Latest Posts

குறைந்த முதலீடு போதும்

- Advertisement -

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காலையில் காய்கறிகளை வெட்டுவதற்கு நேரம் இருப்பதில்லை.
பலவகையான காய்கறிகளை சந்தையில் மொத்தமாக வாங்கித் தூய்மைப்படுத்தி துண்டுகளாக வெட்டி தனித்தனிப் பொட்ட லங்களில் போட்டு விற்கலாம்.

கேரட் பொட்டலம் கத்தரிக்காய் பொட்டலம், உருளைக் கிழங்கு பொட்டலம் என விதவிதமாக பொட்டலம் கட்டி விற்கலாம். மேலும் கீரைகளை வாங்கி, நன்கு கழுவி, பதமாக நறுக்கி, பொட்டலங்களில் போட்டுக் கொடுக்கலாம்.

காலை முழுவதும் காய்கறிகளை வாங்கி, நன்றாகக் கழுவி, துண்டுத் துண்டாக நறுக்கி, பொட்டலம் தயாரிக்கத் தொடங்க வேண்டும். மாலையில், பணிபுரிந்து ஆட்கள் திரும்பும் நேரமான, 4 மணிமுதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம்.

பொதுவாக அரை கிலோ முழு கேரட் 10 ரூபாய்க்கு வாங்கினால், அதனை அரிந்து பொட்டலம் போட்டு 20 ரூபாய்க்கு விற்கலாம். அதுபோல 10 ரூபாய்க்கு ஒரு கட்டு கீரை வாங்கி, கிள்ளி, பொட்டலம் போட்டால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

காய்கனிகளை வாங்கி, கழுவி, காய வைத்து காய்கனி வற்றல் தயாரிக்கலாம். கொத்தவரங்காய் வற்றல், பாகற்காய் வற்றல், மாங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல் – என விதவிதமாக வற்றல் போட்டு விற்கலாம்.

உணவுத் தொழில்

பெரிய முதலீடு வேண்டாம். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். வாய்க்கு சுவையாகச் சமைக்கும் கைப்பக்குவம் போதும்.
உங்கள் வீட்டைச் சுற்றி கடைகள், அலு வலகங்கள், பல நூறு வீடுகள், பேச்சலர்ஸ் குடியிருப்புகள், பெரிய பெரிய அடுக்கு மாடிகள் இருந்தால், நல்ல வாய்ப்புகளும் வருமானமும் காத்திருக்கின்றன.

சிறிய அளவில் தொடங்கி, ஆர்டர்கள் அதிகரிக்கும் போது, சில பெண்களை வேலைக்கு அமர்த்தி வேலையும் கொடுக்கலாம்.
நாளும் ஒரே மாதிரி சமைக்காமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகை அறுசுவை உணவுகளைச் சமைக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் சலிப்படைய மாட்டார்கள்.

வீட்டில் குட்டி பேக்கரி

வீட்டிலேயே குட்டி பேக்கரி வைக்கலாம். அதாவது மினி ஹோம் பேக்கரி. ஒரு பேக்கரியில் முக்கியமாக பன், ரொட்டி, கேக் மூன்றும்தான் முக்கியமாக இருக்கும்.

முதலில் வீட்டில் இருந்தவாறே கேக் ஆர்டர் பெற்று செய்து வழங்கலாம்.

இதற்கு விதவிதமான கேக் செய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு 3 -6 மாத பேக்கரி பயிற்சி களில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். தற் காலத்தில் இணையத்தில் கூட ஆன்லைன் வகுப் புகள் பரவலாக நடத்தப் படுகின்றன. குறிப்பாக யூடியூப்பில் பலவகை கேக் செய்வதற்கான முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவே கேக் செய்ய பல ஆணைகள் கிடைக்கும்.

மணப்பெண் அழகுசெய்தல்

முதலில் நல்ல அழகுக்கலை வல்லுநரிடம் சென்று முறைப்படி அழகுக்கலையைக் கற்றுவர வேண்டும். யூடியூப்பில் கூட, அழகு செய்தல் தொடர்பான பல வீடியோக்கள் உள்ளன.

உங்கள் தோழிகள், தெரிந் தவர்கள், உற வினர் பெண் கள் என தொடங்கி, அவர்கள் மூலம் இன்னும் பல மணப்பெண்கள் உங் களைத் தேடி வருவார்கள். தேவைப் பட்டால் மணப்பெண் வீட்டில் அல்லது திருமண மண்டபத்தில் கூட சென்று அழகு செய்யலாம்.

மணப் பெண்ணின் முகம் அழகு செய்தல், முடி அழகு, மருதாணி இடுதல், மணப்பெண் ஆடை அணிதல், கலரிங் செய்தல் – என பலதுறையிலும் ஈடுபட வேண்டும். மணப் பெண் மட்டுமல்லாமல், பொது மேடையில் பேசும் பெண் பேச்சாளர்கள் கூட அழகு செய்ய வருவார்கள்.

தையல் தொழில் – புதிய வாய்ப்புகள்

சுடிதார், பிளவுஸ், பட்டுப் பாவாடை, கவுன் – என பெண்கள், குழந்தைகள் உடையைத் தைத்துக் கொடுத்தது, பழைய கால முறை. ஆனால் இப்போது தையல் தொழிலில் இன்னும் புதிய வாய்ப்புகள் உள்ளன.

சான்றாக, தற்போது பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட்டு வருவதால், காடா துணி வாங்கி, பை தைத்துக் கொடுக்கலாம். அல்லது அரிசி மூட்டைப் பைகளை வாங்கி, வலுவான பைகளை (கேரி பேக்) தைத்து விற்பனை செய்யலாம்.

பட்டிமன்றம்/ வழக்காடு மன்றம் குழு தொடங்கலாம்

உங்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருந்தால், உங்களைப் போலவே பேச்சுத் திறமை, வாதாடும் திறமையுள்ள 7 – 10 பெண்கள் சேர்ந்து கொள்ள வேண்டும்.

பின்பு தற்போது நாட்டில் அதிகமாக அலசப்படும் ஏதாவது தலைப்பு வைத்து பட்டிமன்றம் போலவோ அல்லது வழக்காடு மன்றம் போலவோ நடுவர் வைத்து வழக்காட வேண்டும்.

இப்படி பலமுறை பயிற்சியெடுத்து, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொது இடத்தில் பேசலாம் என உங்கள் குழுவினருக்கு நம்பிக்கை வந்தவுடன், பொது இடங்களில் பேசத் தொடங்கலாம். சான்றாக, ஒரு திருமணத்தில் நீங்கள் பட்டிமன்றம் பேசுகிறீர்கள். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் ஏழு பேர் கலந்து கொண்டால், ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதியுள்ள 3000 ரூபாயை உங்கள் பட்டிமன்றக் குழுவின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளலாம்.

இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதலில் திருமண வீடுகள், குடும்ப விழாக்களில் பேசத் தொடங்கும் நீங்கள், பின்பு ஊர் விழாக்கள், அரசியல் விழாக்கள், மாவட்ட விழாக்கள் – என உங்கள் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம்.

– நுண்ணல்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news