பல்வேறு குறைந்த திட்ட செலவுகளிலான சந்தைப்படுத்தல் உத்திகள் நம்முடைய திட்ட செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தாது. ஆனால், அவை நம்முடைய கவனத்தை ஈர்க்கும். மேலும், இதற்காக நம்முடைய நிறுவனத்தின் நிதியை மிகத்திறனுடனும், சிக்கனமான வழிகளிலும் பயன்படுத்தலாம். அதைவிட, சந்தைப்படுத்தலுக்காக எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்கின்றோம் என்பது முக்கியம் அன்று. ஆயினும், அதே அளவு திட்ட நிதியை எவ்வளவு கால அளவிற்கு நீட்டிக்க முடியும் என திட்டம் இடலாம். அவ்வாறான சிறிய வணிக நிறுவனங்களால் செயல்படுத்தக் கூடிய மிகச்சிறந்த குறைந்த செலவில் சந்தைப்படுத்துதலுக்கான ஆலோசனைகள் பின்வருமாறு,
தற்போது, வியாபார உலகில் உள்ள எந்தவொரு நிறுவனமும் தமக்கென தனியாக இணைய பக்கங்களை வைத்துக் கொள்ளாமல் செயல்பட முடியாது என்ற மேம்பட்ட நிலையில் இயங்கி வருகின்றன. பெரிய நிறுவனங்கள் எனில் அவ்வாறு தமக்கென தனியாக இணையபக்கங்களை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என உருவாக்கி பராமரித்து கொள்ளமுடியும். சிறிய நிறுவனங்கள் அவ்வாறு அதிக செலவிட அந்நிறுவனங்களின் பொருளாதார நிலை இடம் கொடுக்காது. அதனால், சிறிய நிறுவனங்கள்கூட குறைந்த செலவில் அவ்வாறான இணைய பக்கங்களை நிறுவுகை செய்து பராமரிக்கலாம். அதாவது, இணையபக்கங்களில் தம்முடைய வியாபார நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பிளாக் என்பதன் வாயிலாக வழங்குவதற்காக பணியாளர்களை தனியாக நியமனம் செய்து தினமும் பல்வேறு செய்திகளை வெளியிடுவார்கள். அதற்கு பதிலாக, வெளியில் இருந்து ஒப்பந்த பணி (Outsource) பயன்படுத்தி தம்முடைய நிறுவனத்தை பற்றிய செய்திகளை கூறும். அதேபோன்ற பிளாக்கை வெளியிடும் பணியை செயல்படுத்தி செலவினை குறைத்து கொள்ளலாம்.
தற்போது, காணொளி காட்சியின் வாயிலாக தம்முடைய நிறுவனங்களை பற்றி விவரங்களை சந்தை படுத்துவதற்காக யூடியூப் எனும் இணையதள பக்கத்தின் இணைப்பினை வழங்கி வாடிக்கையாளர்களை தம்முடைய இணைய பக்கங்களில் இருந்து அங்கு செல்லுமாறு அந்த நிறுவனங்கள் திசை திருப்பி விடுகின்றன. இது சரியான வழிமுறையன்று. இதற்கு பதிலாக, கட்டற்ற பயன்பாடுகளின் துணையுடன் இதே காணொளி காட்சி வாயிலாக சந்தைபடுத்துதல் நடவடி க்கைகளை பதிவுசெய்து நம்முடைய இணைய பக்கங்களிலேயே வெளியிடுவது நன்று.
பக்கம் பக்கமாக எழுத்துகளின் மூலமான விளக்க உரையைவிட தம்முடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை பற்றிய விவரங்களை வரைகலை படத்தின் வாயிலாக நுகர்வோர்களை காட்சி படங்களாக காணுமாறு செய்வது, எளிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அதனால், உரைவடிவிலான விளக்கத்திற்கு பதிலாக விளக்க வரைகலையை பயன்படுத்தி அதிலும் பொம்மை வரைகலை விளையாட்டுகளின் வாயிலாக நிறுவனத்தை பற்றிய போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக கூட்டி கட்டணமற்ற மாதிரி பொருட்களுடன், கட்டணமற்ற சேவைகளுடன் விருந்து
உடன் சேர்த்து வழங்குவது எனும் நடைமுறையானது இந்நிறுவனம் எளிதாக நம்முடைய கோரிக்கையை நிறைவேற்று கின்றார்கள் என்ற மனநிலையை வாடிக்கையாளர்களின் மனதில் உருவாக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளியில் அரசு அல்லது முகமைகள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு பரிசுப்போட்டி நடத்துவார்கள். அதில், கண்டிப்பாக கலந்து கொண்டு பரிசுகளை நம்முடைய உற்பத்தி பொருள் அல்லது சேவையானது வெற்றி பெறும்போது இலவச விளம்பரமாக தானாகவே அந்த பரிசுப்போட்டியின் நம்முடைய வெற்றி செய்தியானது நம்முடைய உற்பத்தி பொருள் அல்லது சேவைக்கு கிடைக்கின்றது.
– முனைவர். ச. குப்பன்