Latest Posts

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து உருவாக்குகிறோம்!

- Advertisement -

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்பட்டு வளர்ச்சி பெற்று வருபவர், திரு. உமாசங்கர். ஹார்டி ரேக்ஸ் என்ற பெயரில் கணினித் துறைக்குத் தேவையான ரேக்குகளைத் தயாரிக்கிறார். இது பற்றி திரு. உமாசங்கர் கூறும்போது, “நான் பி.எஸ்சி கணிதம் படித்து இருக்கிறேன்.

பின்னர், கணினித் துறையில் டிப்ளமா மற்றும் எம்பிஏ படித்து இருக்கிறேன். கம்ப்யூட்டர் விற்பனை செய்வதில்தான் எனது தொழில் துவங்கியது. ஆரம்பத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தேன். பின்னர் சிறிது சிறிதாக முன்னேறி பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிந்தேன். அதன் காரணமாக இந்தியா முழுவதும் பல கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகித்தேன். எனக்கு சுமார் 20 ஆண்டுகள் இந்த துறையில் அனுபவம் உள்ளது.


எனக்கு சொந்தமாக தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. அதனால் ஷான் ஐடி சொல்யூஷன் என்ற நிறுவனத்தைத் துவங்கி, முதலில் கம்ப்யூட்டர் ரேக்குகளை வாங்கி விற்பனை செய்து கொண்டு இருந்தோம். இவ்வாறு ரேக்குகளை வாங்கி விற்பனை செய்து கொண்டு இருந்த போது எனது வாடிக்கையாளராக ஒரு காற்றாலை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது செர்வர் அறைக்காக ரேக்குகள் வாங்க வந்தார்கள்.

எங்களிடம் இருந்த செர்வர் ரேக்குகளை அவர்களுக்கு காண்பித்தோம். ஆனால் அவர்களுக்கு அது மனநிறைவு தரவில்லை. அதனால் அப்போது மார்க்கெட்டில் இருந்த சிறப்பான ஐந்து நிறுவனங்களின் ரேக்குகளை வாங்கி அவரிடம் காண்பித்தோம். அவர் அப்போது, அந்த ஒவ்வொரு ரேக்கிலும் இருந்து ஒவ்வொரு குறிப்பிட்ட சிறப்பம்சத்தையும் காட்டி தனக்குப் பிடித்து இருப்பதாகக் கூறினார்.


அப்போது நான் யூரோப்பில் இருந்து சிறந்த ஒரு தொழில்நுட்பத்தை அறிந்து வந்து அதற்கேற்ற பாகங்களை வாங்கி வந்து, அவரது தேவைக்கு ஏற்றாற்போல் உள்ள ஒரு சிறப்பான ரேக்கைத் தயாரித்துக் கொடுத்தேன். அதில், அவர் விரும்பிய அனைத்து சிறப்பம்சங்களையும் சேர்த்து தயாரித்து இருந்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிச் சென்றார்.

அப்போது தான் இந்த ரேக்குகளை நாமே தயார் செய்து நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அப்போது தான் ஹார்டி ரேக்ஸ் என்ற பெயரில் சிறிய அளவிலான தொழிற்சாலையை 2016 -ம் ஆண்டு நிறுவினோம். அதன் மூலமாக நாங்களே செர்வர் ரேக்குகளைத் தயாரிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய தயாரிப்புக்கான தொழிற்சாலை திருமுல்லைவாயிலில் உள்ளது.


தொடங்கிய ஒரு ஆண்டிலே சுமார் 70 க்கும் அதிகமான டேட்டா சென்டர் ரேக்குகள் விற்பனை ஆனது. ரேக்குகள் உடன் பிடியூ (புரோட்டோகால் டேட்டா யூனிட்), கேபிள் மேனேஜர், பிளாங்கிங் பேனல், ஃபேன் ட்ரே போன்ற சில உதிரி பாகங்கள் இந்த பேக்கேஜில் கிடைக்கும். மற்றும் இந்த உதிரி பாகங்கள் ஆனது வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப தனித் தனியாகவும் விற்பனை செய்கிறோம். பிடியூக்களில் வோல்ட்டேஜ் மற்றும் கரன்ட் ஆகியவற்றை காண்பிக்கும் எல்சிடி டிஸ்ப்ளே ஒன்றை இதனுடன் இணைத்து இருக்கிறோம். இதனால் பவர் ஷார்ட்டேஜ் போன்ற சிக்கல்கள் வருவதைத் தடுக்கலாம்.


பொதுவாக இன்டர்நேஷனல் தரத்தில் எவரும் தமிழ்நாட்டில் இந்த ரேக்குகளை தயாரிப்பது இல்லை என்றும், எம்என்சி நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன என்றும் எண்ணம் இந்த துறையில் உள்ளவர்கள் இடத்தில் நிலவி வருகிறது. ஆனால் எங்கள் நிறுவனம் இந்த தரத்தில் இந்த இன்டலிஜென்ஸ் ரேக்குகளை தயாரித்து வருகிறது.


விற்பனைக்குப் பிறகு சர்வீஸ் என்பது மிக முக்கியமான பகுதி ஆகும். எங்கள் நிறுவனம் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால் சர்வீஸ் என்பது மிக முக்கியம் ஆகும். எங்கள் நிறுவனத்தில் விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் சர்வீஸ் செய்து தருகிறோம். மற்றும் எங்கள் ரேக்குகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை வாரன்டி தருகிறோம். மற்றும் ரேக்குகள் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுட்காலத்தைக் கொண்டவை. எங்களிடம் சிறியது, பெரியது என பல அளவுகளிலும் ரேக்குகள் கிடைக்கின்றன. அளவிற்கு ஏற்றாற்போல் விலையும் மாறுபடும். எங்களிடம் 2000 முதல் 2 லட்சம் வரை டேட்டா சென்டர் ரேக்குகள் கிடைக்கும்.


என்னுடைய மனைவி ஆர்த்தி எனக்கு துணையாக நிறுவனத்தின் நிதி மேலாண்மையைப் பார்த்துக் கொள்கிறார். இதுவரை நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது எங்கள் நிறுவனம். எதிர்காலத்தில் பல வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்வதே எங்கள் இலக்கு” என்று கூறினார் திரு. உமாசங்கர் (9841066557).

-தேன்மொழி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news