இந்தியா பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்றால் முதலாளிகள் சார்புடைய கொள்கை முடிவுகளை கைவிட்டு, முற்றிலும் தொழில் சார்ந்த கொள்கை முடிவுகளை நோக்கி நகர வேண்டும்.
தொழில் சார்ந்த கொள்கை முடிவே சரியான பொருளாதார நடைமுறையாக இருக்கும். அதுவே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை சாத்தியப்படுத்தும்.
Also read: தொழில்களில் முன்னேற்றம் காண எது முதன்மை?
இந்தியா இன்னும் முற்றிலுமாக முதலாளிகள் சார்புடைய கொள்கைகளில் இருந்து வெளியே வரவில்லை. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில் சார்புடைய கொள்கைகளே அவசியம். இந்தியா அதை நோக்கி நகர வேண்டும். முதலாளிகள் சார்புடைய கொள்கைகள் சரியான தொழில் முறை அல்ல. எனவே வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க அதற்கேற்ற கொள்கைகளை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் நிறுவனங்களிடையே போட்டிச் சூழலை ஏற்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கைகளை பரிசீலிக்க வேண்டும். தொழில் சார்புடைய கொள்கைகள் அவற்றை சாத்தியப் படுத்தும்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அசெம்பிள் இன் இந்தியா மூலம் நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய 4 கோடி வேலை வாய்ப்புகள் 2025-ல் உருவாகக் கூடும். 2030-க்குள் 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால் இந்த எதிர்பார்ப்பை கொரோனா இன்னும் தள்ளிப் போடக் கூடும்.
– கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்