பொருளாதார நெருக்கடிகளில் இருந்து சமாளிக்க ‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். அவ்வாறு கடன் பெறுவதற்கு முன்பு பின்வரும் செய்திகளைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.
கடன் கேட்டு வங்கியை அணுகும் முன்பாக நம் பொருளாதாரத்தை பற்றித் தெளிவு வேண்டும். வங்கி விதிகளின்படி, நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பார்க்க வேண்டும்.
Also read: நகைக் கடனா? கவனம்
கடனை திருப்பிச் செலுத்த முடியாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான ‘கிரெடிட் ஸ்கோர்’ அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் நிறைவாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தனிநபர் கடனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி, தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே, இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது. நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.
கடன் தொகையைப் பொறுத்து, வங்கிகளின் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை இழக்க வேண்டி வரும்.
Also read: லெட்டர் ஆப் கிரடிட் தரும் பயன்கள்
தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த வேண்டும். அது பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். தவணை நாளில் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் அவசியம் ஆகும்.
– த. செந்தமிழ்ச் செல்வன்