Friday, December 4, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

மொபைல் கடைகளை வளர்ப்பது எப்படி?

வணிகர்களின் மகன்களுக்கு வணிகம் செய்யும் இயல்பு தங்கள் தந்தைகளிடம் இருந்து இயல்பாகவே கிடைத்து விடுகிறது. அண்ணாமலை செல் சிட்டி என்ற மொபைல் ஃபோன் கடையை பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வரும் திரு. காசிராஜன், தன் மகன் திரு. பவித்ரனையும் தன்னுடைய தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன் தந்தையுடன் வணிகத்தை கவனித்து வரும் திரு. பவித்ரன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் மொபைல் ஃபோன் கடைகள் மற்றும் மொபைல்களின் விற்பனை பற்றி திரு. பவித்ரன் கூறும்போது,

”தொடர்ந்து மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் அப்பா மற்றும் அம்மா மட்டும்தான் மொபைல் ஃபோன் வைத்து இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு வீட்டில் இருக்கும் அனைவரும் ஆளுக்கு ஒரு மொபைல் ஃபோன் வைத்து இருக்கிறார்கள். சில வீடுகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட தனி மொபைல் ஃபோனில் விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இனி வரும் காலங்களில் இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஒருவர் இரண்டு மொபைல் ஃபோன்கள் வாங்கிப் பயன்படுத்தும் சூழல் உருவாகி வருகிறது. இதனால் மொபைல் ஃபோன்களின் விற்பனை நிச்சயம் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும்.

இன்றைய சந்தை நிலவரத்தின்படி பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பும் மொபைல் எம்ஐ (MI) பிராண்ட் மொபைல்கள்தான். எனது கடைகளிள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எம்ஐ பிராண்ட் மொபைல்கள்தான் அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் அந்த செல்பேசி தரும் கூடுதல் வசதிகளும், குறைந்த விலையும் ஆகும். இவர்கள் தரும் வசதிகளைத் தரும் மற்ற பிராண்ட் மொபைல்களின் விலை அதிகம்.

எம்ஐ கம்பெனியின் முக்கிய தொழில் கோட்பாடு, மற்ற பெரிய நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. அது ‘குறைந்த விலை, அதிக விற்பனை, அதிக வருமானம்’. இதனை அந்த நிறுவனத்தின் நிறுவனர் திரு. லெய்ஜுன் (LeiJun) பல நிகழ்வுகளிள் குறிப்பிட்டு இருகின்றார்.

என்னைப் போன்றவர்களுக்கு மொபைல்கள் விற்பனை செய்யும் எவரும் போட்டியாளர்கள்தான் அதே நேரத்தில் ஆன்லைன் இ-காமர்ஸ் (e-commerce) வலைத் தளங்களும் போட்டிதான். இணைய வழி விற்பனை அறிமுகம் ஆன புதிதில் எங்களைப் போன்றவர்களுக்கு அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஏன் என்றால், நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்கப்படும் மொபைல்களின் இடையே விலை வேறுபாடு அதிகமாக இருந்தது.

இதனால் வாடிக்கையாளர்களில் பலர் ஆன்லைனில் வாங்கினார்கள். கடைகள் வைத்திருந்த பலருக்கும் விற்பனை பெருமளவில் குறைந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. மொபைல்களின் விலையில் ஆன்லைனுக்கும், கடைகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் இணையம் வழி என்ன விலைக்கு கிடைக்கிறதோ, அதே விலைக்கு கடைகளிலும் வாங்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. சிலர் இன்னும் ஆன்லைனில் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இணையம் வழியாக மொபைல்களின் மாடல்கள், விலை போன்றவற்றைத் தேடி அறிந்து கொண்டு, வாங்குவதற்கு கடைக்குத்தான் வருகிறார்கள். கடைகளில் மொபைல்களை நேரில் பார்த்து, கையால் தொட்டு அறிந்து வாங்க முடிகிறது. அதாவது இதை ஆங்கிலத்தில் Touch and Feel என்று சொல்வார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இப்படி வாங்கவே விரும்புகிறார்கள். இணையம் வழி வாங்க வேண்டும் என்றால் அந்த அளவுக்கு விலை மலிவாக இருந்தால்தான் அங்கே போவார்கள். கடையிலும், இணையத்திலும் ஒரே விலை என்றால் கடைக்குத்தான் வருவார்கள். நாற்பது சதவீதம் வாடிக்கையாளர்கள் இணையம் வழி வாங்கினால் அறுபது சதவீதம் வாடிக்கையாளர்கள் கடைகளில்தான் மொபைல்களை வாங்குகிறார்கள்.

மொபைல்களைப் பொறுத்த வரை அவற்றின் உதிரி உறுப்புகளுக்கு முதன்மையான பங்கு இருக்கிறது. சான்றுக்கு ஒரு மொபைலின் ‘மைக்’ என்ற உறுப்பை ஐயாயிரம் ரூபாய்க்கு தர ஆட்கள் இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு தரவும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆக மொபைல்களின் விலையை நிர்ணயிப்பதில் அதன் ஊதிரிபாகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.

இதனால்தான் ஒரு நிறுவனம் வழங்கும் 25000 ரூபாய் விலை உள்ள ஒரு மொபைலை வேறு ஒரு நிறுவனத்தால் அதே ஸ்பெசிஃபிகேஷன்ஸ் உடன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வழங்க முடிகின்றது.

இப்போது வரும் பெரும்பாலான மொபைல்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ என்று சொல்லப்படும் வகை மொபைல்களே. தற்போது ஒருவர் நினைத்தாலும் அவரால் ஒரு மொபைலை அதிக அளவாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் அவ்வப்போது வரும் அப்டேட்கள் அந்த செல்பேசிகளின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒரு மொபைலை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பழுது ஆனால் பழுது நீக்கி திரும்ப பயன்படுத்த நினைத்தாலும், அது அவர்களுக்கு எமாற்றத்தையே தரும்.

ஜிஎஸ்டி (GST) அனைத்து மொபைல்களுக்கும் பன்னிரண்டு சதவீதம் அரசால் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் துணைக் கருவிகள் மற்றும் உதிரி பாகங்களுக்கான வரி வேறுபடுகிறது.

ஜிஎஸ்டி வந்ததற்கு பிறகு எங்களைப் போல் வணிகம் செய்பவர்களுக்கு சிக்கல் என்பதை விட, தேவையற்ற பணிச் சுமைகள் அதிகரித்து விட்டன. சினிமா நகைச்சுவை காட்சியில் வரும் வசனத்தில் தம்பி ராமையாவிடம் ஒரு ஜோதிடர் கூறுவது போலத்தான். ‘அதுவே பழகிடும்’ என்பது போல் இப்போது ஜிஎஸ்டி ஆகி விட்டது.

நான் என் அப்பாவுடன் இணைந்து வணிகம் செய்யக் கிடைத்த வாய்ப்பு காரணமாக அதிக அளவில் பயனடைந்து வருகிறேன். முதல் முதலாக அவர் வழியாகதான் வணிக உலகத்தைப் பார்த்தேன். அவர் எனக்கு எப்போதும் வணிகம் சார்ந்த அத்தனை செய்திகளையும் பொறுமையாக எடுத்துக் கூறுவார். வணிகம் தொடர்பாக மும்பை, டெல்லி எந்த நகரத்துக்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் சென்று அங்கு உள்ள வணிகர்களின் அறிமுகத்தை ஏற்படுத்தித் தருவார்.

தொழிலில் ஒரு சிக்கல் என்றால், அதற்கு, அந்த சிக்கல் அப்படித்தான் இருக்கும். அதனை நீயே எதிர்கொண்டு அதற்கான தீர்வைக் கண்டுபிடித்து செயல்படுத்துமாறு ஊக்கப்படுத்துவார். ஏதேனும் தவறாக் செயல்பட்டு விட்டால் அதற்காக கடிந்து கொள்ள மாட்டார். அதனை எப்படி எதிர் கொண்டிருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார். தங்கள் பிள்ளைகள் தொழிலில் வளர்க்க வேண்டும் என்று எண்ணும் அப்பாக்களுக்கு என்னுடைய அப்பா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். நான் அவர் நிழலில்தான் செயல்படுகின்றேன். அப்படி செயல்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மொபைல் ஃபோன்கள் உற்பத்தியில் தற்போது உலகில் முதல் இடத்தில் இருப்பது சீனாதான். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் அரசாங்கம் என்று கூறலாம். எப்படி என்று சொன்னால் அரசாங்கம் அங்கு இருக்கும் தொழில் முனைவோருக்கு நிறைய ஊக்கம் அளித்து, தொழிலில் வெற்றி பெறுவதற்கான எல்லா உதவிகளையும் செய்கின்றது. இது தொழில் செய்ய அங்கு நல்ல சூழல் நிலவுவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. சீன நிறுவனங்கள், ”நாங்கள்தான் இந்த உலகிற்கு புதிய தொழில் நுட்பங்களை அளிப்பவர்களாக இருக்க வேண்டும்” என்று கருதுகின்றன. அதை அவர்கள் கிட்டத்தட்ட உண்மையாக்கியும் வருகிறார்கள்.

இப்போது பொரும்பாலும் மொபைல் விற்பனை எளிதாகி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு போல, இப்போது ஒரு வாடிக்கையாளருக்கு ப்ளூடூத் என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்றெல்லாம் சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கிக் கூற வேண்டியது இல்லை. வாடிக்கையாளர்களை இப்போது அதிக தொழில் நூட்பச் செய்திகளை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு கடைக்குள் வரும்போதே சில வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய மொபைல் ஃபோனை முடிவு செய்து, அதைப் பற்றி இணையத்தில் நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகுதான் வருகிறார்கள். கடைக்கு வந்து அவர் விரும்பும் நிறம் மற்றும் மாடல் இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் கேட்கும் நிறமுள்ள மொபைல் இருந்தால் உடனடியாக வாங்கி விடுவார்கள். மணிக் கணக்கில் அவர்களிடம் பேசி விற்பனை செய்ய வேண்டிய நிலை மாறி விட்டது.

இருந்தாலும் புதிய தொழில் நுட்பங்களை நாங்களும் அத்துப்படியாக தெரிந்து வைத்திருந்தால்தான் எங்கள் வணிக வளர்ச்சிக்கு நல்லது. சிறிது காலத்துக்கு முன் ஃபேஸ் அன்லாக் (Face unlock) தொழில் நுட்பத்துடன் மொபைல்கள் வந்தன. இவை முகம் பார்த்து மொபைலை அன்லாக் செய்யும். இதைத் தொடர்ந்து ஐரில் அன்லாக், அதாவது கண் கருவிழியை ஸ்கேன் செய்து அன்லாக் செய்யும் தொழில் நுட்பம் அண்மையில் வந்து உள்ளது. இந்த தொழில் நுட்பம் அதிக விலை கொண்ட மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது மிகவும் புதிய செய்திகளை நாம்தான் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.
விரைவில் குறைந்த விலை மொபைல்களிலும் இந்த வசதி வர இருக்கின்றது. புதிய தொழில் நுட்பங்களை எங்கள் கடையில் பணி புரியும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்து விடுவேன். வாடிக்கையாளர்களை கையாள பணியாளர்களுக்கான இந்த பயிற்சி மிகவும் தேவை என்று கருதுகிறேன்.

சில பிரபல நிறுவனங்கள் முன்பு போல் இல்லாமல் இப்போது எங்களுக்கான வர்த்தக தள்ளுபடியைக் குறைத்து விட்டன. பாதிப்பு என்றால் இதுதான் எங்களுக்கு ஒரு பாதிப்பாக இருக்கிறது. ஏனெனில் எங்களுக்கான லாப விகிதம் குறைந்து விடுகிறது.
எங்கள் கடையில் மொபைல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றோமோ, அதே போல் துணைக் கருவிகள் மற்றும் உதிரி பாகங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றோம். ஒரு வாடிக்கையாளர் ஒரு மாடல் மொபைல் கொண்டு வந்தால் எங்களிடம் அதற்கு ஏற்ற பவுச்கள் குறைந்தது ஐந்து வகைகளாவது இருக்கும். மூன்று வகை டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass) ஆவது இருக்கும். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு பிடித்த மாடல் உதிரிபாகங்களை வழங்க முடிகிறது..

நான் வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. இன்றும் நான் புதிது புதிதாய் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். கற்றுக் கொள்வதில் எனக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனது வாடிக்கையாளர்களுடன் எப்போதும் நட்புறவு கொண்டு இருப்பேன். இது எனக்கு கூடுதலாக நண்பர்களையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

கடந்த பொங்கல் திருநாளன்று செங்குன்றத்தில் புதிதாக எஸ்கேஎல்எஸ் கேலக்சி மால் எதிரில், மூவாயிரம் சதுர அடியில் இந்தப் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய அளவில் இரண்டு தளங்கள் கொண்ட கிளையை திறந்து இருகிறோம். இதில் மொபைல்களுடன் புதிதாக ஸ்மார்ட் டிவிக்களும் சேர்த்து விற்பனை செய்கிறோம். இதற்கும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.” என்றார்.

– செ. தினேஷ் பாண்டியன்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.