GST Clarification in Tamil
கேள்வி: நான் வரியுள்ள பொருளையும் வரியில்லாத பொருளையும் ஒரு வாடிக்கையாளருக்கு விற்றால் தனித்தனியாக பில் போடவேண்டுமா?
பதில்: தேவையில்லை. ஒரே பில்லில் இரண்டையும் காட்டிக் கொள்ளலாம். இரண்டிற்கும் தனித் தனியாக HSN காட்டினால் போதுமானது.
கேள்வி: நான் approval (sale or return) முறையில் வரியுள்ள பொருள்களை எடுத்து செல்கிறேன். இதற்கு ஜிஎஸ்டியில் என்ன வழிமுறைகள்?
பதில்: இதற்கு டெலிவரி சலான் மற்றும் மின்வழிச் சீட்டு பயன் படுத்த வேண்டும். பில் புக்கை கையுடன் எடுத்து செல்ல வேண்டும். விற்பனை ஆகும்போது Tax Invoice போட வேண்டும்.
கேள்வி: எங்கள் தொழிற்சாலையில் இருந்து(OEM) உதிரி பாகங்கள் செய்வதற்காக moulds and dies (Free of cost) அனுப்பி வைக்கிறோம். இதற்கு நாங்கள் உள்ளீட்டு வரி திருப்புதல் வேண்டுமா?
பதில்: GST Circular No. 47/21/2018-GST dt 08.06.2018 படி இதற்கு திருப்புதல் அவசியம் இல்லை.
நான் 150 லட்சத்திற்கும் குறைவாக வணிகம் செய்கிறேன். கலவை வரி திட்டத்தில் (Composition Scheme) கண்டிப்பாக சேர வேண்டுமா?
தேவை இல்லை. வியாபாரி உள்ளீட்டுவரி வழங்களுக்கு உண்டான வரி செலுத்தும் பட்சத்தில் கலவை வரி திட்டத்தில் இருந்து வெளியேறி இயல்பான முறையில் வரி செலுத்தலாம்.
எல்யூடி(LUT) வாங்குவதில் ஏதேனும் மாற்றம் உண்டா?
ஆம், மாற்றம் உண்டு. தற்போது எல்யூடி (Letter of Undertaking-LUT) வாங்குவது எளிதாக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வலை வாயில் மூலமாக கணினியுடன் நேரடி இணைப்பில் தகவல்களை பதிவு செய்து DSC/EVC ஒப்பமிட்டு பெற்றுக் கொள்ளலாம். ஏஆர்என் (ARN-Application Reference Number) எண்ணைத்தான் எல்யூடி எண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பதிவு சான்றிதழில் திருத்தம் அனுமதிக்கப்படுமா?
ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 28 -ன் படி ஜிஎஸ்டி வலை வாயில் மூலமாக திருத்தங்கள் ஜிஎஸ்டி அலுவலர் அனுமதி பெற்று செய்து கொள்ளலாம்.
பணி எடுத்து செய்பவர் (job worker) அவருடைய இடத்தில் இருந்து விற்பனை செய்ய முடியுமா?
ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 143 -ன் படி முடியும். அவர் பதிவு பெற்றவராக இருத்தல் அவசியம். அல்லது முதன்மை உற்பத்தியாளர் அந்த இடத்தை கூடுதல் வியாபார இடமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
வாங்கிய விலையை விட ஜிஎஸ்டி -ல் குறைவாக விற்பனை செய்ய முடியுமா? அதன் வித்தியாசத்திற்கு உள்ளீட்டு வரி திருப்பம் வேண்டுமா? –
ஜிஎஸ்டி -ல் அவ்வாறு திருப்பம் வேண்டும் என்று சொல்லப்படவில்லை. குறைவாக விற்பனை செய்ய அனுமதி உண்டு.
எனது வெளிநாட்டு வாடிக்கையாளர் அவர்களுடைய பொருளை எனது நிறுவனத்தில் தயார் செய்வதற்காக மோல்டு (mould) மற்றும் பேடென்டிற்காக(patent) பணத்தை அந்நிய செலாவணியில் கொடுக்கிறார். அந்த மோல்டு என்னிடமே உள்ளது. இதற்கு பெறப்பட்ட பணத்தை ஏற்றுமதியாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது அதற்கு ஐஜிஎஸ்டி (Integrated Goods and Service Tax-IGST) உண்டா?
நீங்கள் தயார் செய்த மோல்டு மற்றும் பேடென்ட் இந்தியாவை விட்டு செல்லாத வரைக்கும் அதை ஏற்றுமதியாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த பணத்தை முன்பணமாக உங்கள் பதிவேடுகளில் காட்ட வேண்டும். உங்கள் அயல்நாட்டு வணிகருக்கு அந்த பொருள் மாற்றம் செய்யாதவரை அதை ஜிஎஸ்டி வழங்கலாக கருத முடியாது. அதற்கு ஜிஎஸ்டி இல்லை.
– கே. ரெங்கராஜ், கோவை