Tuesday, December 1, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியுமா?

அண்மைக் காலங்களில், உலகெங்கிலும் உள்ள சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிளாஸ்டிக்கிற்கு ஆன எதிர்ப்புக் குரல் போதுமான அளவு அறிவியல் அறிவும், பொறியியல் அனுபவமும் இல்லாத பொது மக்களிடம் பிளாஸ்டிக் குறித்து ஒரு பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

நடுவண் அரசு 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு முறை மட்டும் பயன்படுத்துப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தனது குறிக்கோளைஅறிவித்து, அதற்கு தேவையான திட்;டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தியாவில், இதுவரை, 22 மாநிலங்கள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்வதாக அறிவித்து உள்ளன. தடை செய்யப்பட்டு உள்ள பொருட்களில் கைப்பை, கிண்ணம், தட்டு, கரண்டி, உறிஞ்சி (ஸ்ட்ரா) தெர்மோகோல் போன்றவை அடங்கும்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பல மாநில அரசுகள் தற்போது தடை செய்து இருக்கும் நிலையில், பலவிதமான பயன்பாட்டுக்கு பயன்படும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்..

உலகெங்கிலும், பல கோடி டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசிய நாடுகளில் மட்டும் பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில், 37% பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களில் பாலி எத்திலின், பாலி அசிட்டால், பாலி கார்பனேட், பீவிசி போன்ற பல பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கும். இவற்றில் குழாய்கள், மின்பொருள்கள், விவசாயம், மருத்துவ கருவி, மீன் பிடிக்கும் வலை, பேக்கேஜிங் போன்றவை அடங்கும்.

பிளாஸ்டிக் தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. இத்தகைய நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்பது ஒரு முதன்மையான கேள்வி ஆகும்.

எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வது நடைமுறையில் சாத்தியமல்ல.

ஏதேனும் ஒரு பொருள் மக்காமல் இருந்தால் அதனை ஒரு குறையாக எண்ண வேண்டிய தேவை இல்லை. மக்காத தன்மை உள்ள பிளாஸ்டிக் பலவிதமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சான்றாக, தொலைக்காட்சி பெட்டி, தொலைபேசி, கைபேசி, பேருந்து, இரு சக்கர வாகனங்கள் போன்றவை பலவிதமான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவை மக்காத பொருளாக இருக்க வேண்டியது அவசியம்.

மக்காத தன்மை உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விலங்குகள் தின்று, யானையின் கழிவுப் பொருட்களில் காணப்படுகின்றது. பசுவின் வயிற்றில் காணப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இதே போல், பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பல பொருட்கள் கடலில் பல காலமாக மிதப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதே. அவற்றை சேகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த முழுமுயற்சி ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி நம் மனதில் எழுவதையும் தவிர்க்க முடியாது.

உலகெங்கிலும்,தற்போது மக்கக் கூடிய பிளாஸ்டிக் தயாரிக்க ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. பாலிலாக்டிக் ஆசிட் (Polylactic acid), ஸ்டார்ச் கலந்த பிளாஸ்டிக் (starch based polymer) போன்ற மக்கும் பொருட்கள் தயாரிப்பும் தொடங்கி விட்டன. அவற்றை எல்லா விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் மாற்று பொருள்களாக பயன்படுத்த முடியாது. மேலும் மக்கும் பிளாஸ்டிக்கின் உற்பத்தி செலவு கூடுதலாக உள்ள நிலையில், அவற்றின் விலையும் மிக அதிகமாக இருக்கிறது.

தற்போதைய தேவைக்கு ஏற்ப காகிதம், சணல், பருத்தி அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் துணி போன்றவை பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருளாக அமைய போதுமான அளவு கிடைக்காது.

மாற்றுப் பொருள் தேவையான அளவில் இல்லாமல், தெளிவான மாற்று திட்டமில்லாமல் பிளாஸ்டிக் தடை திட்டம் நடத்தப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சம். ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்த பல மாநில அரசுகள், எந்த அளவில் மாற்று பொருள் உள்ளது என்பதை குறித்து விரிவான ஆராய்ச்சி செய்ததாக தெரியவில்லை.

சிக்கல் பிளாஸ்டிக்கினால் அல்ல; பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குப்பை என தூக்கி வீசாமல், அவற்றை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த தேவையான வசதிகளை ஏற்படுத்தாமல் உள்ளதே பிளாஸ்டிக்கால் ஏற்படும் சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.

பல வளர்ந்த நாடுகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தெருக்களில், நீர்நிலைகளின் ஓரத்தில் தூக்கி வீசாமல் ஒன்று விடாமல் சேகரித்து மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இதற்கான முயற்சிகள் போதுமான அளவில் இல்லை. ஜப்பானில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் 83 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகின்றது. இந்தியாவில் இது மிகவும் சிறிய அளவுக்கே உள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் கூடுதல் வரி வசூலித்து வரும் நிலையில், அந்த பணத்தை இது தொடர்பான விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தலாம்.

– என். எஸ். வெங்கட்ராமன்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.