Saturday, January 23, 2021

வணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்

தொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

பன்றிப் பண்ணை வைக்க ஏற்ற இடம் எது?

– திரு. ஜான் எட்வின் பேட்டி

பன்றி இறைச்சி உண்ணுபவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் பன்றிப் பண்ணை வைத்தால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்கிறார், திரு. ஜான் எட்வின்.
கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை, காயக்கரைக்கு அருகே சித்திரம் கோடு என்ற ஊரில் அமைந்து உள்ள தன்னுடைய பன்றிப் பண்ணையை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது குறித்து அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது,
”’நான் எனது பன்றிப் பண்ணையில் வெள்ளைப் பன்றிகளையே வளர்த்து வருகிறேன்.

வெள்ளைப் பன்றிகளில் ஒயிட் யார்க்ஷையர், லார்ஜ் ஒயிட் யார்க்ஷையர், மிடில் ஒயிட் யார்க்ஷையர், ஸ்மால் ஒயிட் யார்க்ஷையர் என பல வகைகள் உள்ளன. இவை மட்டும் அல்லாமல் கருப்புப் பன்றி, டியூரோக் போன்ற வகைகளும் உள்ளன. வெள்ளைப் பன்றி விரைவில் எடை கூடும். கருப்புப் பன்றி எனப்படும் நாட்டுப் பன்றியின் எடை மெதுவாகத்தான் கூடும். இதனால் பொதுவாக அனைவரும் தங்கள் பண்ணைகளில் வெள்ளைப் பன்றிகளையே வளர்ப்பார்கள். ஆனால் வெள்ளைப் பன்றி இறைச்சியின் சுவையை விட கருப்புப் பன்றி இறைச்சியே அதிக சுவையுடன் இருக்கும்.

பன்றிப் பண்ணை வைக்க விரும்புகிறவர்கள் அந்தஅந்த பகுதியில் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சியை விரும்பி உண்ணுபவர்கள் இருக்கும் பகுதி என்றால் எளிதில் வளர்ந்த பன்றிகளை விற்பனை செய்ய முடியும். இல்லாவிட்டால் பன்றிகளை விற்பனை செய்வது அத்தனை எளிதாக இருக்காது. பன்றி இறைச்சி உண்ணும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தே விற்பனை செய்ய முடியும்.

பன்றிகள் நிறைய குட்டிகள் போடும். ஒரு பன்றி ஒரு ஆண்டுக்கு இரு முறையும், இரண்டு ஆண்டுகளுக்கு ஐந்து முறையும் குட்டிகள் போடும். பன்றிப் பண்ணை அமைக்க விரும்புகறிவர்கள் தொடக்கத்தில் பத்து பெண்பன்றிக் குட்டிகளுடனும், ஐந்து ஆண்பன்றிக் குட்டிகளுடனும் தொடங்கலாம். விரைவிலேயே பன்றிகளின் எண்ணிக்கை பெருகி விடும். ஒரு ஆண்டில் ஒரு பன்றியின் எடை நூற்று இருபது முதல் நூற்று முப்பது கிலோ வரை வந்து விடும். ஒரு கிலோ நூற்றுப்பத்து ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

சிலர் ஐம்பது, அறுபது கிலோ இருக்கும்போதே கூட விற்பனை செய்வார்கள். அந்த பன்றிகளின் இறைச்சி சுவை குறைவாக இருக்கும். இலாபமும் குறைவாக இருக்கும். முழு வளர்ச்சி அடைந்த பிறகு விற்பனை செய்வதே லாபகரமானதாக இருக்கும். நான் நேரடியாக இறைச்சிக் கடைகளுக்கோ, உணவகங்களுக்கோ விற்பனை செய்வது இல்லை. தொடர்பாளர்களாக செயல்படும் வணிகர்கள் மூலமாகவே விற்பனை செய்கிறேன்.

பெரிய அளவுக்கு பன்றிகளுக்கு நோய்கள் எதுவும் வருவது இல்லை. அதனால் அவற்றுக்கு தடுப்பு ஊசிகள் அல்லது வளர்ச்சிக்கான ஊசிகள் எதுவும் போடும் தேவை இல்லை. எப்போதாவது அரிதாக நோய் வந்தால் சோர்ந்து படுத்துக் கொள்ளும். உணவு எடுத்துக் கொள்ளாது. உடனே கால்நடை மருத்துவரிடம் கேட்டு உரிய மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வேண்டும்.

பன்றிப் பண்ணைக்கான இடம் தேர்வு செய்யும் போது மக்கள் குடியிருப்பு அல்லாத இடங்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தேர்வு செய்ய வேண்டும். கூடாரம் அமைத்து இருக்க வேண்டும். பண்ணையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கக் கூடாது. மின்சார வசதி, தண்ணீர் வசதி இருக்க வேண்டும். இடம் தாராளமாக இருக்க வேண்டும். பன்றிகள் மீது ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் பீய்ச்சி குளிப்பாட்ட வேண்டும். எப்போதும் ஒரு பணியாளர் மேற்பார்வை செய்து கொண்டே இருக்க வேண்டும். போக்குவரத்து வசதியும் இருக்க வேண்டும்.

என்னுடைய பண்ணை கன்னியாகுமரி, திருவனந்தபுரம் அருகே இருப்பதால், அங்கெல்லாம் பன்றி இறைச்சிக்கு விற்பனை வாய்ப்பு இருப்பதால் என்னுடைய பண்ணை லாபத்துடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

உணவு விடுதிகளில் உள்ள உணவுக் கழிவுகளையே பன்றிகளுக்கு உணவாகக் கொடுக்கிறேன். அவற்றில் காய்கறி உணவுக் கழிவும், அசைவ உணவுக் கழிவுகளும் கலந்து இருக்கும். அதனால் பன்றிகளுக்குத் தேவையான புரதம் முதல் அனைத்து சத்துகளும் கிடைத்து விடும். உணவு விடுதிகளில் இருந்து உணவுக் கழிவுகளை எடுக்க நமக்கு பணம் கொடுப்பார்கள். அந்த வகையிலும் ஒரு சிறு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் திருவனந்தபுரத்தில் உள்ள உணவு விடுதிகளில் இருந்தே உணவுக் கழிவுகளை சேகரித்துக் கொண்டு வருகிறேன்.

கம்பு, மக்காச் சோளம், புண்ணாக்கு போன்றவற்றை கலந்தும் கொடுப்பேன். இந்த உணவு பன்றிகளின் எடையை கூட்ட உதவும். காலை, மாலை என இரண்டு வேளையும் உணவு கொடுக்க வேண்டும். இல்லையெனில் இருவேளைக்கான உணவையும் காலையில் போட்டு விட்டால், அவையே பிரித்து உண்ணும்.

பன்றிகளுக்கு உணவு மிகவும் முக்கியமானது. சரியாக உணவு அளித்தால் மட்டுமே அவை அமைதியாக இருக்கும். அவற்றுக்கு உணவு போதுமான அளவுக்கு இல்லாவிட்டால் கத்திக் கொண்டே இருக்கும்.

பன்றி வளர்ப்புத் தொழில் லாபகரமான தொழில் என்று நண்பர்கள் வாயிலாக கேள்விப்பட்டு, இது பற்றிய விவரங்களை எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவரிடம் சென்று மேலும் அறிந்து கொண்டேன். இப்போது நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்து கொண்டு இருக்கிறது.” என்றார், திரு. ஜான் எட்வின்.(9095575884)

– ச. சங்கீதா (மாணவ பத்திரிகையாளர்)

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

Don't Miss

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.