நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட இருக்கும் அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டத்தின்படி, புதிய பதிவுகள் மற்றும் பதிவுச் சான்றிதழில் செய்யப்படும் திருத்தம் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும்போது, அதற்காக இணைக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலம், இந்தியில்தான் இருக்க வேண்டும் என்று பத்திரிக்கை தலைமைப் பதிவாளர் அலுவலகம் வலியுறுத்துகிறது. பிற மொழியில் அனுப்பப்படும் ஆவணங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவற்றை மொழி பெயர்த்து அனுப்ப வேண்டி இருப்பதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
Also read: விளம்பர இதழ் நடத்த கைகொடுக்கும் பயிற்சிகளும், விருதுகளும்!
எனவே, சென்னை உள்ளிட்ட 5 பெருநகரங்களில் மூடப்பட்ட பத்திரிக்கை பதிவு மண்டல அலுவலகங்களை மீண்டும் திறந்து, அவற்றில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பத்திரிக்கை தகவல் அலுவலக தலைமை அதிகாரிகள் மூலம் பதிவுச் சான்றிதழ் வழங்க அரசு முன்வர வேண்டும்.
– பா. ம. க. நிறுவனர் திரு. இராமதாஸ்