வீட்டில் இருந்தே சம்பாதிக்க, தையல்!

பெரிய அளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடை பின்னுவது, தையல் ஆகியவை உதவும் என்கிறார், சிதம்பரம் அருகே உள்ள கோணயாம் பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ஜமுனா ராணி. இவரிடம் அது எப்படி என்று கேட்டபோது,
”நான் பத்து ஆண்டுகளாக வீட்டில் இருந்தே தையல் மற்றும் கூடை பின்னுவது ஆகியவற்றை செய்து வருகிறேன். நான் வாழ்வது ஒரு சிறிய கிராமமாக இருப்பதால் தையல் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொண்டு வீட்டில் இருந்தவாறே தையல் தொழில் செய்து வருகிறேன். சுடிதார், ஜாக்கெட் போன்றவற்றைத தைத்துக் கொடுப்பதால் ஓரளவுக்கு வருமானம் வரும். நகரங்களில் வருவதைப் போன்ற வருமானத்தை கிராமங்களில் எதிர்பார்க்க முடியாது.

எங்கள் அடிப்படை செலவுக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறது. இது தவிர யாராவது பிளாஸ்டிக் ஒயர் கூடை பின்னித் தருவேன். ஆனால் கூடை பின்னுவதை விட தையல் தொழிலில் தான் எனக்கு வருமானம் அதிமாக கிடைகிறது.
ஒரு கூடையின் உதிரிப் பொருட்களை 50 ரூபாய்க்கு என்று வாங்கி கூடையைப் பின்னி 150 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன். தையல் தொழிலில் ஒரு நாளைக்கு சுமார் ஐநூறு ரூபாய் அளவுக்குக் கிடைக்கும். நாங்கள் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. வாடகை வீட்டில் இருந்தால் சமாளிப்பது சிரமமாக இருக்கும்.
எனக்கு இந்தத் தொழிலகள் இருப்பதால் நேரம் போவதே தெரியாது. நேரத்தை வீணாக்காமல் என்னால் முடிந்த வேலைகளைச் செய்து பொருளீட்டுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்கிறார், இவர்.

– ரா. காயத்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here