Saturday, January 23, 2021

வணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்

தொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

கடல்பாசியில் இருந்து மின்சாரம்

மத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதன் தேவையைக் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும் தேவையாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீசில் நடந்த உலக சுற்றுச் சூழல் மாநாட்டில், காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை கொண்டு 175000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தும் என இந்தியா கூறி உள்ளது.

காற்றாலை மற்றும் சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய அரசு பெரிதும் ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 1500 மெகா வாட் என்ற நிலையில் இருந்து தற்போது 25000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதே போல், காற்றாலை சார்ந்;த மின்திறனும் கணிசமாக உயர்ந்து தற்போது 32500 மெகா வாட் என்ற அளவை எட்டி உள்ளது.

காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் இந்த அளவுக்கு நாலரை ஆண்டுகளில் கூடி இருக்கிறது. இருப்பினும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்திறன் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் தேவையை போதுமான அளவு குறைக்காது.

தற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித் திறன் 3,45,000 மெகா வாட். நாட்டின் மின்சார தேவை சுமார் 1,71,000 மெகா வாட். இந்தியாவின் 80 சதவீதம் மின் உற்பத்திக்கு . நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் மின் தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 6.5 சதவீதம் கூடி வருகிறது. இத்தகைய கூடுதலான தேவை வருங்காலத்தில் தொடரும்.

இந்தியாவின் மின் உற்பத்தி கணிசமான அளவு நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவை எரிபொருளாக கொண்டு செய்யப்படுவதாலும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் பெருமளவில் தேவைப்படுவதாலும், கடந்த ஆண்டு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32 மில்லியன் டன் தான்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 25000 மில்லியன் க்யூபிக் மீட்டர் (cubic metre) இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆண்;டொன்றிற்கு சுமார் 32000 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவே உள்ளது.

தேவை கூடி வருவதால் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் இறக்குமதி ஆண்டிற்கு 6 சதவீதம் அளவு கூடி வருகிறது. இத்தகைய கூடுதல் வரும் காலத்திலும் தொடரும்.
தற்போது, இந்தியா ஈட்டும் அந்நிய செலவாணியில் 70 சதவீதம் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யவே செலவிடப்படுகிறது. மேலும் இறக்குமதி கூடும் நிலையில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு நிலை மிகவும் பாதிக்கப்படும். இவ்வாறு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையை காற்றாலை, சூரிய மின்சக்தியை மேலும் கூட்டுவதனால் தவிர்க்க முடியுமா என்பதே இப்போது நம் முன் உள்ள கேள்வி.

சிக்கல் என்னவென்றால் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறனில், சுமார் 15 சதவீதம் அளவே மின்சக்தி உற்பத்தி செய்யக் கூடும். காற்றாலை மின் சக்தியில், சுமார் 30 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். இத்தகைய குறைவான மின் உற்பத்திக்கு காரணம், சூரிய ஒளி 24 மணி நேரமும் கிடைக்காது என்பதும், காற்று ஆண்டுக்கு சுமார் 4 மாதமே தேவையான வேகத்தில் வீசும் என்பதும்தான், சூரிய ஒளியை ஒரளவே மின் சக்தியாக மாற்ற முடியும்.

அதாவது 25000 மெகா வாட் சூரிய மின்சக்தி திறன் உள்ள நிலையில் மின் சக்தி உற்பத்தி அளவு 3750 மெகா வாட் அளவே கிடைக்கக் கூடும்.
அதாவது, இந்தியாவின் 1,75,000 மெகா வாட் சூரிய மின்சக்தி, காற்றாலை மின் சக்தி போன்றவற்றால் உற்பத்தித் திறன் கூடினாலும், கிடைக்கக்கூடிய மின்சாரம் சுமார் 35000 மெகா வாட் என்றே நிலையே காணப்படும்.

இந்தியா முழுவதும் மின்சாரம் கொண்டே ரயில் எஞ்சின்களை இயக்கத் தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சார வாகனங்கள், மற்றும் மின்சார ரயில் இயங்க பாட்டரிகள் தேவை. இந்த பாட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் டீசலையோ, இயற்கை எரி வாயுவையோ கொண்டு தயாரிக்கப்பட்டால், நாட்டின் டீசல், இயற்கை எரிவாயுவின் தேவையும், இறக்குமதியும் குறையாது.

மாற்று நடவடிக்கை
சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி பெரிதளவில் அதிகரிக்கப்பட்டாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் தேவை ஒரளவே குறையும். கணிசமான அளவு குறையாது.

இத்தகைய நிலையில், கடல்பாசி கொண்டு எரிபொருள் தயாரிக்கக் கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும்.
அண்மைக் காலங்களில் வளர்ந்த நாடுகளில், கடல் பாசியிலிருந்து எரிபொருள், மற்றும் வேதிப் பொருட்கள் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கடற்பாசியை குறித்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில், கடல்பாசியில் இருந்து எரிபொருள் தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகின்றது.
கடல்பாசி விவசாயம் செய்ய தேவையானது சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்சைடும்தான். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு கடல்பாசி விவசாயம் மிகவும் ஏற்றது. கடல்பாசி விவசாயம் அறுவடை செய்ய 30 முதல் 40 நாட்கள்தான் தேவை. கடல்பாசியில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் காணப்படும்.

இந்தியாவில் சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்சைடும் தேவையான அளவு கிடைக்கின்றன. கடல் பாசியில் இருந்து எரி பொருளாக பயன்படுத்துவதற்கு ஏற்ற எண்ணெயை பிரித்து எடுத்து விட்டு மீதமுள்ள சக்கையில் இருநது எத்தனால் தயாரிக்கலாம்.

கடல்பாசியை கடல்புறங்களிலும், தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்து, அவற்றில் இருந்து எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், எரிபொருள் கிடைப்பது மாத்திரமல்லாமல் விவசாயம், தொழில்துறைக்கும் மிகுந்த நன்மை ஏற்படும். வேலை வாய்ப்புகள் பெருகும்.

– என். எஸ். வெங்கட்ராமன், நந்தினி கன்சல்டன்சி

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

Don't Miss

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.