நம்முடைய வலைத்தளத்திற்கு மற்ற வலைத்தளத்தில் (Website), வலைப்பூக்களில் (Blogger)) தொடர்பு (Link) ஏற்படுத்துவதே Back Link என்று அழைக்கப்படுகிறது. இவற்றை லிங்க் பில்டிங்(Link Building) என்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் குறிப்பிடப்படும்.
சான்றாக, நாம் ஒரு தொழில் செய்து வருகிறோம் அந்த தொழில் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவோம். நாம் மட்டுமே சொன்னால் சில மக்களையே சென்று சேரும் கூடவே நம் தொழிலை பற்றி நம் நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள், நமக்கு அறிமுகமான மனிதர்கள், இவர்கள் எல்லோரும் நம் தொழில் பற்றி மற்றவர்களிடம் பேசினால் நம் தொழில் பல நபர்களை சென்று சேரும். அதாவது, நம் தொழிலுக்கு இவர்கள் எல்லாம் பின்னால் இருந்து உதவி செய்கிறார்கள் இவர்கள்தான் நம் தொழிலுக்கான backlink.
இதே போல் நம் வலைத்தள முகவரி கொண்டு நேரடியாக நம் தொழில் பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அனைவருக்கும் நம் வலைதள முகவரி தெரிவதற்கு பல மாதங்கள் ஆகலாம். அதனால், நம் வலைத்தளத்தை பற்றி மற்ற வலைத்தளங்கள் அவர்களுக்கு தெரிவித்தால் இன்னும் வேகமாக அனைவரிடமும் சென்று சேரும். இவைதான் டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் back link என்று அழைக்கப் படுகின்றன.
இந்த தொடரின் தொடக்கத்தில் ON Page Seo பார்த்தோம். அதில் மற்றொன்று OFF Page Seo ஆகும். Back-link முழுவதும் இந்த OFF Page Seo வை குறிக்கும். அதாவது, OFF Page Seo என்பது Back-Link உருவாக்குவதை குறிக்கிறது. நிறைய வலைத்தளங்கள் நம் தொழில் வலைத்தளத்தை விளம்பரம் செய்ய உள்ளன. அவற்றில் நம் வலைத்தளத்தை பற்றி குறிப்பிடலாம். நம் தொழில் மற்றும் பொருட்களை பற்றி PPT உருவாக்கி அவற்றை பதிவேற்றலாம்.
சான்றாக, www.slideshare.net என்ற வலைத்தளத்தில் உங்கள் தொழில் பற்றிய செய்திகளை PowerPoint(PPT) ஆக வெளியிட்டால் வாடிக்கையாளர்கள் கூகுள் வழியாக நம் பொருட்களை தேடினால் அதில் நம் வலைத்தளம் வரலாம் அல்லது நாம் பதிவு செய்துள்ள ppt யம் அவர்களுக்கு தெரியலாம்.
உங்கள் தொழில் பற்றி சிறிய வீடியோ ஒன்றை எடுத்து அவற்றை வீடியோ வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள். https://www.youtube.com போன்ற சில வலைத்தளங்கள் நிறைய உள்ளது. உங்கள் தெரிந்தவர் வலைபூக்களில்(blogspot), வலைத்தளத்தில் (Website) உங்கள் வலைத்தளத்தை பற்றி அவர் எழுதினால் அதன் மூலம் அவரின் நட்பு வட்டாரங்களுக்கு உங்கள் வலைத்தளம் அறிமுகமாகும் இவற்றை guest posting என்று டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் அழைப்பார்கள். உங்கள் தொழில் பற்றிய நம்பகத்தன்மை அதிகமாகும் guest posting மூலம்.
நீங்களே ஒரு வலைப்பூ(Blogger) உருவாக்கி அதில் தொடர்ந்து உங்கள் தொழில், நிகழ்ச்சிகள், புதிய பொருட்கள் அறிமுகம், வாடிக்கையாளர் கருத்துக்கள் போன்றவற்றை தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் இணையத்தில் உங்கள் தொழில் பற்றிய செய்திகள் பரவலாக இருக்கும்.
உங்கள் தொழில், பொருட்கள் பற்றி சிறு கட்டுரை எழுதி அவற்றை www.freeprwebdirectory.com போன்ற article submision வலைதளத்தில் பதிவேற்றலாம். இதுபோல் நிறைய வலைத்தளங்கள் உள்ளது. Top 10 article submission website என்று கூகுளில் தேடினால் நிறைய உங்கள் பார்வைக்கு வரும் அதில் சிலவற்றை தேர்ந்து எடுத்து பதிவேற்றுங்கள்.
நமக்கு தெரியாத விடைகளை நாம் கூகுளில் தேடி தெரிந்து கொள்வோம். நமக்கு தோன்றும் கேள்விகளை நீங்கள் www.quora.com போன்ற கேள்வி பதில் வலைத்தளத்தில் கேட்டால் பதில் தெரிந்தவர்கள் அதற்கு பதில் சொல்வார்கள். அதனால், நீங்கள் quora வலைத்தளத்தில் ஒரு கணக்கு தொடங்கி உங்கள் தொழில் சார்ந்து யாராவது கேள்வி கேட்டிருந்தால் அதற்கு பதில் சொல்லி உங்கள் வலைத்தளத்தை அதில் பதிவிட்டால் கேள்வி கேட்டவர் அதை படித்து அதை தெடர்ந்து உங்கள் வலைதளம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இது போன்ற வலைத்தளத்தை கவனியுங்கள். Image share செய்வதற்கு சில வலைத்தளங்கள் (social Media) உண்டு. சான்று, www.pinterest.com போன்ற படங்கள் பதிவேற்றும் வலைத்தளத்தில் உங்கள் பொருட்கள், தொழில் தொடர்பான படங்களை பதிவிட்டால் வாடிக்கையாளர்கள் அவற்றை பின்பற்றி உங்கள் வலைத்தளத்திற்கு வருவார்கள்.
இதே போல் Bookmark submission, Document Sharing, Classified Submission போன்று நிறைய வலைத்தளங்கள் உண்டு அவற்றில் எல்லாம் உங்கள் தொழில் செய்திகள், படங்கள் என்று தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வாருங்கள். சில மாதங்கள் பிறகு இணையத்தில் பரவலாக உங்கள் தொழில் மற்றும் வலைத்தளம் பற்றிய செய்திகள் இருக்கும்.
வாடிக்கையாளர் உங்கள் பொருட்களை கூகுளில் தேடினால் இவற்றில் ஏதாவது ஒன்று அவர்கள் பார்வைக்கு வரும். அதன் மூலம் அவர்கள் உங்கள் பொருட்களை வாங்கலாம், வலைத்தளத்தை பார்வை இடலாம், உங்கள் தொழில் செயல்பாடுகள் அவர்களுக்கு சுலபமாக தெரியவரும்..
மேலே உள்ள அனைத்தும் மற்றவர்கள் வலைதளத்தில் நம் தொழில் பற்றி செய்திகள் பதிவு செய்வது ஆகும். அதனால் நமக்காக அந்த வலைத்தளங்கள் நம் தொழில் பற்றி மற்றவர்களுக்கு வழங்கும். இவைதான் backlink என்று டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய விரும்புவோர்கள் கண்டிப்பாக உங்கள் தொழில் பற்றி இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் பதிவு செய்யுங்கள். நாளடைவில் இணையம் எங்கும் உங்கள் தொழில் நிறைந்து இருக்கும்..
– செழியன்.ஜா