்களையும் அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டம் கொண்டு உள்ளோம்” என்கிறார் பொனன்.
இன்று ஜூலியனே பொனன் இளம் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில், ஒரு வலைப்பூ ழீuறீவீணீஸீஸீமீஜீஷீஸீணீஸீ. நீஷீனீ)நடத்தி, பல கட்டுரைகளை எழுதி வருகி றார். புதிய தொழில் முனைவோர்களுக்கு தங்களது குறிக்கோளை எப்படி எளிதில் அடைவது என்றும் வழிகாட்டுகிறார்.
முக்கியமாக உணவு மற்றும் சில்லறை விற்பனைத் துறையில் இவரது வழிகாட்டுதலும் பெரும் பங்கும் முக்கியமானது. அழைக்கும் இடங் களுக்குச் சென்று, இவர் தன்னம்பிக்கை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார்.
இவற்றை எல்லாம் உருவாக்க உங்களைத் தூண்டியது எது? என்ற கேள்விக்கு,
“எனது கடுமையான ஒவ்வாமை நோய்தான், என் கண்டுபிடிப்புகளின் தாய்”
என்று கூறிச் சிரிக்கிறார்.
-ஹெலன் ஜஸ்டின்
Join our list
Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.