நூறு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் வராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருந்தாலும் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் கேள்விப்பட்டோம். கடந்த சில ஆண்டுகளில் வங்கிகளுக்கு வராக் கடன் மூலம் ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய பல லட்சம் கோடி ரூபாய் என்று கேள்விப்பட்டோம். பல வங்கிகள் சுமார் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வராக் கடன் என்று தள்ளுபடி செய்ததாகவும் கேள்விப்பட்டோம். நூறு கோடி, ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்த தாகவும் பரவலாக கேள்விப் பட்டோம்.
Also read: வருமானத்தைப் பெருக்கும் பனைப் பொருட்கள்
ஆனால், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் நலிவடைந்து விட்டால், அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ததாக எந்தவித தகவலும் இல்லை. ஆனால் சர்ஃபாசி சட்டத்தின் அடிப்படையில் தொழிலில் நலிவடைந் தவர்களின் கடனை வங்கியாளர்கள் கடுமையான முறையில் வசூலித்து விடுகிறார்கள்.
பண மதிப்பு இழப்பு (டிமானிட்டைசேஷன்), மிகையான ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக பல் சிறுதொழில்கள் நலிவடைந்து வங்கியாளர்களுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாத நிலை எற்பட்டு உள்ளது. இவர்களின் கடனை யார் ஆணை இட்டால் தள்ளுபடி செய்வார்கள் என்று தெரிவித்தால் கோடி நன்றி கூறுவோம்.
– டி. வி. அரிகரன், தலைவர், செடிசியா