Tuesday, January 19, 2021

பழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா?

இப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...

Latest Posts

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

ஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்து உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற இரண்டு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு கிட்டத்தட்ட ரூபாய் 69-ஐ நெருங்கி விட்டது. பிறகு, சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆகஸ்ட்,3-ஆம் தேதி ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.60 ஆக நிலை கொண்டது.

இந்தியா ரூபாய் மதிப்பு சரிவுக்கு, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருதல், மேற்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி ஏற்படும் அரசியல் பதற்றங்கள், அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு என பல காரணங்கள் உள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.60 -அதிகமாக வீழ்ச்சி அடைந்த போது, பொருளாதார வல்லுநர்கள் அதை ஒர் ‘அபாய அறிவிப்பு’ என்று கூறினர். அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஒடி விட்டன. மீண்டும் தற்போது ரூபாயின் மதிப்பு 68.60 – இல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாம் ஒரு விஷயத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

எப்போதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறதோ, அப்போதெல்லாம் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏனெனில், இந்தியப் பொருள்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் குறைவான டாலர்களைக் கொடுத்தால் போதுமானது. இப்போது ரூபாய் மதிப்பு குறைந்து, விலை சரிந்து உள்ள போதிலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன ?
2018 ஏப்ரல் மாதம் இந்திய ஏற்றுமதி, குறிப்பாக, ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், தோல் பொருள்கள் ஆகிய பல காலமாக பிரபலமாக இருந்துவரும் பொருள்கள் கூட ஏற்றுமதியில் சரிவை சந்தித்து உள்ளன என்பதை மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. எனவே, நடப்புக் கணக்கில் ஏற்பட்டு உள்ள பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், ரூபாயின் மதிப்பை ஒரளவேனும் தாங்கிப் பிடிப்பதற்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்களை விட, நாம் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கூடுதல் டாலர்களை சம்பாதிக்க வேண்டும். அதாவது அந்நியச் செலாவணியில் செலவை விட வரவு அதிகமாக இருக்க வேண்டும்.

நாம் அதிகமாக எதை இறக்குமதி செய்கிறோம்? முதலாவது, கச்சா எண்ணெய்; அடுத்ததாக, தங்கம். தங்க இறக்குமதி அண்மைக் காலமாக சற்று குறைந்து உள்ளது. புதிதாக, மின்னணுப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளோம். காலங்காலமாக, இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. ஆனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) ஏற்றுமதியின் பங்களிப்பு வெறும் 12 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம், தென் கொரியாவை எடுத்துக் கொண்டோமானால், அந்த நாட்டின் ஜிடிபி யில் ஏற்றுமதியின் பங்கு 42 சதவீதம்!
சீனாவின் ஏற்றுமதியும் குறைந்து உள்ளது. அந்த நாட்டின் ஜிடிபி சில ஆண்டுகளுக்கு முன் 13 சதவீதம் என உச்சத்தில் இருந்த போது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 37 சதவீதமாக இருந்தது.

சீனாவில் ஏற்றுமதி குறைந்து உள்ள இந்தத் தருணத்தில், அதை பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டாமா? இனியாவது, சீனாவின் ஏற்றுமதியின் சந்தையில் ஒரு பகுதியையாவது இந்திய ஏற்றுமதியாளர்கள் கைப்பற்ற முனைய வேண்டும். மாறாக, வங்க தேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்து உள்ளன. 2017-18-இல் நமது ஏற்றுமதி 13 சதவீதம் மட்டுமே. ஏற்றுமதி 20 சதவீதத்தை எட்டிப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்தின் ஏற்றுமதி, 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் என்பது, காரிருளில் ஒளிக்கீற்று தெரிவது போல் நம்பிக்கை அளிக்கிறது.

இந்த சூழலில், ஜிஎஸ்டி ஏற்றுமதியை பாதிப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. சான்றாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யும் கச்சா பொருள்களுக்கு(Raw material) அவர்கள் செலுத்தும் வரித் தொகையில் திரும்ப கொடுக்க வேண்டிய(Refund) தொகையை விரைந்து கொடுக்க வேண்டும் என்கிற ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஏற்றுமதியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது மற்றொரு புகார். இதனால் சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் குழப்பம் அடைகிறார்கள். ஏற்றுமதியை இது நேரடியாக பாதிக்கக்கூடியது. சான்றாக, மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் (Central Board of Excise and customs) 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் (மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்களில்) ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து 173 அரசாணைகளை பிறப்பித்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

இந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறை (Electronic Data Interchange) நடைமுறையை விரைந்து அறிமுகம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆவணங்கள் அளிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் கால விரயம் குறையும்.

உலகு வங்கியின் அண்மைய ஆய்வின் படி, இந்தியாவில் ஏற்றுமதியாளர்களுக்கு துறைமுக விதிமுறைகளை நிறைவு செய்வதற்கு, சீனாவில் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தை விட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில் இந்தியா 146- வது இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.

நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்பு நிலவிய பொருளாதார மந்தநிலை குறைந்து தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டு உள்ளது.

இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டு நாம் ஏற்றுமதியை உயர்த்த முனைய வேண்டும். அதற்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அனைத்து வகையிலும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

வங்கிகளும் ஏற்றுமதியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் புரியும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன், ஏற்றுமதிக்கு முந்தைய தயாரிப்புக் கடன் (பேக்கிங் கிரடிட்) ஆகியவற்றை வழங்குவதில் பரிவுடனும் விரைந்தும் செயல்பட வேண்டும். ஏற்றுமதியாளர்கள் வெறும் வியாபாரம் மட்டும் செய்வதில்லை. நாட்டுக்கும் நல்லது செய்கிறார்கள் என்பதை வங்கிகள் மனதில் கொள்ளவேண்டும்.
நியூசிலாந்து, கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை புதிய, வளரும் சந்தைகளாக அரசு அறிவித்தது. இது ஒரு ‘ஃபோக்கஸ்’ திட்டம். இந்த திட்டத்தை எத்தனை ஏற்றுமதியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த ஆய்வின் விளைவாக கிடைக்கும் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அந்த திட்டத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒருவேளை அந்த திட்டம் நல்ல பலனை அளித்து உள்ளது என்றால், மேலும் புதிய சந்தைகளை ‘ஃபோக்கஸ்’ திட்டத்தில் இணைப்பது நல்லது.

ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், ஒட்டு மொத்த ஏற்றுமதியில் பரிமாற்ற செலவு மட்டும் 7 சதவீதம் முதல் 10 சதவிதம் வரை ஆகிறது. துறைமுகக் கட்டணங்கள், வங்கி கட்டணங்கள், அந்நியச் செலாவணி கட்டணங்கள் ஆகியவற்றை கட்டுப்படியாகும் அளவிற்கு குறைக்க வேண்டும். ஏற்றுமதியாளர் அமைப்புகளின் இந்த கோரிக்கையை மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து, நியாயமான நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்.

இந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிப்பவை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியாகும். அப்படி இருந்தும், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

இதற்கு, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு ஆகிய விஷயங்கள் தான் காரணம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. சாயப்பட்டறைகள், சலவைஆலைகள், போன்றவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பது வெளிப்படை..
இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் – தமிழ்நாடு உள்பட – நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்படுகின்றன. இதனால் ஏற்றுமதி இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணி வாய்ப்புகளும் பறிபோகின்றன.

இந்த பிரச்சனை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, ஜவுளித்தொழில், ஜவுளி கலைநயம் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி, பொதுமக்கள் நலம் போன்ற பல்வேறு கோணங்களில் ஆராயப்படவேண்டும்.

இப்பிரச்னையை மேம்போக்காக அணுகாமல், மத்திய , மாநில அரசுகள் மற்றும் பொதுநலம் பேணும் வல்லுநர்கள் இணைந்து, ஆழமாக பரிசீலித்து, நடைமுறை சாத்தியமான தீர்வைக் கண்டு, விரைந்து சீரமைக்க வேண்டும். இதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அத்தகைய செயல்பாடு ஏற்றுமதி ஏற்றம் பெற நிச்சயம் உதவும்.

– எஸ். கோபாலகிருஷ்ணன், நிதியியல் வல்லுநர் (தினமணியில்)

 

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

Don't Miss

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.