இரண்டு தவளைகள்தான்; சத்தம்தான் அதிகம்!

சீன விவசாயி ஒருவரின் வீட்டிற்கு அருகே தவளைகள் நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் ஏராளமான அளவிற்கு, அதாவது நூற்றுக் கணக்கில் தவளைகள் இருப்பதாக கருதினார். நீண்ட நாட்களாக அவை இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருப்பது அவருக்கு எரிச்சலாக இருந்தது. நகரில் உள்ள அவருடைய நண்பரிடம் சென்று, ”என் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் உள்ள நூற்றுக் கணக்கான தவளைகள் இரவெல்லாம் கத்தி என்னைத் தூங்க விடாமல் செய்கின்றன. இதற்கு என்ன செய்யலாம்?”என்று ஆலோசனை கேட்டார்.

அதற்கு நண்பர், அந்த தவளைகளை எல்லாம் பிடித்து ஒரு உணவகத்துக்கு விற்பனை செய்து விடலாம் என்று ஆலோசனை கூறினார். சீனாவில் தவளைகளை உண்ணும் பழக்கம் உள்ளது.

இரண்டு நண்பர்களும் சேரந்து வலை வீசினர். குளம் முழுவதும் துழாவியும் இரண்டே இரண்டு தவளைகள்தான் கிடைத்தன.

ஒரு ஜோடி தவளைகள் சேர்ந்து சத்தமிடுவதைத்தான் இரவின் இருளில் எண்ணிக்கை அறியாமல் நூற்றுக் கணக்கான தவளைகள் சத்தம் போடுவதாக அந்த விவசாயி தவறாக நினைத்ததைப் போன்று மற்ற நிறுவனங்களின் உண்மை செயல் பாட்டினை அறியாமல் அல்லது தெரியாமல் பல தொழில் முனைவோர் போட்டியாளர்களை தவறாக கணித்துச் செயல்படுகிறார்கள்.

– முனைவர் ச. குப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here