Latest Posts

முன்னேற வேண்டுமானால் ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்!

- Advertisement -

ஒருவர் ஒரு பணியில் இருந்து கொண்டே வேறு ஒரு தொழிலில் பகுதி நேரமாக செயலாற்றி வெற்றி பெற முடியுமா? என்கிற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார், நிகழ்ச்சி மேலாண்மையை (ஈவென்ட் மேனேஜ் மென்ட்) பகுதி நேரமாக செய்து வரும் திரு. சரவணன் சந்திரன்.

சமூக சேவகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட அவரை நமது வளர்தொழில் இதழுக்காக சந்தித்தோம். அவரிடம் கலந்துரையாடியதில் இருந்து.
‘’பிறந்தது தூத்துக்குடியில். பின் சிறுவயதிலேயே எனது தந்தையின் தொழி லுக்காக சென்னையில் குடியேறினோம். எனது தந்தை சென்னை, அண்ணாநகரில் உள்ள சிந்தாமணியில் சந்திரன் பேப்பர் மார்ட் என்கிற பழைய பேப்பர் வாங்கும் மறுசுழற்சிக் கடை நடத்தி வருகிறார்.

நான் மாதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.
எனக்கு சிறுவயதில் இருந்தே புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். நாளடைவில் இயற்கையாகவே நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் சமூக சேவையின் மீது என்னுடைய ஆர்வம் திரும்பியது.

படித்து முடித்தவுடன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வேலை தேடிக் கொண்டு இருந்தேன். ஆனால் எனது ஆர்வம் முழுவதும் ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால் எனது வீட்டு சூழ்நிலை கருதி வேலைக்குத் செல்ல வேண்டி இருந்தது. அதனால் வேலையில் சேர்ந்தேன்.
அலுவலகப் பணி சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது எனது நண்பர் திரு. ஜான், அவர் நடத்தி வரும் எம்ஜே நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் என்னை பங்கு தாரராக இணைந்து பணியாற்றுமாறு கூறினார். அவரது வேண்டுகோளை ஏற்று செயல்படத் தொடங்கியதுதான் இந்த பகுதி நேர நிகழ்ச்சி மேலாண்மைத் தொழில்.
இந்த தொழிலை பொறுத்த வரையில் நேர மேலாண்மையும், திட்டமிடலும், திட்ட மிட்ட படி அனைத்தும் செல்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வதும் இன்றியமை யாதது ஆகும்.

எனக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பெரும்பாலும் என்னுடைய விடுமுறை நாட்கள் நிகழ்ச்சி மேலாண்மை யிலேயே சென்று விடும். என்னுடைய அலுவலகம் இருக்கின்ற நாட்களில் நிகழ்ச்சிக்கான திட்ட வரைவை தயாரித்து நண்பர்களிடம் அளித்து விட்டு அந்த திட்டத்தின் படி செயல்கள் நடக்கின்றனவா என உறுதிப்படுத்திக் கொள்வேன். அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சரி செய்து விடுவேன்.

நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் இது சாத்தியமாகிறது. இதன் மூலமாக நான் பணிபுரியும் இடத்திலும் என்னால் நிறைவாக பணியாற்ற முடிகிறது.
எனக்கு மக்களை ஒன்று கூட்டுவதும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஊக்க மளித்து முன்னேற்றுவதும், சமூக சேவை செய்வதும் மிகவும் பிடிக்கும்.
நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனது பணி பெரும்பாலும் வாடிக்கையா ளர்களை சந்தித்து அவர்களது தேவையை நிறைவு செய்வதாகத்தான் இருக்கும். இதற்கிடையில் வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய நிகழ்ச்சி மேலாண்மைத் துறை சார்ந்த வேலைகளையும் பார்ப்பேன். நிகழ்ச்சி மேலாண்மைத் துறையில் நம்முடைய பணத்தை அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது.
நான் நிகழ்ச்சி மேலாண்மை தொழிலை,. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று, அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்பதை பார்த்துப் பார்த்து கற்றுக் கொண்டேன்.

ஒரு நிகழ்ச்சியில் பேச வேண்டிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் திடீரென வர இயலாத சூழல் ஏற்பட்டு விட்டது. அப்போது வேறு வழி இல்லாமல் நானே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன் அன்று முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தேவையான திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சியாளராகவும் செல்கிறேன். எனது கல்லூரிக் காலத்தில், கல்லூரியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எனது பங்களிப்பு இருக்கும்.

. இது மட்டுமின்றி சமூக சேவையில் ஹெச்பிசி (Help Public Charitable Trust) என்கிற தொண்டு நிறுவனத்தின் தலைவ ராகவும் இருக்கிறேன். அதன் மூலமாக மரம் நடுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பிற்கு உதவுதல் ஆதரவற்ற முதியோர் களுக்கு உதவுதல், பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம்.

நாங்கள் அத்தகைய உதவிகளை மற்ற பெரிய நிறுவனங்களிடம் இருந்து பெறும் நன்கொடைகள் மூலமாகச் செய்கிறோம். அவர்கள் தரும் உதவிகளை பொருட் களாகவே பெறுகிறோம். பணமாக வாங்கு வது இல்லை.

வாழ்வில் முன்னேற வேண்டுமெனில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இந்த சமுதாயத்தைப் பார்த்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

புதிய நிறுவனத்திற்கான அறிமுக நிகழ்ச்சிகள், நிறுவனத்திற்கான வளர்ச்சி நிகழ்ச்சிகள், பெரிய பெரிய வணிக வளாகங் களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பொதுமக் கள் தொடர்பு பணிகள், பிரபலமானவர் களுடைய நிகழ்ச்சி மேலாண்மைப் பணிகள், புதிய விளம்பரத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் போன்ற சேவைகளை செய்து தருகிறோம்.” என்கிறார், திரு. சரவண சந்திரன் (80561 05262).

– ரவி. தினேஷ்குமார்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]