Thursday, September 23, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

இந்த மாதம் முதல் புதிய நடைமுறைகள்

 

- Advertisement -

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31’வது கூட்டம் 22-12-2018 அன்று நடைபெற்ற போது 01-02-2019 முதல் ஜிஎஸ்டி சட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ள கீழ்க்காணும் திருத்தங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப் பட்டது. விரிவாகப் பார்க்கலாம்.

செங்குத்து வணிகம் (Business Vertical) பிரிவு 2(18)

ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்துகொண்ட வணிகம் தவிர, வேறு மாறுபட்ட வணிகம் ஏதேனும் செய்தால் அதைத் தனியாக பதிவு செய்யும் முறை இதுவரை இருந்து வருகிறது. இதற்கு செங்குத்து வணிகம் என்று பெயர். இந்த பிரிவு நீக்கப்பட்டு, இதற்குப் பதிலாக ஒரு மாநிலத்தில் பல இடங்களில் வணிகம் புரியும் நபர், ஒவ்வோர் இடத்திற்கும் தனித் தனியாக பதிவுசெய்து கொள்ளும் வசதி (Multiple Registration) அறிக்கை எண்: 3/2019-சிஜி/29-01-2019 படி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

(எ.க.) ஒரு வணிகர் ஒரு இடத்தில் கணினி வணிகமும், வேறு ஒரு இடத்தில் தளவாடப் பொருள்களும் வணிகம் புரிந்து வந்தால் அந்தப் பதிவை அப்படியே தொடரலாம்.
இதே வணிகர் ஒரே இடத்தில் கணினி, தளவாடப் பொருள்கள் வணிகம் புரிந்தால் முன்பு செங்குத்து வணிகர் என்ற முறையில் தனித்தனிப் பதிவைப் பெற்று இருப்பார்.
இந்த புது விதிமுறைப்படி ஒரு இடத் திற்கு ஒரு பதிவு என்பதால் இரண்டு பதிவில் ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும்.

இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்கள்

பிரிவு 24 படி டிசிஎஸ் (TCS) சேகரிக்கும் மிண்னணு வர்த்தகர்கள் (இ-காமர்ஸ்) கட் டாயமாக ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய் துள்ளவராக இருக்க வேண்டும்.
பதிவு செய்வதற்கான உச்ச வரம்பான ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம் உடை யவர்கள் என்ற விதி இவர்களுக்குப் பொருந் தாது. சொந்தமாக வலைதளத்தின் மூலம் பொருள்கள் அல்லது சேவைகளில் ஈடுபடு பவர்கள் ஆண்டு வருவாயைப் பொருட் படுத்தாமல் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த சட்டத் திருத் தத்தால் பிரிவு 52 படி சேகரிக்க தேவையற்ற வர்கள் பதிவு செய்வதற்கான நுழைவு விலக்கு வரம்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேவைக்கான பிரிவு 2(102) திருத்தம்

கீழ்க்காணும் சேவைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. பிரிவு 2(102) திருத் தப்பட்டு இனி வரி விதிக்கப்படும்.

ஆவணங்கள் கட்டணம் (Documentation Fee), தரகுக் கட்டணம் (Brooking Charges)
பத்திரங்கள் ஒழுங்கு படுத்துவதற்கான அனைத்துச் சேவைகள், பிராசசிங் கட்டணம் உட்பட

எதிரிடைக் கட்டணம் (ரிவர்ஸ் சார்ஜ்) – பிரிவு 9(4)

பதிவு செய்துள்ள ஒருவர்,, பதிவு செய்யா தவரிடம் இருந்து பெரும் உள் வழங்கல் களுக்குச் செலுத்த வேண்டிய எதிரிடைக் கட்டணப் பிரிவு 9(4) தற்பொழுது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

சில குறிப்பிட்டவர்களால் பெறப்படும் உள் வழங்கல் களுக்கு பதிவு பெறாத வர்களிடம் இருந்து பெறப்படும் வழங்கல்களுக்கு எதிரிடைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்த குறிப்பிட்டவர்கள் யார் என்பதை அரசு அறிவிக்கப் பட்டவர்களுக்கு (Rectified) மட்டுமே தற்பொழுது இந்த மாற்றம் பொருந்தும்.
இந்தப் பிரிவில் சேர்க்கப்படாமல் இருக்கும் வரிசெலுத்தும் வணிகர்களுக்கு இது பணப் புழக்கத்தைக் குறைக்கும்.

பதிவு வரம்பு அதிகதிப்பு – பிரிவு 22

தற்பொழுது சில மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஆண்டு மொத்த வருமான வரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது.

இது அறிக்கை எண்: 10/2019/சிஜி/07-03-2019 படி ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது அசாம், அருணாசலப் பிரதேசம், ஹிமாச் சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம் (ம) உத் திரகாண்ட ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்.
மணிப்பூர், மிஜோராம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.20 லட்சமாக உள்ளது. ரூ. 40 லட்மாக 01-04-2019 முதல் உயர்த்தப்படுகிறது. இது கீழ்க்காணும் பிரிவினருக்குப் பொருந்தாது.
பிரிவு 24 படி கட்டாயப் பதிவு செய்ய வேண்டிய பிரிவினர்

ஐஸ்கிரீம், கோகோ சேர்க் கப்பட்டாலும் அல்லது சேர்க் கப்படாமல் இருந்தாலும் தயா ரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும் உண்ணத்தக்க ஐஸ்கிரீம், பான் மசாலா, புகை யிலை (ம) புகையிலைக்கான மாற்றுப் பொருள்களை விற்பனை செய்பவர்கள்.
அருணாசலப் பிரதேசம் மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா (ம) உத்தரகாண்டு ஆகிய மாநிலங்களில் இருந்து வெளி மாநிலத்திற்கு வெளி வழங்கல் செய்யும் பிரிவினர்.

ஒரு நிதி ஆண்டுக்கான கடன் / பற்றுக் குறிப்பு – பிரிவு 53(1-4)

வரிப் பட்டியலில் (Tax Invoice) ஏற்படும் பிழைகளைத் திருத்தம் செய்ய ஒவ்வொரு பட்டியலுக்கும் தனித்தனி கடன் வரவுக் குறிப்பு (கிரிடிட் நோட்) அல்லது பற்றுக் குறிப்பு (டெபிட் நோட்) வழங்கும் முறை தற்பொழுது ஒரு நிதி ஆண்டில் வழங்கப்பட்ட பல பொருள்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த வரவு / பற்றுக் குறிப்பு வெளியிடலாம்.

ஆனால் ஒவ்வொரு பட்டியலுக்கான வரிசை எண் / நாளை பற்று / வரவுக் குறிப்பில் குறிப்பிட வேண்டும்.

எந்த வரி செலுத்தவும் முதலில் ஐஜிஎஸ்டியை (மிநிஷிஜி) பயன்படுத்துதல் – பிரிவு 49
சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி/ஐஜிஎஸ்டி ஆகிய எந்த வெளி வழங்கல் வரியையும் செலுத்த இனி முதலில் ஐஜிஎஸ்டி வரி வரவைப் பயன்படுத்த வேண்டும்.

ஐஜிஎஸ்டி வரி வரவு முழுவதும் தீர்ந்த பின்னரே சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டியில் உள்ள வரி வரவை வெளி வழங்கலில் நேர்செய்ய பயன்படுத்த வேண்டும். ஐஜிஎஸ்டி கணக்கில் அடிப்படை நிதித் தீர்வைக் குறைக்க இந்த விதிமுறை சேர்க்கப்பட்டு உள்ளது.

சிஜிஎஸ்டி / ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரவை ஐஜிஎஸ்டி வரி வரவு இல்லாத போது மட்டுமே பயன்படுத்துவதற்காக மட்டுமே இந்த தடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பதிவு நீக்கும் போது இடை நிறுத்தம் அனுபதிக்கப்படுகிறது – பிரிவு 29
புதிய விதிமுறைப்படி பதிவு நீக்க வேண்டும் என்று முறையான அலுவலர் (ப்ராப்பர் ஆபீசர்) உறுதி செய்து விட்டால், பதிவு நீக்கம் முடியும் வரை அதை இடை நிறுத்தல் செய்யலாம். விதிமுறைகளில் பரிந்துரைக்கப்படும் காலம் மற்றும் முறைப்படியே இடைநீக்கம் இருக்கும்.

இடைநீக்கம் இருக்கும் வரிப்படிவம் எதுவும் வழங்க வேண்டியது இல்லை. பதிவுநீக்கம் செய்ய புறக்கணிக்கப்பட்டால் வரி வசூல் செய்தல், வரி செலுத்துதல் போன்றவற்றில் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்க நேரும். அவருடைய சொந்தப் பணத்தில் இருந்து வரியைச் செலுத்த நேரும். இது பெரிய சுமையாக இருக்கும்.

காம்போசிஷன் முறை வரி செலுத்துவதில் மாற்றங்கள் – (அறிக்கை எண்: 2/2019/சிஜி/07-03-2019)

பொருள் வெளி வழங்கல் (அ) சேவைபுரிவோர் (அ) இரண்டிலும் ஈடுபட்டு உள்ளவர்களின் ஆண்டு மொத்த வருமானம் ரூ. 50 லட்சத்திற்குள் இருந்தால் புதிய காம்போசிஷன் முறையில் 6% வரி (3% சிஜிஎஸ்டி + 3% எஸ்ஜிஎஸ்டி) செலுத்தலாம். இது 01-04-2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இங்கு மொத்த வருமானம் என்று குறிப்பிட்டு இருப்பதால் வரிவிலக்கு அளிக்கப்பட்ட வருமானத்திற்கும் சேர்த்து வரிசெலுத்த வேண்டும். ஆனால் இதில் வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ள சேவைகளான சேமிப்பு, வைப்பீடு, தொகை, கடன் (அ) முன்பணம், வட்டித் தள்ளுபடி போன்றவற்றைச் சேர்க்க வேண்டியது இல்லை.

பின்வரும் பிரிவினருக்கு இந்த புதிய திட்டம் பொருந்தாது

வெளி மாநிலத்திற்கு வழங்கல் செய்பவர்கள். ஜிஎஸ்டி சட்டத்தில் வரிக்கு உட்படாத வெளி வழங்கல் செய்பவர் (மது,பெட்ரோலியம் பொருட்கள் முதலியன)
ஒரு வரிக்கு உட்பட்ட தற்செயல் நபர் (Casual Person) வரி விதிக்கத்தக்க வழங்கல் செய்கிற குடியிராதவர் (Non – Resident taxable person), ஐஸ்கிரீம், பான் மசாலா, புகையிலைப் பொருள்களை வழங்கல் செய்யும் ஒருவர்.

இந்த திட்டத்தில் வரி செலுத்துபவர், பிரிவு 9(3) (ம) 9(4) படி எதிரிடை வேண்டும். எந்த உள் வழங்கலுக்கும் உள்ளீட்டு வரி வரவு பெற முடியாது. வெளி வழங்கல்களுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது.

காம்போசிஷன் முறை வரியில் உச்சவரம்பு அதிகரிப்பு – பிரிவு 10
காம்போசிஷன் முறையில் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு அறிக்கை எண்: 14/2019/சிஜி படி 01.04.2019 முதல் ஆண்டுக்கு 1.50 கோடியாக உயர்த்தப்படுகிறது.
அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த உச்ச வரம்பு ரூ.75 லட்சமாகவே இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

உள்ளீட்டு வரி வரவு பெறுவதில் திருத்தம் – பிரிவு 16

வேறு ஒருவர் கணக்கில் அவர் வழிகாட்டல் படி வழங்கப்படும் சேவைகள் மீது எடுக்கப்படும் உள்ளீட்டு வரியில் கீழ்க்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
உள்ளீட்டு வரி வரவு பெறும் பதிவுபெற்ற ஒருவர், பொருள் (அ) சேவை பெற வேண்டும்.

Billed to Shipped மாடல் வணிக நடவடிக்கையில் வழங்குபவர் பெறுபவரின் வழிகாட்டுதல் படி வேறு ஒருவருக்குப் பொருள்களை வழங்கினால் அது பொருள்களை வாங்கியதாகக் கருதப்படும்.

இந்த கருதப்பட்ட அனுமானம் இப்போது சேவைகளுக்கும் பொருந்தும். எனவே, உள்ளீட்டு வரி யாருடைய வழிகாட்டுதல் கணக்கிலும் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படும் மூன்றாவது நபருக்கு சேவை கிடைக்கும்.

மோட்டார் வண்டிகள் மீதான உள்ளீட்டு வரி வரவு – பிரிவு 17(5) பிரிவு (அ)
மோட்டார் வண்டிகளை வெளி சப்ளை செய்ய, பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்துதல், மோட்டார் வண்டிகள் ஓட்ட பயிற்சி அளிக்க பயன்படுத்துதல் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும். இந்த வண்டி, ஓட்டுநர் உட்பட 13 பேரை ஏற்றிச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.

டம்பர்கள் (Dumper), வேலை டிரக் (Work Truck), போர்க் லிஃப்ட் டிரக் ஆகியவற்றுக்கும் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும். தனிப்பட்ட நோக்கத்திற்காக ஓட்டுநர் உட்பட 13 பேரை ஏற்றிச் செல்லும் வண்டி, கப்பல் (ம) வானூர்திகளைப் பயன்படுத்துதலுக்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது. வங்கிகள் (அ) நிதி நிறுவனங்கள் பணம் எடுத்துச்செல்ல வண்டிகளைப் பயன்படுத்தினால் அதற்கு உள்ளீட்டு வரி வரவு உண்டு.

பொருள்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் வண்டிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படுகிறது. கப்பல் (ம) வானூர்திகளைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட நோக்கங் களைத் தவிர வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தினால் உள்ளீட்டு வரி வரவு தவிர்க்கப்படும்.
காப்பீட்டுச் சேவை வழங்குவதற்காக காப்பீட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப் படும் மோட்டார் வண்டிகள், கப்பல், வானூர்திகளுக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தால் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும்.

அரசுத் துறைக்கும் தணிக்கை தேவையில்லை – (01.02.2019 முதல்)
பிரிவு 35(5) படி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் பிரிவினர், தங்கள் கணக்கை ஒரு பட்டயக் கணக்கர் / காஸ்ட் அக்கவுன்டட் சான்றிதழ் பெற்று படிவம் 9-சி இல் வழங்க வேண்டும்.

இந்த விதி கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller & Audit General of India) தணிக்கைக்கு உட்படும் அரசுத் துறை / இலாக்காகளுக்குப் பொருந்தாது. அதற்கு ஏற்றபடி விதி 80 மாற்றப்படுகிறது.
படிவங்கள் வழங்க வேண்டிய நாள்

ஏப்ரல் 2019 -க்குப் பிறகு வழங்கப்பட வேண்டிய படிவங்களின் காலம் கீழ்க் காணுமாறு மாற்றப்பட்டு உள்ளது.

ஆண்டு மொத்த வருமானம் ரூ.1.50 கோடி வரையுள்ள ஒருவர், ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரை உள்ள காலாண் டுக்கு படிவம் ஜிஎஸ்டிஆர் – 1 ஐ 31.07.2019 -க்குள் வழங்க வேண்டும்.

ஆண்டு மொத்த வருமானம் ரூ.1.50 கோடிக்கு மேல் உள்ள ஒருவர் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையுள்ள காலத்திற்கும் படிவம் ஜிஎஸ்டிஆர் – 1 ஐ ஒவ்வோர் அடுத்து வருகிற மாதத்தில் 11 ஆம் நாளுக்குள் வழங்க வேண்டும். (11.05.2019. 11.06.2019 மற்றும் 11.07.2019).

ஒவ்வொரு பதிவுபெற்றவரும் படிவம் ஜிஎஸ்டிஆர் 3-ஙி ஐ ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரை உள்ள காலத்திற்கு அடுத்து வருகிற மாதத்தில் 20 ஆம் நாளுக்குள் வழங்க வேண்டும். (20.05.2019, 20.06.2019 மற்றும் 20.07.2019).

– சு. செந்தமிழ்ச்செல்வன்,
வணிகவரி ஆலோசகர்
(9841226856)

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.